விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, April 25, 2014

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்



 குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு   உணவிலும்  , நீரிலும்   உள்ள   நோய்  கிருமிகள்(Virus, Bacteria, Protozoa)   வயிற்றில்  சென்று  வயிற்று  போக்கை   ஏற்படுத்தும் .   பாட்டில் பாலே இதற்கு முழு  முதல்  காரணம் .இதர  காரணங்கள் : மூடி வைக்காத  உணவு , ஊட்டி எனப்படும்  சூப்பான் (கீழே  விழுந்தபின்  கழுவாமல்   உடனே வாயில்  வைப்பது ),சுகாதர  குறைவு ....   குழந்தைகளுக்கு   வரும்  வயிற்று  போக்கிற்கு   பெரும்பாலும்  வைரஸ் காரணம் .    பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு  ஒவ்வாமை   - இதர  காரணங்கள்    வைரசில் Rota Virus  முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு வயிற்றுப்போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும்  வயிற்றுப்போக்கில்  அதிகபடியான  நீர் இழப்பு  ஏற்படும் . மற்றும்  சுரம்  அதிகமாக  இருக்கும் .   இரத்தம், சளி போன்ற  Mucus ,  இருந்தால்  அது  Dysentery  எனப்படும் .இதில்  வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம்  போகுதல் ஆகிய அறிகுறிகள்  காணப்படும். இதில் நீர் இழப்பு  குறைவாக  இருக்கும் .   வெறும்  நீராக  மற்றும் பாதி நீராக  போனால்  அது Diarrhea  எனப்படும் .இதில் நீர்  இழப்பு  அதிகமாக  இருக்கும் .   வயிற்று போக்கு  உள்ள போது குழந்தையை   பட்டினி  போடுதல் கூடாது , நீர் இழப்பிற்கு தகுந்தாற் போல்  ஊட்டம்  அளிக்கவேண்டும் .   வயிற்றுப்போக்கின் போது  நீர் சத்தும் , ஊப்பு  சத்தும்  குறைவதால்  அதை  சரிசெய்ய  வேண்டும் .   பால் குடிக்கும்  குழந்தைக்கு  விடாமல்  தாய்ப்பால்  தரவேண்டும்    வீட்டிலேயே  முதல்  உதவி அளிக்க  முடியும்  ஒரு  தம்ளர்  காய்ச்சிய  நீர்  எடுத்துகொள்ளவும்   இரண்டு  விரற்கிடை அளவு   உப்பு  சேர்க்கவும்   மூன்று  விரற்கிடை  அளவு  சர்க்கரை  சேர்க்கவும்   நன்கு  கலக்கி   அடிக்கடி  தரவும்    பாட்டிலில்  பால் தருவதை  உடனே  நிறுத்தவேண்டும் .   திட  , திரவ  உணவை  நிறுத்தாமல்   கொடுத்துகொண்டே  இருக்க வேண்டும் .   வயிற்று போக்கு  குறைய  மூன்று முதல்  ஐந்து நாட்கள்  ஆகலாம். எனவே பொறுமையுடன்  மருத்துவர் ஆலோசனை  பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை  தடுப்பதே  மிக முக்கிய  மருத்துவம் ஆகும் .   வயிற்றுப்போக்கை  உடனே நிறுத்த  சில மருந்துகள்  உள்ளன , அவற்றை  குழந்தைகளுக்கு  தரக்கூடாது . Loperamide என்ற   மாத்திரையை  தந்தால் போக்கு உடனே  நின்று விடும் , ஆனால் வயிறு  வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த  மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்  பெரியவர்களுக்கு  தரலாம் , ஆனால்  12  வயதிற்கு  குறைந்த  குழந்தைகளுக்கு  தரக்கூடாது .   எனவே  வயிற்று போக்கை  அதன் போக்கிலேயே  விட்டு  மருத்துவம் செய்ய வேண்டும் .    இப்பொழுது  ORS எனப்படும்  உயிர் கரைசல்  கிடைக்கிறது. அதை  வாங்கி வீட்டில்  வைத்திருந்தால்  தேவை படும்  போது  முதல் உதவியாக  தரலாம்.  குறிப்பு இவை எல்லாம் முதலுதவி போன்ற வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.


குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு

v  உணவிலும்  , நீரிலும்   உள்ள   நோய்  கிருமிகள்(Virus, Bacteria, Protozoa)   வயிற்றில்  சென்று  வயிற்று  போக்கை   ஏற்படுத்தும் .

v  பாட்டில் பாலே இதற்கு முழு  முதல்  காரணம் .இதர  காரணங்கள் : மூடி வைக்காத  உணவு , ஊட்டி எனப்படும்  சூப்பான் (கீழே  விழுந்தபின்  கழுவாமல்   உடனே வாயில்  வைப்பது ),சுகாதர  குறைவு ....

v  குழந்தைகளுக்கு   வரும்  வயிற்று  போக்கிற்கு   பெரும்பாலும்  வைரஸ் காரணம் .

v  பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு  ஒவ்வாமை   - இதர  காரணங்கள்

v  வைரசில் Rota Virus  முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு வயிற்றுப்போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும்  வயிற்றுப்போக்கில்  அதிகபடியான  நீர் இழப்பு  ஏற்படும் . மற்றும்  சுரம்  அதிகமாக  இருக்கும் .

v  இரத்தம், சளி போன்ற  Mucus ,  இருந்தால்  அது  Dysentery  எனப்படும் .இதில்  வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம்  போகுதல் ஆகிய அறிகுறிகள்  காணப்படும். இதில் நீர் இழப்பு  குறைவாக  இருக்கும் .

v  வெறும்  நீராக  மற்றும் பாதி நீராக  போனால்  அது Diarrhea  எனப்படும் .இதில் நீர்  இழப்பு  அதிகமாக  இருக்கும் .

v  வயிற்று போக்கு  உள்ள போது குழந்தையை   பட்டினி  போடுதல் கூடாது , நீர் இழப்பிற்கு தகுந்தாற் போல்  ஊட்டம்  அளிக்கவேண்டும் .

v  வயிற்றுப்போக்கின் போது  நீர் சத்தும் , ஊப்பு  சத்தும்  குறைவதால்  அதை  சரிசெய்ய  வேண்டும் .

v  பால் குடிக்கும்  குழந்தைக்கு  விடாமல்  தாய்ப்பால்  தரவேண்டும்

v  வீட்டிலேயே  முதல்  உதவி அளிக்க  முடியும்
§  ஒரு  தம்ளர்  காய்ச்சிய  நீர்  எடுத்துகொள்ளவும்
§  இரண்டு  விரற்கிடை அளவு   உப்பு  சேர்க்கவும்
§  மூன்று  விரற்கிடை  அளவு  சர்க்கரை  சேர்க்கவும்
§  நன்கு  கலக்கி   அடிக்கடி  தரவும்

v  பாட்டிலில்  பால் தருவதை  உடனே  நிறுத்தவேண்டும் .

v  திட  , திரவ  உணவை  நிறுத்தாமல்   கொடுத்துகொண்டே  இருக்க வேண்டும் .

v  வயிற்று போக்கு  குறைய  மூன்று முதல்  ஐந்து நாட்கள்  ஆகலாம். எனவே பொறுமையுடன்  மருத்துவர் ஆலோசனை  பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை  தடுப்பதே  மிக முக்கிய  மருத்துவம் ஆகும் .

v  வயிற்றுப்போக்கை  உடனே நிறுத்த  சில மருந்துகள்  உள்ளன , அவற்றை  குழந்தைகளுக்கு  தரக்கூடாது . Loperamide என்ற   மாத்திரையை  தந்தால் போக்கு உடனே  நின்று விடும் , ஆனால் வயிறு  வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த  மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்  பெரியவர்களுக்கு  தரலாம் , ஆனால்  12  வயதிற்கு  குறைந்த  குழந்தைகளுக்கு  தரக்கூடாது .

v  எனவே  வயிற்று போக்கை  அதன் போக்கிலேயே  விட்டு  மருத்துவம் செய்ய வேண்டும் .

v  இப்பொழுது  ORS எனப்படும்  உப்பு சர்க்கரை கரைசல்  கிடைக்கிறது. அதை  வாங்கி வீட்டில்  வைத்திருந்தால்  தேவை படும்  போது  முதல் உதவியாக  தரலாம்.

குறிப்பு
இவை எல்லாம் முதலுதவி போன்ற வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்