கேள்வி: டாக்டர் அவர்களுக்கு, எனக்கு திருமணமாகி 18 மாதமாகிறது. நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம்?
பதில் : இது நிறைய பெண்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். நீங்களே மிக எளிதாக கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.
இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் சுழற்சி பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். நிறைய பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 நாட்களில் தொடங்கி 32 நாட்களுக்கு இடைப்பட்ட நாட்களில் ஏற்படும்.
ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து தோராயமாக பதினான்காவது நாள் அந்தப் பெண்ணிற்கு கரு முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருத்தரிப்பு நடைபெற்று குழந்தை உருவாகும்.
ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணி நேரம் வரை கருத்தரிக்கக் கூடிய நிலையில் உயிரோடு இருக்கும்.
ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு சரியான காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.
அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருத்தரிப்பு நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
==--==