ஆங்கில மருத்துவம்
அலோபதி மருத்துவம்
சாதரண மக்களால் "ஆங்கில மருத்துவம்" என அழைக்கப்படுகின்றது. உலக நாடுகள்
முழுமைக்கும் பரவலாக பயன்பாட்டில் உள்ள சிகிச்சை முறை இது.
கிரேக்க
தத்துவ ஞானி ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தாம் மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1891 ஆம்
ஆண்டுக்கு முன்னர் உபயோக்பபடுத்தப்பட்டுள்ள மருந்துகளால் அதிக அளவில் விரும்பத்தகாத
விளைவுகள் ஏற்பட்டன. பால் எர்ரிச் என்னும் விஞ்ஞானி பல பரிசோதனைகளையும், ஆராய்ச்சியையும்
மேற்கொண்டார். 1891க்குப் பின்னர் தாம் மருந்துகள் செயல்படும் முறைகளைக் கண்டறிய முடிந்தது.
ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இந்த மேலை மருத்துவம் இந்தியாவிற்குள் வந்தது.
20ஆம் நூற்றாண்டில் இந்த நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி அடைந்தது. இன்று இந்தியாவில்
அலோபதி மருத்துவம் முதன்மை மருத்துவமாக திகழ்கிறது.
அலோபதி மருத்தவ முறைகள்
1. நோய்க்குறிகள்
அகற்றுவதற்கானவை(Symptomatic)
2. நோய்க்
காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal)
நோய் தீர்வதற்கான முறைகள்
(Defenitive)
1. மருத்துவ
முறை (Medical)
2. அறுவை
சிகிச்சை முறைகள் (Surgical)
3. கடுமைத்
தணிவுக்கான முறைகள் (Palliative)
1.மருத்துவ முறை
மருத்துவ
முறையில் உடலமைப்பு முழுவதையும் சார்ந்த மருந்துகள், ஓர் உறுப்பை மட்டும் தாக்கும்
மருந்துகள் என்ற இரண்டு வகைகளாகத் தரப்படுகின்றன.
(i) உடல்
அமைப்பு முழுவதையும் சார்ந்த (Ststemic) மருந்துகள்.
- வாய் வழி (Enteral)
- வாய் வழி அல்லாத (Parenteral)
- இரத்தக் குழாய் வழி (I.V)
- குதவாய் (Rectal)
(ii) ஓர்
உறுப்பை மட்டும் தாக்கும் வழிகள் (Topical)
உடலமைப்பு
முழுவதும் சார்ந்த வகையில் (Systemic) மருந்து உட்கொள்கையில் அது பயணம் செல்லும் வழியில்
உள்ள குடல் (குடல் புண்) போன்ற உறுப்புகளையும், அதனைக் கையாளும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும்,
கழிவுகளை உடம்பிலிந்து அகற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் முக்கியமாகப் பாதிக்கின்றன.
இதுமட்டுமன்று.
(Anti metabolites) போன்ற மருந்துகள், அவை பரவும் ஒவ்வொரு உறுப்புகளையும் கடுமையாக
பாதிக்கின்றன. அதனால் முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சிறு குடலில் உறிஞ்சுத்தன்மை மாறுபாடு
போன்றவை ஏற்படுகின்றன.
3. கடுமைத் தணிவு (Palliative)
நோய் முற்றிய
நிலையில் நோய்க் குறிகளை மட்டும் தணிக்க அலோபதி மருத்துவம், உடனடியாக பலன் தரவல்லது.
ஆனால், எதிர்மறை விளைவுகளின் காரணமாக, அதனுடைய பயன்பாடு மிகுந்த கூருணர்வுடன் கையாளப்பட
வேண்டியிருக்கிறது. இந்த எதிர்மறை விளைவுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. கணிக்கத்தக்கவை.
2. கணிக்கப்பட
முடியாதவை.
இந்த விளைவுகள்,
நோயாளியின் வயது, பிற உறுப்புகளின் இயக்க ஆற்றல் அல்லது குறைபாடுகள், உட்கொள்ளும் பிற
மருந்துகள் அளவு போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.
குறைந்த
அளவில் உடலில் இருக்கும்போது மருந்தாகச் செயல்படும் பல மருந்துகள், அதிக அளவில் நஞ்சாகச்
செயல்படுகின்றன. உதாரணமாக, பாராசிட்டம்ல் என்ற மருந்து மருத்தவரின் ஆலோசனை இல்லாமல்
எடுத்துக் கொள்ளப்படும்பொழுது கேடு விளைவிக்கலாம். நீண்ட காலம் உபயோகிக்கும்போது, அலோபதி
மருந்துகள், பல உறுப்புகளில் தங்கள் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. எனவே, தவிர்க்க
முடியாதச் சூழல் மற்றும் மருத்துவரின் அறிவுரை தவிர மற்ற அனாவசியமான சூழல்களில் நீண்ட
காலமோ, அடிக்கடியோ மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
அலோபதி மருந்துகள்
அனைத்தும் இரசாயனப் பொருட்களே செயற்கையாக தயாரிக்கப்ட்டவையே. நமது உடலிலுள்ள அனைத்து
செல்களிலும் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. அதனால் தலைவலிக்கு தரப்படுகின்ற
சாதரண வலி மாத்திரை கூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கூடி இரசாயன
மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. அதுமட்டுமல்லாது மருந்து
சார்ந்து இருக்கின்ற தன்மையை (Drug Addiction) உருவாக்கக் கூடியவை. செயற்கையாக தயாரிக்கப்படுவதால்
சாமானியர்களுக்கு எளிதில் பெற முடியாதவையாகவும் உள்ளன. நோய் சார்ந்த குறியீடுகளையே
சமன்படுத்துகின்றன.
இத்தனை குறைபாடுகள்
அலோபதி மருத்துவத்தில் இருந்தாலும் கூட அவசர சிகிச்சைகளான விபத்து மற்றும் அதிக இரத்த
இழப்பு, மகப்பேறு, மாரடைப்பு, மூளைக்கட்டி போன்றவற்றிற்கு இதை விடுத்து சிறந்த சிகிச்சை
முறைகள் கிடையாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், எது அலோபதி
மருத்துவத்தில் சிறந்ததாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துவோம்.
யோகாசனமும்,
தியானப்பயிற்சியும், காயக்கல்ப பயிற்சியும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை
டாக்டரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய்
நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
==--==