புகை - சிகரெட்
பிடிப்பதால் வரும் செக்ஸ் பிரச்சனைகள்
கேள்வி:
டாக்டர், நான்
பல வருடங்களாக தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன். புகைப்பிடித்தால் விந்தனுக்களின் எண்ணிக்கை
குறைந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?
பதில்: உலகத்தில்
இருபது நாடுகளில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் ஆண்களின் விந்திற்க்கும் சிகரெட் பிடிப்பதற்கும் தொடர்பு உண்டு
என தெரிவிக்கின்றன. புகைப்
பிடிக்கும் ஆண்களுக்கு 13% – 17% விந்தனுக்களின் அளவு (Sperm count) புகை பிடிக்காதவர்களை
விட குறைவாக உள்ளது.
============
கேள்வி:
வணக்கம் டாக்டர், எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. வயது 32,.
நான் பதினைந்து ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கிறேன். குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை..
என் மனைவி ஆரோக்கியமாக இருக்கிறார்.
எந்தப் பிரச்னையும் இல்லை. என் விந்தணுக்களின் எண்ணிக்கையும் சரியாகவே உள்ளது. நான் புகைப்பிடிப்பதால்
தான் கருத்தரிக்கவில்லை
என்கிறாள் என் மனைவி. இது உண்மையா?
பதில்:
உங்கள் விந்து அளவு சரியாக இருந்தாலும், விந்து
நகரும் வேகம் (motility of Sperms) என்பது
கர்ப்பம் தரிக்க மிகவும் முக்கியமானது. புகைப்பிடிப்பதால் விந்துவின் வேகம்
வலுவிழக்கும், இதனாலும்
உங்கள் மனைவி கருத்தரிக்காமல்
போகலாம். எனவே
உங்கள் மனைவி
சொல்படி புகை
பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
================
கேள்வி: ஒரு வருடங்களுக்கு மேலாக எனது ஆணுறுப்பில் ஒரு புண் இருக்கிறது. நான் தினமும் ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரட் பிடிக்கிறேன், சிகரெட்டுக்கும் இந்தப் புண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? எதனால் இந்த புண் வருகிறது.?-
பதில்:
புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு ஆணுறுப்புப் புற்று நோய் (Penile Cancer) அதிகமாக வர வாய்ப்புள்ளது., அதிகமாக சிகரெட் பிடித்தால் இந்தப் புற்று நோய் வரும் வாய்ப்பும் அதிகமாகும்.
இது போன்ற புண், காயம், வெட்டுக்காயம் போன்றவை ஆணுறுப்பில் மூன்று வாரத்திற்கு
மேல் ஆறாமல் இருந்தால், உடனே
ஒரு மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள
வேண்டும். ஆணுறுப்புப் புற்று நோய் என்பது தொட்டால் இரத்தம் வரும் புண் மாதிரி இருக்கும். பார்க்க
அருவருப்பாகவும், நாளாக
நாளாக காலி
பிளவரைப் (Cauli Flower) போன்று தோற்றம் அளிக்க ஆரம்பித்து விடும்.
=================
கேள்வி: டாக்டர்
24 வயது திருமணமாகாத பெண் நான்,
எனக்கு புகைக்கும் பழக்கம் உள்ளது. சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்களே இது உண்மையா?
பதில்: புகைப்பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் அனைவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
Ø புகைப்பிடிக்கும்
பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.
Ø புகைப்பழக்கம்
பெலோபியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும்.
இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை
கீழிறங்கி கருத்தரிக்க
வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள்
கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.
Ø புகைப்
பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.
Ø பெண்ணுறுப்புப்
புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால்
அதிகரிக்கும்.
Ø பெண்களுக்கு
மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (Menopause) சீக்கிரமே துவங்கி விடும்.
Ø பெண்
புகைப்பிடித்தாலோ, சிகரெட்
பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (Passive Smoker) மார்பகப்
புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
=====================
கேள்வி: சிகரெட்டில்
என்ன இருக்கிறது? அதனால்
என்ன பிரச்சனை வரும்?
பதில்: புகையிலையில்
அறுபது நச்சுப் (Toxins) பொருட்கள்
உள்ளன. ஒவ்வொரு மனிதன் புகைக்கும் வகையிலும் வித்தியாசம் உள்ளது. அவர்கள்
புகைக்கும் வகைக்கு ஏற்றது போல இந்த நச்சுப் பொருட்கள் உள்ளே செல்கின்றன.
புகைப்பிடித்த உடனே நடக்கும்
மாற்றங்கள்:
புகைப்பிடித்தவுடன் உங்கள் ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது கொஞ்ச நேரம் கழித்து சரியானாலும், உங்கள் ஆண் குறி விறைப்பு என்பது, ரத்தம் பாய்வதால் ஏற்படும் நிகழ்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்புத்தண்மை மிகவும் குறைய அதிகமாக வாய்ப்பு உள்ளது.
புகைப்பிடித்தவுடன் உங்கள் ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது கொஞ்ச நேரம் கழித்து சரியானாலும், உங்கள் ஆண் குறி விறைப்பு என்பது, ரத்தம் பாய்வதால் ஏற்படும் நிகழ்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்புத்தண்மை மிகவும் குறைய அதிகமாக வாய்ப்பு உள்ளது.
புகைப்பிடிப்பதால் பிற்காலத்தில்
ஏற்படும் விளைவுகள்:
Ø ஆண், பெண் செக்ஸ்
ஹார்மோன்களான டெஸ்ட்டோஸ்டிரான் (Testosterone)
மற்றும்
ஈஸ்ட்ரோஜென் (Estrogen) குறைந்து
உடலுறவு வைக்கவேண்டும் என்ற உணர்வும், ஆண்குறி விறைப்புத்தண்மையும்
குறைந்து விடும்.
Ø ரத்தக்
குழாய்கள் கடினமாகி (Arteriosclerosis) பிரச்சனை
ஏற்படுத்தும்.
Ø ரத்தக்
குழாய்களில் மாசுப் பொருட்கள் சேர்ந்து (Plaque) ரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும் ( Atherosclerosis). இதனால் இதய நோய் வரும்.
Ø புகையிலையில்
உள்ள நச்சுப் பொருட்கள் கட்டிகளையும், புற்று
நோயையும் உருவாக்கும்.
======================
கேள்வி: என்
கணவர் வீட்டிலேயே புகைப்பிடிக்கிறார், அதனால்
நானும் எனது குழந்தையும் புகையை சுவாசிக்கிறோம். இதனால் எங்களுக்கு
ஏதும் பிரச்சனை வருமா?
பதில்:
மற்றவர்களால் நீங்கள் புகையை சுவாசிப்பதை ஆங்கிலத்தில் Passive Smoking என்று சொல்வார்கள். இதனால் இதய நோய், நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு உள்ளது. அதே போல்
புகையை தொடர்ந்து சுவாசித்தால், ஆண்
குழந்தைக்கு, விந்தணுக்கள் எண்ணிக்கை குறையும் என்பதை நினைவில்
கொள்ளுங்கள்
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக் 24* 7 ஹெல்த் லைன்
==--==