விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, March 20, 2012

How to make corn soup? மக்காச்சோளத்தில் சூப் தயாரிப்பது எப்படி








மக்காச்சோளம்(Corn) என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவுப் பொருள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு சில குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.. ஒரு சில குழந்தைகள் மக்காச்சோளம் என்றாலே ஏதோ வெறுக்கத்தக்க ஒன்றை பார்த்துவிட்டதைப் போல தூர ஓடிவிடுவார்கள்.

இதையே அவர்களுக்குப் பிடித்தமாதிரி செய்துகொடுத்தால் அவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள். உடலுக்கும் ஏற்ற ஊட்டச்சத்தும்(Nutrition) கிடைக்கும்.

அனைத்து குழந்தைகளும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.  

மக்காச்சோளத்தில் சூப் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.(How to make corn soup?) 



மக்காச்சோளச் சூப் செய்வதற்கு என்னென்ன தேவை என்று முதலில் பட்டியலிட்டுவிடுவோம்.


தேவையானவை:

பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
காரட் - 2
நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்
துருவி கோஸ் - 1/2 கப்
பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
மக்காச்சோள முத்துகள் -  1/2 கப்
ஜவ்வரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு -  1/2 கப்
மிளகுத்தூள் -  1/2 டீஸ்பூன்
சர்க்கரை -  1/2 டீஸ்பூன்



செய்முறை:

வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மூன்றயும், சிறிது எண்ணெயில் வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய  காய்கறிகளுடன், மக்காச்சோளம், வெங்காய விழுது சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆனால் குழையவிடக்கூடாது.

ஜவ்வரிசி மாவை 2 கப் தண்ணீரில் கலந்து கொழகொழவென கண்ணாடி பதத்திற்கு வரும்வரை கஞ்சியாக காய்ச்சவும்.

அதனுடன் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

சூப் சற்று திக்காக இருக்க வேண்டுமானால், 1/2 டீஸ்பூன் மக்காச்சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் கலந்து கொதிக்க விடவும்.

சுவையான மக்காச்சோள சூப் தயார்.. 




















---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்