விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Sunday, January 22, 2012

பரோட்டா பாய்ஸன்



தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை ,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு. விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது. பரோட்டா மட்டும் அல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிக்கிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சோயில் பெரோக்சைட் (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம்,  இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக கலக்கப்டுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .




---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்