விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, May 31, 2011

மனஅழுத்தம்

 மன அழுத்தம் உளவியல் ஆலோசனை சென்னை

இந்த அவசர யுகத்தில் பலருக்கும் பலவிதமான டென்ஷன். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு, குடும்ப பிரச்னை மட்டும் உள்ளதென்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, அலுவலகப் பிரச்னைகளும் சேர்ந்து, இரட்டை சுமையாகிறது. இதனால், மனஅழுத்தம் உண்டாகி, அது பலவித வியாதிகளுக்கு வழிவகுக்கிறது.

இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

இதோ சில டிப்ஸ்...

யோகா செய்யுங்கள்:
  • தியானம் செய்யுங்கள். குறைந்தது 20 நிமிடமாவது தியானம் செய்யப் பழகுங்கள். இது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்; மனம் பக்குவப்படும். தியானம் செய்ய, முறையான பயிற்சி தேவை. முறையான ஆசிரியரிடம் பயின்று யோகா செய்யுங்கள்.
நல்ல இசையை கேளுங்கள்:
  • உங்களுக்கு பிடித்தமான மெல்லிய இசையை கேளுங்கள். இது டென்ஷனிலிருந்து, உங்களை விடுவிக்க உதவும். சோர்ந்த மனதை சுறுசுறுப் பாக்க, இசை உதவுகிறது. நல்ல மென்மையான இசை டென்ஷனை குறைக்கிறது. நம் நரம்புகள் விரைத்துப் போய் உடல் கல்லாக ஆகிவிடும் போது, இசை அதை கனிய வைக்கிறது.
வாரம் ஒரு முறை வெளி இடங்களுக்கு செல்லுங்கள்:
  • அலுவலகம் செல்லும் பெண்கள், ஒரு நாளும் ஓய்வில்லாமல், வீட்டு வேலை, அலுவலக வேலை என மாற்றி மாற்றி பார்த்து அலுத்து விடுவீர்கள். விடுமுறை தினத்தை ரிலாக்சாக, மனதுக்கு பிடித்த வகையில் செலவிடுங் கள். அன்றைக்கும் வீட்டு வேலையே கதி என்று இருந்துவிட்டால், மனம் அமைதி இல்லாமல் தவிக்கும். ஓய்வு தினத்தில் சிறிது நேரமாவது வெளியிடங்களுக்கு சென்று மனதை "ரிலாக்ஸ்' செய்யுங்கள். மனது புத்துணர்வுடன் இருந்தாலே நாம் சுறுசுறுப்பாக எவ்வித நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

உணவில் கவனம் தேவை:

  • உணவில் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறாமல் உண்பது மிகவும் அவசியம். அது, சத்தான உணவாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளே, நாம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
பாசிடிவ் திங்கிங்:
  • எதிலும், "பாசிடிவ் திங்கிங்' வேண்டும். அப்போது தான், உங்களால் எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். எதிர்மறையான எண் ணங்கள் உங்களை கோழையாக்கிவிடும்.
பதற்றம் வேண்டாம்:
  • ஒவ் வொரு விஷயத்திற்கும் பெண்கள் மிகுந்த பதற்றம் அடைவர். பதற்றம் அடையும் போது மன அழுத்தம் அதிகரிப்பதோடு செய்ய நினைத்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாது. இதனால், வீட்டிலும், அலுவலகத்திலும் கெட்ட பெயர் வாங்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும். அதைத் தவிர்க்க, எதிலும் பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்படுவது நல்லது.
திட்டமிடுதல் அவசியம்:
  • எந்த வேலையையும் செய்யத் துவங் கும் முன், திட்டமிடுதல் அவசியம். திட்டமிட்டால் மட்டும் போதாது; திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிக்க வேண்டும். திட்டமிட்டபடி வேலை செய்து முடித்தால், கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான்.
 டிப்ரசன் கவுன்சிலிங் சென்னை



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்