விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

131.     ஒழுக்கம்   விழுப்பந்   தரலான்   ஒழுக்கம்  
உயிரினும் ஓம்பப்     படும்.

132.     பரிந்தோம்பிக்    காக்க ஒழுக்கம்   தெரிந்தோம்பித் 
தேரினும்  அஃதே     துணை.

133.     ஒழுக்கம்   உடைமை  குடிமை    இழுக்கம்  
இழிந்த    பிறப்பாய்  விடும்.

134.     மறப்பினும் ஓத்துக்    கொளலாகும்    பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக்    கெடும்.

135.     அழுக்கா   றுடையான்கண்  ஆக்கம்போன்று  இல்லை  
ஒழுக்க    மிலான்கண்     உயர்வு.

136.     ஒழுக்கத்தின்    ஒல்கார்    உரவோர்   இழுக்கத்தின்   
ஏதம் படுபாக்    கறிந்து.

137.     ஒழுக்கத்தின்    எய்துவர்   மேன்மை  இழுக்கத்தின்   
எய்துவர்   எய்தாப்    பழி.

138.     நன்றிக்கு  வித்தாகும் நல்லொழுக்கம்  தீயொழுக்கம்   
என்றும்    இடும்பை  தரும்.

139.     ஒழுக்க    முடையவர்க்கு  ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயாற்    சொலல்.

140.     உலகத்தோடு    ஒட்ட ஒழுகல்    பலகற்றும்
கல்லார்    அறிவிலா  தார்


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்