விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, September 6, 2016

விந்து -Semen, Low Sperm count


 low sperm count treatment chennai, velacheri



விந்து
விந்து விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.

ஒரு விந்தணு மூன்று பாகங்களைக் கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது. விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும். விதையிலிருந்து புறப்படும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள வாஸ்டெபரன்ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம் தான் ஆண் கருத்தடை செய்யப்படுகிறது.

இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பையின் பின் புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.

விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் பிறப்பு உறுப்பின் உள் விரைவாக கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு முறை வெளியாகும் விந்து ஒரு தேக்கரண்டி அளவு (5  மில்லி) ஆகும். ஒரு மில்லி மீட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.

ஒருவன் ஒரு முறை செலுத்தும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?


விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல் ஒட்டக்கூடிய வழவழப்பான திரவம் அது வெளியாகும் போது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும். அதில் தண்ணீர், சளி போன்ற திரவம், ரசாயானப் பொருட்கள், (விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம்.) ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: Suresh - 28 – 99******00 – Low Sperm Count, Azoospermia, No Sperm in Semen – 20-12-2016 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்