விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, February 14, 2014

புது மணப்பெண்களை தாக்கும் மனநோய் - ஆங்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர் (Anxiety Neurosis Disorder) எனப்படும் அச்ச பாதிப்புகள்






கேள்வி: எனக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது. திருமணமான நாள் முதல் ஒருவித அச்சத்துடனே இருக்கிறேன். காரணம் என்னவென்று தெரியவில்லை. கணவரின் வீட்டாரிடம் பேசுவதற்கே பயமாக உள்ளது. மிகுந்த பதட்டமும் ஏற்படுகிறது. இதனால் தூக்கம், பசியின்றி உடல் எடையும் குறைந்துவிட்டது. இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா டாக்டர்?


பதில்: புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்களில் முக்கியமானது ஆன்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர் (Anxiety Neurosis Disorder) எனப்படும் அச்ச பாதிப்புகள்.

வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் இந்த பாதிப்பு உள்ள பெண்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.


ஆங்சைட்டி நியூரோசிஸ் பாதிப்பு தாக்கியவர்கள் தினசரி வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அச்சப்படுவார்கள். குறிப்பாக புதிய நபர்களை சந்திக்கவோ, நேர்முகத்தேர்வுக்கு செல்லவோ, புதிய இடங்களுக்கு செல்லவோ, விபத்து நடந்த இடத்தை பார்க்கவோ அல்லது விபத்தில் சிக்கியவர்களின் உடலைப் பார்த்தோ மிகவும் பயப்படுவார்கள். ரத்தத்தை கண்டால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும். இதனால் உடல்ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்வார்கள். அவர்களின் உடலில் வியர்வை, நடுக்கம், விரைவான இதயத்துடிப்பு ஆகியவை ஏற்படும். சிறுகுடல் பாதிக்கப்படும்.

கொந்தளிப்பான உணர்வால் மூர்ச்சை கூட உண்டாகலாம்.

மனப்பான்மையை மாற்றிக்கொள்ளுங்கள் 
இப்படி பயப்படும் பெண்கள் முதலில் வாழும் முறையை மாற்றவேண்டும்வாழும் முறையில் மாற்றம்  பள்ளிக்கு செல்லும் குழந்தை வீடு திரும்பும் வரை பயப்படுவது, கணவரை நினைத்து கவலைப்படுவது ஆகியவை தேவையில்லாத பயம் என்பதை இந்த நோய் தாக்கியவர்கள் உணர வேண்டும். தனிமையில் இருந்தால் பயமாக இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. அச்சம் தரும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்ளவேண்டும்.

மனதில் அச்சம் தோன்றும்போது ஏதாவது பாடலை பாடலாம். எப்போதும் நமக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் அச்சம் தரும் சிந்தனை குறையும். இவை அனைத்தையும் விட, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதனால் மனதில் அச்சம் குறையும்.

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எதையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிராமல் ஏதேனும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு அதில் கவனம் செலுத்துவது நல்லது.

நியுரோஸிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். பயப்பட வைக்கும் சூழ்நிலையை எதிர்த்து போராடும் மனநிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று அவர்கள் மனதில் பதியும் வகையில் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அச்சத்தால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தால் உடனே உளவியல் ஆலோசகரிடமோ, மருத்துவரிடமோ ஆலோசனை பெறவும்




உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.






Get Appointment

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்