விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, April 11, 2014

விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள். கேள்வி - பதில்



 விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள்.




விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள்.

கேள்வி: கர்ப்பம் தரிக்க மிக முக்கியமான விஷயம் என்ன டாக்டர்?
பதில்: கர்ப்பமாக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.

கேள்வி: கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?
பதில்: கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி: இந்த 22- 26 வயதுகளில் இல்லை எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா?
பதில்: அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,
91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,
84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,
64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

மேலே கூறியவை பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு பற்றியது தானே தவிர, குழந்தைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்பது பற்றி சொல்ல முடியாது.


கேள்வி: ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?
பதில்: இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல.
இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும். ஆண்கள் பற்றிய  ஒரு சர்வே புள்ளி விவரம் இதோ:

20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

40–69 வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

கேள்வி: நான் கர்ப்பமாக விரும்பும்போது என்ன செய்ய வேண்டும்?
பதில்: எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பல்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலேஷன் (Ovulation) என்று பெயர். இவ்வாறு கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பல்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (Sperm) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

கேள்வி: உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?
பதில்: உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலேஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.

கேள்வி: முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?
பதில்: உங்களுக்கு இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

ü  உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

ü  மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (Belly Cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (Spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.

ü  முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம்.

ü  உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள்.

ü  இது தவிர Ovulation Testing Kits போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறுநீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.

கேள்வி: நான் கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்?
பதில்: உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (Baby Oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள். இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினைக்கும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொள்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

கேள்வி: எந்த முறையில் உடலுறவு கொண்டால் எளிதாக கருத்தரிக்கலாம்?
பதில்: எந்த ஒரு குறிப்பிட்ட முறையில் உடலுறவு கொண்டால், கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளதற்கான அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை. வழக்கமான உடலுறவு நிலை, அதாவது, ஆண் மேலே படுத்து பெண் கீழே படுத்து உடல் உறவு கொண்டாலே போதுமானது.

கவனிக்க
கர்ப்பம் தரிப்பது சற்று பயமாக இருக்கலாம், ஆனால் கர்ப்ப காலம் என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். இங்கே தரப்பட்டுள்ள பட்டியலையும், நாள்காட்டியையும் உபயோகித்து உங்கள் மாதவிடாயையும், முட்டை வெளியீட்டையும் கணக்கெடுத்து கொள்ளுங்கள். கருத்தடை சாதனங்களை நீங்கள் உபயோகப் படுத்தினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். கருத்தடை மாத்திரைகளோ, அல்லது காப்பர் டி (Copper-T) போன்றவை உபயோகித்தால், ஒரு நல்ல மருத்துவரை அணுகி எத்தனை நாள் கழித்து கருத்தரிக்கலாம் என்று கலந்து ஆலோசியுங்கள். அதே போல மேலே சொன்ன சாதனங்களை நிறுத்திய பிறகு, உங்களுக்கு சீரான மாதவிடாய் வரும் வரை காத்திருந்து, பின் கருத்தரிக்க முயலுங்கள்.

வாழ்த்துகள்




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்