விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -ஆள்வினையுடைமை


611.     அருமை   உடைத்தென்று   அசாவாமை     வேண்டும் 
பெருமை   முயற்சி   தரும்.

612.     வினைக்கண்    வினைகெடல்    ஓம்பல்    வினைக்குறை  
தீர்ந்தாரின் தீர்ந்தன்று  உலகு.

613.     தாளாண்மை     என்னும்   தகைமைக்கண்  தங்கிற்றே
வேளாண்மை    என்னுஞ்   செருக்கு.

614.     தாளாண்மை     இல்லாதான்     வேளாண்மை    பேடிகை  
வாளாண்மை    போலக்    கெடும்.

615.     இன்பம்    விழையான்     வினைவிழைவான்    தன்கேளிர்
துன்பம்    துடைத்தூன்றும்  தூண்.

616.     முயற்சி   திருவினை ஆக்கும்    முயற்றின்மை  
இன்மை   புகுத்தி    விடும்.

617.     மடியுளாள் மாமுகடி   என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி  னாள்.

618.     பொறியின்மை   யார்க்கும்  பழியன்று  அறிவறிந்து    
ஆள்வினை இன்மை   பழி.

619.     தெய்வத்தான்    ஆகா தெனினும் முயற்சிதன்    
மெய்வருத்தக்   கூலி தரும்.

620.     ஊழையும்  உப்பக்கம்  காண்பர்    உலைவின்றித்  
தாழாது    உஞற்று   பவர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்