விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, November 29, 2013

சுகப்பிரசவத்திற்கு பின் எப்போது உடலுறவில் ஈடுபடலாம் - Sex after Normal Delivery

கேள்வி: மதிப்பிற்குறிய டாக்டர் அவர்களுக்கு, எனது மனைவி மூன்று மாதத்திற்கு முன் சுக பிரசவம் மூலம் குழந்தை பெற்று எடுத்தாள்.அவளுக்கு இன்னும் மாதவிலக்கு வரவில்லை. அவளோடு நான் இப்போது உடலுறவு வைத்துக் கொள்ளலாமா ? ஏதாவது கர்ப்பத்தடை முறையை பின்பற்ற வேண்டுமா? அப்படியென்றால் அதற்கு சிறந்த முறை ஆணுறையா அல்லது காப்பர் டி லூப் போடுவதா?

பதில்: உங்கள் மனைவி குழந்தைக்கு பாலூட்டுவதன் காரணமாக மாதவிடாய் ஏற்படுவது தடைப்பட்டுள்ளது. இது மருத்துவத்தில் Lactational amenorrhea என்றழைக்கப்படுகிறது. இது இயற்கையாகவே ஏற்படுத்தப்பட கருத்தடை முறையென்றாலும்  அதை நம்ப முடியாது. நீங்கள் உறவில் ஈடுபட்டால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நீங்கள் கருத்தடை முறை பின்பற்றுவது அவசியம்.

குழந்தை பிறந்த பின் எப்போது உறவில் ஈடுபட வேண்டும் என்பது உங்கள் இருவரையும் பொறுத்தது.

நீங்கள் இருவரும் மனதளவிலும் உடல் ரீதியாகவும் தயாரானால் தாராளமாக உறவில் ஈடுபட முடியும்.


ஆனால் அதற்கு முன் தகுந்த கர்ப்பத்தடை முறை பின்பற்றுவது கட்டாயம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்