
கேள்வி: எனக்கு நீண்டகாலமாக உமிழ்நீர் - வாய்நீர் (ஜொள்ளு) வடியும் வழக்கம் உண்டு. அதாவது தினமும் இரவில் தூக்கத்தின்போது எனது தலையணை என் உமிழ்நீரினால் நனைந்து விடும். காலையில் படுக்கையை விட்டு எழாமல் படுத்து இருக்கும் பட்சத்தில் எனது வாய் இந்த உமிழ்நீரினால் நிறைந்து விடும். எழுந்து பல் விளக்கிய பின்னர் எல்லாம் சரி ஆகிவிடும். பகலில் விழித்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை, பகலில் படுத்து உறங்கினால் இதே பிரச்சினை.
இந்த ஜொள்ளு நீர் சில நேரங்களில் மஞ்சளாகவும், தடிப்பாகவும், ஏதோ சில நேரங்களில் மட்டும் சிறிய துர்நாற்றத்துடனும், பல நேரங்களில் எச்சில் வடிவதைப்போலவும், சில நேரங்களில் தண்ணீர்போலவும் காணப்படும்.
கிட்டத்தட்ட 20 வயதில் இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது. அது இன்று வரை தொடர்கிறது. இடையில் ஒரு நாள் கூட நின்றதில்லை.
மது, புகைப்பழக்கம் கிடையாது.
ஓவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்சுத்தம் செய்து கொள்வேன். வேறு எந்த வியாதிகளும் இல்லாத அரோக்கியமானவன் நான். ஆனால் இந்தப் பிரச்சினை எனது மனதை வாட்டுகிறது.
திருமணம்
நிச்சயமாகியுள்ளது. திருமணமானால் எனது மனைவி அருகில் படுக்கமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சம்
உள்ளது. எனது தலையணை உமிழ்நீரால் நனைந்துவிடும். இதனால் எவ்வாறு புது மனைவியுடன் ஒரே படுக்கையில் படுக்கப்போகிறேனோ தெரியவில்லை.
பல்வேறு வகையாக உணவுப் பழக்கங்கள் எல்லாம் மாற்றிப் பார்த்தேன் எந்த மாற்றமும் இல்லை.
டாக்டர் அவர்களே தயவு செய்து இதனை பிரச்சினை தீர உதவி செய்தால் எனது திருமண வாழ்வை சந்தோசமாக ஆரம்பிக்கலாம்.
பதில்: முதலில்
உமிழ்நீர் வெளியேறுவது பற்றி சில விளக்கங்கள்.
படுக்கும் போது உமிழ்நீர் வெளியேறுவது என்பது குழந்தை பருவத்தில்
ஏற்படும் சாதாரண நிகழ்வு. வயதாக வயதாக அது மறைந்து விடுவது இயல்பு.
தூங்கும் போது உமிழ் நீர் வெளியேற்றம் எதனால் ஏற்படுகின்றது?
நாம் தூங்கும் போது கூட எமது உமிழ் நீர்ச் சுரப்பிகள் உமிழ் நீரை உற்பத்தி செய்கின்றன. நாம் தூங்கும் போது இந்த உமிழ் நீர் விழுங்கப்பட முடியாமல் போவதால் இவை வெளியேறுகின்றன. வயது ஆக ஆக இந்தப் பிரச்சினை இயல்பாக மறைந்து விடும்.
சில நேரங்களில், பெரியவர்களுக்கு கூட இந்தப் பிரச்சினை தற்காலிகமாக ஏற்படலாம். குறிப்பாக காய்ச்சல், சைனஸ் பிரச்சினை ஏற்பட்டவர்கள் இதை அனுபவித்திருக்கலாம்.
சில வேளைகளில் பெரியவர்களும் நிரந்திரமாக பாதிக்கப்படலாம்.
இதற்கான தீர்வாக அவருக்கு நான் சொல்லக் கூடியது , மல்லாக்கப் படுத்தல். அதாவது முதுகுப்புறமாக மல்லாக்கப் படுத்தால் உருவாகின்ற உமிழ்நீர் வாய்க்குள் தேங்காமல் வயிற்றுக்குள்ளே சென்றுவிடும்.
அவ்வாறு மல்லாக்கப் படுப்பது சிரமமாக இருந்தால் அதற்காகவே தயாரிக்கப்பட்ட படுக்கைகள் இருக்கின்றன அந்த படுக்கைகளில் படுப்பதன் மூலம் தொடர்ச்சியாக சில காலங்களுக்கு மல்லாக்கப் படுத்தால் இந்தப் பிரச்சினை இல்லாமல் போகலாம்.
அடினாய்டு,
டான்ஸிலைட்டிஸ் போன்ற பிரச்சினைகளால் கூட இவ்வாறு நிகழலாம். அப்படி இருந்தால்
ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனலிக்கும்.
எனவே
மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
==--==