விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, April 25, 2014

வயிற்றுப்புண், தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி நீங்க எளிய முறை வீட்டு வைத்தியங்கள்





    வாந்தி, பித்தம் தீர :-  • எலுமிச்சம் பழச்சாற்றை 3 மில்லி அளவு சாப்பிடவும்.  தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :-  • கொத்தமல்லி விதை வறுத்துப் பொடி செய்து கசாயம் செய்து காலை, மாலை 2 வேளை 1 டம்ளர் அளவு சாப்பிட தீரும்.  • வாகனப் பயணத்தின்போது வாந்தி வராமல் இருக்க, எலுமிச்சைப் பழம் அல்லது மல்லிகைப் பூவை அடிக்கடி முகரலாம்.  • துளசிச் சாறு, கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.  தீராத வாந்தி நிற்க!  • "சதகுப்பை" என்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிரண்டாய்ப் பொடித்து, பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் பனங்கற்கண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.   பித்தம், வாந்தி, நெஞ்சு கறிப்பு வயிற்று வலி இவற்றிற்கு:- • இஞ்சியை -100 கிராம் எடுத்து அதன் மேல் உள்ள தோலை அகற்றி சுத்தம் செய்துவிட்டு, இஞ்சியை சிறு துண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி காயவைக்கவேண்டும். நன்கு காய்ந்ததும் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும்போது ஒரு டீஸ்பூன் பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனால் நெஞ்சுகறிப்பு பித்தம், வயிற்றுவலி, குணமாகும். சாதாரணமாக குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒரு கைகண்ட மருந்தாகும்.   வாயுத்தொல்லை, பசியின்மை:  • வாயுத்தொல்லை, பசியின்மை, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு கற்றாழைச் சாற்றை உட்கொண்டால் நலம் பெறலாம். ஒரு தேக்கரண்டி (5 மி.லி) கற்றாழைச் சாற்றினை நாளுக்கு 3 முறை உட்கொள்ள வேண்டும். (குறிப்பாக வெறும் வயிற்றில்) கசப்புத் தன்மையைக் குறைக்க அதனுடன் சிறிது உப்பு சேர்க்கலாம்.   வாயு தொல்லை  • வாயு தொல்லை நீங்க ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து குடித்தால், வாயு தொல்லை இனி இல்லை.. • சோயா பீன்ஸ், மற்றும் சோயா பொருட்கள் கான்சரை தடுப்பதோடு மட்டுமல்லாமல், இதய் நோய்கள், எலும்பு சீர்கேடுகளையும் சரி செய்கிறது. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் நிலை மாறுதல்களுக்கும், எலும்பு தேய்வு இவற்றுக்கும் மருந்தாகவும் சோயா உதவுகிறது.  • வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.  • வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் இரண்டையும் நெய்யில் சிவக்க வறுத்து, சிறிது புளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து துவையலாக்கி வைத்துக்கொண்டு, உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள் விலகும்.   பசியின்மை நீங்க: • துளசி விதைப்பொடி, திப்பிலிப் பொடி இவைகளை சம அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டுவர பசியின்மை நீங்கி நல்ல பசி உண்டாகும்.  • பசியில்லாததால் சாப்பிடப் பிடிக்காமல் அவதிப்படுவோர், கிராம்பு, நிலவேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஒன்றை தேவையான அளவு நீரில் போட்டு, நன்கு காய்ச்சி, கஷாயமாக்கி குடித்துவர நன்கு பசி எடுக்கும்.  • நில வேம்பை கஷாயம் வைத்துக் குடிக்க நன்கு பசியெடுக்கும்.   வயிற்றுக்கடுப்பு நீங்க:-  • வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுக்கடுப்பு நீங்கும்.  • வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும் .  வயிற்றுப் பூச்சி வெளியேற:-  • மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தித் தூள் செய்து தேனில் குழைத்துக் கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.   வயிற்றுப் போக்கு : • சுண்டைக்காய் அளவு ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால் எப்படிப்பட்ட வயிற்றுப் போக்கும் நின்றுவிடும். • தயிர், வெந்தயம், சர்க்கரை மூன்றையும் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.  அஜீரணம்  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.  • வெந்நீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும். பசியும் எடுக்கும். ஆனால் வெந்நீரில் குளிக்க வேண்டாம். நரம்புக் கோளாறுகள் ஏற்படும்! தினமும் வெந்நீரில் குளிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் சொல்கின்றனர்!   வயிற்று வலி  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.   நாடாப் புழு வெளியேற:-  • கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரைத் தட்டிப்போட்டு சுண்டக்காய்ச்சி தினமும் 1/2 கப் உட்கொண்டு வர வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் வெளியேறும்.   சீதபேதி • கீழாநெல்லி இலைகளைக் கொண்டு வந்து தண்¬ர்விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கசாயம் இறக்கி அந்த கசாயத்தை ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் வீதம் எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.  • சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.  • மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.  மலச்சிக்கல் நீங்க:-  • மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிட வேண்டும்.  • அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்த மலச்சிக்கல் நீங்கும்  • செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.   குடல்புண் குணமாக:  • அகத்திக்கீரை நல்ல நிவாரணம்.  • மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும்.  • மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.   நுரையீரல் நோய் குணமாக:- • நாயுருவிச் செடியின் விதைகளை இடித்துப் பொடி செய்து உட்கொண்டால் நுரையீரல்நோய்கள் குணமாகும்.   நீரிழிவு நோய் குணமாக:-  • இதன் தீவிரத்தை குறைக்க வாழைத்தண்டை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.   சிறுநீர் அடைப்பு: • வெள்ளரிக்காய் விதையை அரைத்து அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டி, அதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால் `சிறுநீர் அடைப்பு' நீங்கும்!      குறிப்பு இவை எல்லாம் முதலுதவி போன்ற வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.   ==--==




வாந்தி, பித்தம் தீர :-
  • எலுமிச்சம் பழச்சாற்றை 3 மில்லி அளவு சாப்பிடவும்.

தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :-
  • கொத்தமல்லி விதை வறுத்துப் பொடி செய்து கசாயம் செய்து காலை, மாலை 2 வேளை 1 டம்ளர் அளவு சாப்பிட தீரும்.
  • வாகனப் பயணத்தின்போது வாந்தி வராமல் இருக்க, எலுமிச்சைப் பழம் அல்லது மல்லிகைப் பூவை அடிக்கடி முகரலாம்.
  • துளசிச் சாறு, கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

தீராத வாந்தி நிற்க!
  • "சதகுப்பை" என்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிரண்டாய்ப் பொடித்து, பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் பனங்கற்கண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.

பித்தம், வாந்தி, நெஞ்சு கறிப்பு வயிற்று வலி இவற்றிற்கு:-
  • இஞ்சியை -100 கிராம் எடுத்து அதன் மேல் உள்ள தோலை அகற்றி சுத்தம் செய்துவிட்டு, இஞ்சியை சிறு துண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி காயவைக்கவேண்டும். நன்கு காய்ந்ததும் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும்போது ஒரு டீஸ்பூன் பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனால் நெஞ்சுகறிப்பு பித்தம், வயிற்றுவலி, குணமாகும். சாதாரணமாக குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒரு கைகண்ட மருந்தாகும்.

வாயுத்தொல்லை, பசியின்மை:
  • வாயுத்தொல்லை, பசியின்மை, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு கற்றாழைச் சாற்றை உட்கொண்டால் நலம் பெறலாம். ஒரு தேக்கரண்டி (5 மி.லி) கற்றாழைச் சாற்றினை நாளுக்கு 3 முறை உட்கொள்ள வேண்டும். (குறிப்பாக வெறும் வயிற்றில்) கசப்புத் தன்மையைக் குறைக்க அதனுடன் சிறிது உப்பு சேர்க்கலாம்.

வாயு தொல்லை
  • வாயு தொல்லை நீங்க ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து குடித்தால், வாயு தொல்லை இனி இல்லை..
  • சோயா பீன்ஸ், மற்றும் சோயா பொருட்கள் கான்சரை தடுப்பதோடு மட்டுமல்லாமல், இதய் நோய்கள், எலும்பு சீர்கேடுகளையும் சரி செய்கிறது. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் நிலை மாறுதல்களுக்கும், எலும்பு தேய்வு இவற்றுக்கும் மருந்தாகவும் சோயா உதவுகிறது.
  • வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
  • வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் இரண்டையும் நெய்யில் சிவக்க வறுத்து, சிறிது புளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து துவையலாக்கி வைத்துக்கொண்டு, உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள் விலகும்.

பசியின்மை நீங்க:
  • துளசி விதைப்பொடி, திப்பிலிப் பொடி இவைகளை சம அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டுவர பசியின்மை நீங்கி நல்ல பசி உண்டாகும்.
  • பசியில்லாததால் சாப்பிடப் பிடிக்காமல் அவதிப்படுவோர், கிராம்பு, நிலவேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஒன்றை தேவையான அளவு நீரில் போட்டு, நன்கு காய்ச்சி, கஷாயமாக்கி குடித்துவர நன்கு பசி எடுக்கும்.
  • நில வேம்பை கஷாயம் வைத்துக் குடிக்க நன்கு பசியெடுக்கும்.

வயிற்றுக்கடுப்பு நீங்க:-
  • வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
  • வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும் .

வயிற்றுப் பூச்சி வெளியேற:-
  • மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தித் தூள் செய்து தேனில் குழைத்துக் கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.

வயிற்றுப் போக்கு :
  • சுண்டைக்காய் அளவு ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால் எப்படிப்பட்ட வயிற்றுப் போக்கும் நின்றுவிடும்.
  • தயிர், வெந்தயம், சர்க்கரை மூன்றையும் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.

அஜீரணம்
  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
  • வெந்நீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும். பசியும் எடுக்கும். ஆனால் வெந்நீரில் குளிக்க வேண்டாம். நரம்புக் கோளாறுகள் ஏற்படும்! தினமும் வெந்நீரில் குளிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் சொல்கின்றனர்!

வயிற்று வலி
  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

நாடாப் புழு வெளியேற:-
  • கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரைத் தட்டிப்போட்டு சுண்டக்காய்ச்சி தினமும் 1/2 கப் உட்கொண்டு வர வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் வெளியேறும்.

சீதபேதி
  • கீழாநெல்லி இலைகளைக் கொண்டு வந்து தண்¬ர்விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கசாயம் இறக்கி அந்த கசாயத்தை ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் வீதம் எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
  • சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.
  • மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

மலச்சிக்கல் நீங்க:-
  • மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிட வேண்டும்.
  • அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்த மலச்சிக்கல் நீங்கும்
  • செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

குடல்புண் குணமாக:
  • அகத்திக்கீரை நல்ல நிவாரணம்.
  • மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும்.
  • மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

நுரையீரல் நோய் குணமாக:-
  • நாயுருவிச் செடியின் விதைகளை இடித்துப் பொடி செய்து உட்கொண்டால் நுரையீரல்நோய்கள் குணமாகும்.

நீரிழிவு நோய் குணமாக:-
  • இதன் தீவிரத்தை குறைக்க வாழைத்தண்டை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

சிறுநீர் அடைப்பு:
  • வெள்ளரிக்காய் விதையை அரைத்து அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டி, அதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால் `சிறுநீர் அடைப்பு' நீங்கும்!





குறிப்பு
இவை எல்லாம் முதலுதவி போன்ற வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.




==--==


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்