விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, April 16, 2014

மூல நோய் சிகிச்சையும் விளக்கமும் தமிழில் - Piles Treatment in Tamil moolam noi tamil villakam மூலம் தமிழில் விளக்கமும் சிகிச்சையும்
மூல நோய்
மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் இரத்த நாள வீக்கமே மூல நோய் எனப்படுகிறது. இது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
1-உள் மூலம் (உள் மூலம் என்பது ஆசன வாயின் உட்பகுதியில் ஏற்படும் இரத்த நாள வீக்கமாகும்.)
2-வெளி மூலம் (வெளி மூலம் என்பது ஆசன வாயின் வெளிப்பகுதியில் ஏற்படும் வீக்கமாகும்)
வெளி மூலத்தை விரல்களால் தொட்டு உணர முடியும், உள் மூலத்தை அறிகுறிகள் மூலமாகவும், மருத்துவரின் உதவியுடன் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

மூல நோய்க்கான காரணங்கள்
மலக்குடலில் ஏற்படும் அதிக அழுத்தமே மூலத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
 • நாட்பட்ட மலச்சிக்கல்,
 • நீண்ட நேரம் ஒரே இட்த்தில் அமர்ந்து வேலை செய்தல்,
 • மலம் கழிக்க முக்குதல்,
 • நீண்ட நாள் வயிற்றுபோக்கு,
 • ஆசன வாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள்.
 • அதிக காரம், அசைவம் மற்றும் மசாலா கலந்த உணவுகளை அதிகம், அடிக்கடி உட்கொள்ளுதல்,
போன்றவைகள் மலக்குடல் அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது.
கருவுற்ற பெண்களுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும், அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கும் மூலநோய் அதிகமாக வருகிறது. உடல் எடை அதிகரித்தாலும் மூல நோய் வரலாம்.
                                                                                 
அறிகுறிகள்
Ø  வலியுடன் மலம் கழித்தல்
Ø  மலத்துடன் இரத்தம் சேர்ந்து வருதல்
Ø  மலம் கழிக்கும் போதும் கழித்த பிறகும் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி.
Ø  ஆசனவாயில் அரிப்பு,
Ø  பட்டாணி அளவிற்கோ அல்லது அதற்கு மேலோ மலக்குடல் வெளித்தள்ளுதல்,
Ø  சிலருக்கு வலி, எரிச்சலின்றி இரத்தம் மட்டும் அதிகம் போகும்.

மூல நோய் வராமல் தடுக்கும் முறைகள்
ü  மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் முடிந்த அளவு சீக்கிரம் மலம் கழிக்கவும்.
ü  மலத்தை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்கக்கூடாது.
ü  அதிகப்படியான காரம், மசாலா, அசைவ உணவு வகைகளை தவிர்கவும்.
ü  தண்ணீர் நிறைய குடிக்கவும்,
ü  நார்சத்து மிகுந்த உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ளவும்.
ü  நீண்ட நேரம் ஒரே இட்த்தில் அமர்வதை தவிர்க்கவும்.

வீட்டு வைத்திய முறைகள்
 • தினம் ஒரு பழம் என்ற பழக்கம் மூலநோய்க்கு முடிவுகட்டும்.
 • பிரண்டை இஞ்சி துவயல் பலனலிக்கும்.
 • கருனை கிழங்கு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
 • சிலர் நத்தை மற்றும் பன்றி இறைச்சியை உட்கொள்வார்கள், இது உடனடியாக பலனலிப்பது போல தோன்றினாலும் பிறகு நோயின் தன்மையை அதிகப்படுத்தும்.
 • வீட்டுவைத்திய முறை பலனலிக்கவில்லை என்றால் தாமதமின்றி மருத்துவ ஆலோசனை பெறவும்.

மருத்துவ சிகிச்சைகள்
ஆங்கில மருத்துவ முறையில் பொதுவாக அறுவை  சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். ஆனால் அறுவைசிகிச்சைக்கு பிறகும் மூலம் வர வாய்ப்புண்டு. எனவே முதலில் மருந்துகள் மூலம் குணமடைய முயற்ச்சிக்க வேண்டும். ஆசன வாய் வெளித்தள்ளியபடி இருந்தால் அறுவை சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

ஹோமியோபதியில் மூலத்திற்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. நோயின் அறிகுறிகளுக்கேற்ப்ப Aesculus Hip, Aloes Soc, Hamamellis, Millifolium, Senna, Acid Nit, Acid Mur போன்ற ஹோமியோபதி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியும்.

சிகிச்சையின் போதும் சிகிச்சை முடிந்த பிறகும் அதிகப்படியான காரம், மசாலா, அசைவ உணவு வகைகள், தவிர்க்க வேண்டும்,

தண்ணீர் நிறைய அருந்த வேண்டும், அதிக காய்கறிகள், பழங்கள் உட்கொள்ள வேண்டும், நார் சத்து அதிகமுள்ள வாழைத்தண்டு, கீரைகளை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம். ஹோமியோபதி மருந்துகள் உட்கொள்ளும் போது காபி, டீ, மதுவகைகள் தவிர்த்தல் நல்லது.

தகுதிவாய்ந்த ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் பூரண குணமடைவது உறுதி.

மரு.செந்தில் குமார் தண்டபானி.,B.H.M.S.,M.D(Alt Med).,M.Phil(Psy)
ஹோமியோ & மனநல ஆலோசகர்
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
கைபேசி: 9786901830


==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்