கண்
தானம்
- உயிருடன் உள்ள ஒருவர் கண் தானம் செய்ய
முடியாது.
- கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம்
(இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள்
தானம் செய்யலாம்
- ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்கள் எடுக்கப்படும்.
- இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
- மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
- கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல்
உறவினர்களிடம் அளிக்கப்படும்
- எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த
நபருக்கு பொருத்தப்படும்
- தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின்
இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பலன்
: விழித்திரை
நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பார்வை கிடைக்கும்.
---