விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 15, 2014

ஆரோக்கியமாக வாழ நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள்



மூலிகை வைத்தியர் சிறப்பு மருத்துவர் ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் டாக்டர் செந்தில் குமார்  Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,



ஆரோக்கியமாக வாழ நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள்

கால்சியம்:
எலும்பு வளர்ச்சிக்கு அவசியமானது. இது குறைந்தால் நடுத்தர வயது பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபொராஸிஸ் அதாவது எலும்பு தேய்மான நோய் வரும். பெண்களுக்கு வயது ஆகஆக கால்சியம் குறையும்! கொழுப்பு நீக்கிய தயிர், பால், பாலாடைக் கட்டி, ரொட்டி, காய்கறி, மீன் ஆகியவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது.

போலிக் ஆசிட்:
அனீமியா என்ற ரத்தசோகை நோயை நீக்கும் ஆற்றல் உடையது. இது உடலில் குறைந்தால் இதய நோய் ஏற்படும். கீரை, முளைவிட்ட தானியங்கள், பச்சைக் கடலை, பீன்ஸ், இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் ஏராளமாக உள்ளது.

இரும்புச்சத்து:
தசைகளின் செயல்பாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு இரும்புச்சத்து அவசியம். இது குறைந்தால் சோர்வு, தளர்ச்சி உருவாகும். ஆண்களுக்கு 13 முதல் 17 மி.கிராம் வேண்டும். பெண்களுக்கு தினமும் 15 மில்லி கிராம் தேவை. மாமிசம், முளைவிட்ட தானியங்கள், கருப்புத் திராட்சை, முட்டை, முட்டைக்கோஸ், பேரீச்சம்பழம் ஆகியவற்றில் இரும்பு சத்து உள்ளது. இவற்றை சாப்பிடும்போது வைட்டமினோடு உடலுக்குள் சென்றால் எளிதாக ஜீரணமாகி விடும்.

வைட்டமின் சி:
நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, பழவகைகள், காய்கறி, பயறுகள், முளைவிட்ட தானியங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. வைட்டமின் சி குறைந்தால் வாய்ப்புண், ஆண்மைக்குறைவு ஏற்படும்.

வைட்டமின் :

இதயநோய், புற்று நோய் ஆகியவற்றை தடுக்கும் சக்தி வைட்டமின் - க்கு உண்டு. பாதாம்பருப்பு, முட்டை, மாமிசம், தாவர எண்ணை ஆகியவற்றில் வைட்டமின் `' அதிகமாக உள்ளது.

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்