கண் எரிச்சல் நீங்க:
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
கண் பிராகசம் அடைய :
தூதுவளைக்காய் ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளி பெறும்.
கண்பார்வை அதிகரிக்க:
கடுக்காய் பொடி, நெல்லி பொடி, தான்றிக்காய்பொடி சம அளவு சேர்த்து தினசரி 2 கிராம் தேனில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.
கண்கள் குளிர்ச்சி பெற:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட கண் குளிர்ச்சி பெறும்.
கண் பார்வை குறை நீங்க:
மூக்கிரட்டை இலை, பொன்னாங்கன்னி இலை, கீழாநெல்லி பொடி செய்து சம அளவு கலந்து ½ கரண்டி வீதம் 48 நாட்கள் உண்டுவர கண்பார்வை குணமாகும்.
இமை வீக்கம் அடங்க:-
பசும் பாலைக் காய்ச்சி துணியில் நனைத்து ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறைவதுடன் வலியும் எரிச்சலும் அடங்கும்.
கண்பார்வை
பாதாம்பருப்பு சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாகும். ஆண்மை பெருகும்.
கண் மங்கல் அகல:-
பொன்னாங் கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் கண்கள் மீது வைத்துக் கட்டிப்படுக்க கண் மங்கல் அகலும்.
கண் அரிப்பு நிற்க:-
கடுக்காய்ப் பிஞ்சை சந்தனக் கல்லில் உரைத்துவரும் விழுதை இரவு படுக்கப்போகும் முன்பு மை போல் இட்டுக் கொண்டால் நின்று விடும்.
கண் எரிச்சல்:
நெல்லிக்காயை நன்கு காயவைத்து நைசாகப் பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். கண் எரிச்சல் கண் புளிச்சை போன்றவை ஏற்படாது.
கண் இருட்டி மயக்கம்
வெயிலில் போய்விட்டு மிகவும் களைப்பாக வீட்டுக்கு வந்தவுடன் கண் இருட்டி மயக்கம் வருவதுபோல இருக்கும். உடனே அரை டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிய துண்டு வெல்லம் சாப்பிட்டால் எல்லாம் சரியாகும்.
கண்கள் பிரகாசமாக :
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
==--==