விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, April 10, 2014

கோடை காலத்தில் ஏற்படும் உடல் பிரச்சனைகள்






கோடை காலத்தில் ஏற்படும் உடல் பிரச்சனைகள்

கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. இதனால்

  • ஹீட் கிராம்ப்ஸ்
  • ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன்
  • ஹீட் ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்படும்.


ஹீட் கிராம்ப்ஸ் அதிக பாதிப்பை தராது.

ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன் என்பது உடலில் இருக்கும் உப்புத்தன்மை குறையும்போது ஏற்படும் பாதிப்பாகும். கோடையில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியாகிக்கொண்டே இருக்கும். அதில் உப்பும் சேர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். வியர்வையோடு வெளிப்படும் உப்பு பற்றாக்குறையையும் சமன் செய்ய வேண்டும். வெறுந் தண்ணீரை மட்டும் குடிக்காமல் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து, மோரில் உப்பு கலந்து பருகுவது அவசியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தால் ".ஆர்.எஸ்" எனப்படும் ஓரல் ரீஹைட்ரேஷன் சால்டை ( எலக்ட்ரால் குளுகோஸ்) தண்ணீரில் கலக்கி உட்கொள்ள வேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித்துடிப்பு குறையும். 107 டிகிரிவரை காய்ச்சல் ஏற்படும். நினைவிழப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்கு செல்லவும்கூடும். இந்த பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தராவிட்டால் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும்.

கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை "சம்மர் டயாரியா" என்கிறோம். இதில் அமீபியாசிஸ் கிருமியால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சாதாரண நிலை கொண்டதாகும். பாக்டீரியல் டிசன்ட்ரி என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கோடை காலத்தில் மிகுந்த சுகாதார தன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும்.

மற்ற எல்லா பழங்களையும் விட மாம்பழங்களில் கழிவு அதிகம். அவைகளை சரியாக கையாளாதபோது அதில் இருந்து செயல்படும் "" மற்றும் "கொசு"க்களால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

கோடைகாலத்தில் சிறுவர்கள் நீச்சல் குளங்களில் விளையாடுவதை சுகமான அனுபவமாக கருதுவார்கள். அந்த தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் காதுகளில் தொற்று, கண்களில் எரிச்சல், சரும நோய் போன்றவை தோன்றும். உடலில் இருக்கும் காயத்தில் அந்த அழுக்கு நீர் படும்போது டைபாய்ட், எலி ஜூரம் போன்ற நோய்கள்கூட ஏற்படக்கூடும்.

கோடை வெயிலில் "அல்ட்ரா வயலட் கதிர்கள்" தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஓசோன் மண்டலம் அதன் தாக்குதல் தன்மையை தடுக்கும். இப்போது ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழும் பாதிப்பு இருப்பதால், கதிர்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் காட்டன் ஆடைகளை அணிவது நல்லது. செயற்கை ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத்திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடைகளையே அணிய வேண்டும்.

கோடையில் சூடு, கட்டி உடலில் உருவாகும். எல்லா வயதினருக்கும் இது உருவாகும் என்றாலும் சர்க்கரை நோயாளிகளை அதிக தொந்தரவிற்கு உள்ளாக்கும்.

கோடை காலத்தில் உடல் உஷ்ணமாகும்போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் தொடர்ச்சியாக உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவது குறைந்துகொண்டே போகும். அப்போது உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சிறுநீரக கல் தோன்றுகிறது. தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகி வந்தால், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். கல் உருவாகாது.

கோடை காலத்தில் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் காலரா, டைபாய்ட், புட் பாயிசன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால்  ".ஆர்.எஸ்"  எனப்படும் ஓரல் ரீஹைட்ரேஷன் சால்டை ( எலக்ட்ரால் குளுகோஸ்) பருக கொடுக்க வேண்டும்.




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்