விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 26, 2014

யோகாசனம் எப்போது செய்ய வேண்டும்? எப்போது செய்யகூடாது : கேள்வி - பதில் - Yogasanas Question and Answer



 யோகாசனம் எப்போது செய்ய வேண்டும்? எப்போது செய்யகூடாது : கேள்வி - பதில்  யோகாசனம் எப்போது செய்ய வேண்டும்? எப்போது செய்யகூடாது?  யோகாசனம் அதிகாலை சூரியன் உதயம் ஆகும்போது செய்தால் நல்லது. சூரியன் அதிக உக்கிரமாக இருக்கும்போது யோகாசனம் செய்தால் பலன் கிடைக்காது. அதிகாலை 5-மணியிலிருந்து 7-மணிக்குள்ளும் மாலை 5-30 மணிக்குமேல் 7-மணிக்குள்ளும் செய்தால் நல்லது. யோகாசனம் செய்யும்போது கண்டிப்பாக வியர்வை வரக்கூடாது.  இரவு நேரத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்போது யோகாசனம் செய்ய வேண்டும்?  இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்துவிட்டு வீடு வந்த பின் வீட்டில் தூங்கி எழுந்த பின் மற்ற கடன்களை முடித்து, குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம்.  சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் சென்றபின் யோகாசனம் செய்யலாம்?  சாப்பிட்ட பிறகு கண்டிபாக 5 மணி நேரமாவது சென்ற பிறகுதான் யோகாசனம் செய்யவேண்டும். அதிகாலை யோகாசனம் செய்வது நல்லது. புதிதாகப் பழகுபவர்கள் மாலையில் செய்யலாம். காலையில் செய்யும்போது காலைக்கடன்கள் முடித்துவிட்டு அதாவது மலம் வெளியேறிய பின் செய்வது நல்லது.   மலம் வெளியேறாமல் இருந்தால் யோகாசனம் செய்யலாம்?  காலையில் எழுந்து 2 டம்ளர் பச்சைத் தண்ணிர் குடிக்கவேண்டும். இப்பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண்டிப்பாக மலம் வெளியேறிவிடும். அப்படியும் வெளியேறாவிட்டால் யோகாசனம் செய்யலாம் ஆரம்பித்த சில விநாடிகளில் மலம் வெளியேற உணர்ச்சி வரும் அப்போது மலம் வெளியேறிய பின் மீண்டும் வந்து யோகாசனம் செய்யலாம்.  யோகாசனம் வெறும் தரையில் செய்யலாமா?  வெறும் தரையில் யோகாசனம் செய்யக்கூடாது. அழுத்தாத விரிப்பின் மேல் யோகாசனம் செய்யவேண்டும். சமூக்காளம் அல்லது சற்று அழுத்தமான போர்வையை விரித்து யோகாசனம் செய்யலாம்.  வெந்நீரில் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாமா?  யோகானம் செய்வபவர்கள் எந்தக் கடும் குளிராக இருந்தாலும் பச்சைத் தண்ணிரில் குளித்த பின்தான் யோகாசனம் செய்யவேண்டும். வெந்நீரில் குளிப்பதால் வெகு விரைவில் நரம்புத் தளர்ச்சி மற்றும் சோம்பேறித்தனம் வந்துவிடும். மிகவும் பலவீனமானவரகள் மிகக் குளிர்ப்பிரதேசத்தில் இருப்பவர்கள் இலேசான சூட்டில் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம். ஆனால் இப்பழகத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ளாமல் காலக்கிரமத்தில் பச்சைத் தண்ணிரையே குளிப்பதற்கு உபயோகிக்க வேண்டும். ஆஸ்துமா. நீரிழிவு நோய் உள்ளவர்கள் நோய் கடுமையாக இருந்தாலும் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பச்சைத் தண்ணீரையே உபயோகிக்கவேண்டும். ஆசனம் செய்யச் செய்ய நோயின் கடுமை தணிந்துவிடும்.  கடுமையாக உழைப்பவர்களுக்கு யோகாசனம் முக்கியமா?  கடுமையாக உழைத்தாலும் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். குறிப்பாக விபரீதகரணி, சர்வாங்காசனம், அர்த்தசிரசாசனம், சிராசாசனம் ஆகியவற்றோடு மாற்று ஆசனங்கள் செய்து நாடி சுத்தியும் செய்தால் நல்லது.  எப்போது பிரயாணத்தில் இருப்பவர்கள் எப்படி யோகாசனம் செய்வது?  இவர்கள் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். இவர்கள் தங்கும் விடுதியிலாவது தூங்கி எழுந்தபின் குளித்துவிட்டு குறிப்பாக மேற்சொன்ன ஆசனங்களைச் செய்தால் போதுமானது.  குறைந்தது எவ்வளவு நேரம் ஆசனங்களைச் செய்ய வேண்டும்?  யோகாசனம் பிராணாயாமங்களை அதிக நேரம் செய்யவேண்டும் என்ற நியதி கிடையாது. தினமும் எந்தச் சூழ்நிலையிலும் 10 நிமிடம் செய்தால் போதுமானது. சில நாட்கள் மணிக்கணக்காக செய்து பின் சில நாட்கள் விட்டு விட்டு பின் தொடர்வது நல்லதல்ல. இதனால் பலன் அதிகம் கிடைக்காது. தினமும் விடாமுயற்சியுடன் சில நிமிடங்களாவது ஆசன பிராணாயாமங்களைச் செய்தால் அதிக பலன் கிடைக்கும்.  நோய்வாய்ப்பட்டவர்கள் எவ்வளவு நேரம் செய்யவேண்டும்?  நேரம் உள்ளவர்கள் ஆரம்பத்தில் காலை, மாலை ஒரு மணிநேரம் கண்டிப்பாக செய்யவேண்டும். நோய் தணிந்த பின் 5 முதல் 10 நிமிடங்கள் செய்தால் போதுமானது.  யோகாசனம் செய்பவர்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா?  நோய் உள்ளவர்கள் நோய் தீரும்வரை யோகாசன பிராணாயாமத்துடன் கடுமையாக உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். சாதாரணமாக ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் கடுமையாக உணவுப் பத்தியம் இருக்க வேண்டியதில்லை. நடைமுறையில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை மிதமாக வைத்துக் கொண்டால் நல்லது. உடல் வளைவும் தன்மை ஏற்படும்.  யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு உண்டா?  யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது அதிகமானவர்கள் நேரத்தை மிகவும் குறைத்து யோகாசனம் செய்யவேண்டும்.  எப்போது யோகாசனம் செய்யக்கூடாது?  உடல் களைப்பாக இருக்கும்போது நாடிசுத்தி செய்துவிட்டு யோகாசனம் செய்யலாம். உடல் உறவு கொண்ட மறுநாள், பெண்களாக இருந்தால் மாதவிடாய் காலங்களில் மற்றும் கர்ப்பமான 3 மாதத்திற்குப் பின் யோகாசனம் செய்யக்கூடாது. சாப்பிட்டவுடன் யோகாசனம் செய்யக்கூடாது. 5 -மணி நேரம் சென்ற பின் தான் யோகாசனம் செய்ய வேண்டும். காய்ச்சல், அதிக மண்டைப்பிடி இந்த வேளைகளில் யோகாசன ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்று நேரடியாகப் பழகினால் விரைவில் நோய் குணமாகிவிடும்.  மாமிசம் உணவு சாப்பிடுகிறவர்கள் யோகாசனம் செய்யலாமா?  செய்யலாம், ஆனால் இவர்களுக்கு உடல் வளையும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே ஆசனங்களை இவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது. ஆசனத்தின் முழு நிலை மெதுவாகவே இவர்களுக்கு வரும். ஆகவே இவர்கள் யோகாசனங்களை மெதுவாகச் செய்யவேண்டும். ஆசனத்தில் பூரண நிலை அடைய உடல் வலி மேலும் சுளுக்கு ஆகியன ஏற்படும். மாமிசம் சாப்பிடுபவர்கள் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது நல்லது.



யோகாசனம் எப்போது செய்ய வேண்டும்? எப்போது செய்யகூடாது : கேள்வி - பதில்

யோகாசனம் எப்போது செய்ய வேண்டும்? எப்போது செய்யகூடாது?
¬  யோகாசனம் அதிகாலை சூரியன் உதயம் ஆகும்போது செய்தால் நல்லது. சூரியன் அதிக உக்கிரமாக இருக்கும்போது யோகாசனம் செய்தால் பலன் கிடைக்காது. அதிகாலை 5-மணியிலிருந்து 7-மணிக்குள்ளும் மாலை 5-30 மணிக்குமேல் 7-மணிக்குள்ளும் செய்தால் நல்லது. யோகாசனம் செய்யும்போது கண்டிப்பாக வியர்வை வரக்கூடாது.

இரவு நேரத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்போது யோகாசனம் செய்ய வேண்டும்?
¬  இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்துவிட்டு வீடு வந்த பின் வீட்டில் தூங்கி எழுந்த பின் மற்ற கடன்களை முடித்து, குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம்.

சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் சென்றபின் யோகாசனம் செய்யலாம்?
¬  சாப்பிட்ட பிறகு கண்டிபாக 5 மணி நேரமாவது சென்ற பிறகுதான் யோகாசனம் செய்யவேண்டும். அதிகாலை யோகாசனம் செய்வது நல்லது. புதிதாகப் பழகுபவர்கள் மாலையில் செய்யலாம். காலையில் செய்யும்போது காலைக்கடன்கள் முடித்துவிட்டு அதாவது மலம் வெளியேறிய பின் செய்வது நல்லது.

மலம் வெளியேறாமல் இருந்தால் யோகாசனம் செய்யலாம்?
¬  காலையில் எழுந்து 2 டம்ளர் பச்சைத் தண்ணிர் குடிக்கவேண்டும். இப்பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண்டிப்பாக மலம் வெளியேறிவிடும். அப்படியும் வெளியேறாவிட்டால் யோகாசனம் செய்யலாம் ஆரம்பித்த சில விநாடிகளில் மலம் வெளியேற உணர்ச்சி வரும் அப்போது மலம் வெளியேறிய பின் மீண்டும் வந்து யோகாசனம் செய்யலாம்.

யோகாசனம் வெறும் தரையில் செய்யலாமா?
¬  வெறும் தரையில் யோகாசனம் செய்யக்கூடாது. அழுத்தாத விரிப்பின் மேல் யோகாசனம் செய்யவேண்டும். சமூக்காளம் அல்லது சற்று அழுத்தமான போர்வையை விரித்து யோகாசனம் செய்யலாம்.

வெந்நீரில் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாமா?
¬  யோகானம் செய்வபவர்கள் எந்தக் கடும் குளிராக இருந்தாலும் பச்சைத் தண்ணிரில் குளித்த பின்தான் யோகாசனம் செய்யவேண்டும். வெந்நீரில் குளிப்பதால் வெகு விரைவில் நரம்புத் தளர்ச்சி மற்றும் சோம்பேறித்தனம் வந்துவிடும். மிகவும் பலவீனமானவரகள் மிகக் குளிர்ப்பிரதேசத்தில் இருப்பவர்கள் இலேசான சூட்டில் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம். ஆனால் இப்பழகத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ளாமல் காலக்கிரமத்தில் பச்சைத் தண்ணிரையே குளிப்பதற்கு உபயோகிக்க வேண்டும். ஆஸ்துமா. நீரிழிவு நோய் உள்ளவர்கள் நோய் கடுமையாக இருந்தாலும் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பச்சைத் தண்ணீரையே உபயோகிக்கவேண்டும். ஆசனம் செய்யச் செய்ய நோயின் கடுமை தணிந்துவிடும்.

கடுமையாக உழைப்பவர்களுக்கு யோகாசனம் முக்கியமா?
¬  கடுமையாக உழைத்தாலும் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். குறிப்பாக விபரீதகரணி, சர்வாங்காசனம், அர்த்தசிரசாசனம், சிராசாசனம் ஆகியவற்றோடு மாற்று ஆசனங்கள் செய்து நாடி சுத்தியும் செய்தால் நல்லது.

எப்போது பிரயாணத்தில் இருப்பவர்கள் எப்படி யோகாசனம் செய்வது?
¬  இவர்கள் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். இவர்கள் தங்கும் விடுதியிலாவது தூங்கி எழுந்தபின் குளித்துவிட்டு குறிப்பாக மேற்சொன்ன ஆசனங்களைச் செய்தால் போதுமானது.

குறைந்தது எவ்வளவு நேரம் ஆசனங்களைச் செய்ய வேண்டும்?
¬  யோகாசனம் பிராணாயாமங்களை அதிக நேரம் செய்யவேண்டும் என்ற நியதி கிடையாது. தினமும் எந்தச் சூழ்நிலையிலும் 10 நிமிடம் செய்தால் போதுமானது. சில நாட்கள் மணிக்கணக்காக செய்து பின் சில நாட்கள் விட்டு விட்டு பின் தொடர்வது நல்லதல்ல. இதனால் பலன் அதிகம் கிடைக்காது. தினமும் விடாமுயற்சியுடன் சில நிமிடங்களாவது ஆசன பிராணாயாமங்களைச் செய்தால் அதிக பலன் கிடைக்கும்.

நோய்வாய்ப்பட்டவர்கள் எவ்வளவு நேரம் செய்யவேண்டும்?
¬  நேரம் உள்ளவர்கள் ஆரம்பத்தில் காலை, மாலை ஒரு மணிநேரம் கண்டிப்பாக செய்யவேண்டும். நோய் தணிந்த பின் 5 முதல் 10 நிமிடங்கள் செய்தால் போதுமானது.

யோகாசனம் செய்பவர்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா?
¬  நோய் உள்ளவர்கள் நோய் தீரும்வரை யோகாசன பிராணாயாமத்துடன் கடுமையாக உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். சாதாரணமாக ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் கடுமையாக உணவுப் பத்தியம் இருக்க வேண்டியதில்லை. நடைமுறையில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை மிதமாக வைத்துக் கொண்டால் நல்லது. உடல் வளைவும் தன்மை ஏற்படும்.

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு உண்டா?
¬  யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது அதிகமானவர்கள் நேரத்தை மிகவும் குறைத்து யோகாசனம் செய்யவேண்டும்.

எப்போது யோகாசனம் செய்யக்கூடாது?
¬  உடல் களைப்பாக இருக்கும்போது நாடிசுத்தி செய்துவிட்டு யோகாசனம் செய்யலாம். உடல் உறவு கொண்ட மறுநாள், பெண்களாக இருந்தால் மாதவிடாய் காலங்களில் மற்றும் கர்ப்பமான 3 மாதத்திற்குப் பின் யோகாசனம் செய்யக்கூடாது. சாப்பிட்டவுடன் யோகாசனம் செய்யக்கூடாது. 5 -மணி நேரம் சென்ற பின் தான் யோகாசனம் செய்ய வேண்டும். காய்ச்சல், அதிக மண்டைப்பிடி இந்த வேளைகளில் யோகாசன ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்று நேரடியாகப் பழகினால் விரைவில் நோய் குணமாகிவிடும்.

மாமிசம் உணவு சாப்பிடுகிறவர்கள் யோகாசனம் செய்யலாமா?
¬  செய்யலாம், ஆனால் இவர்களுக்கு உடல் வளையும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே ஆசனங்களை இவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது. ஆசனத்தின் முழு நிலை மெதுவாகவே இவர்களுக்கு வரும். ஆகவே இவர்கள் யோகாசனங்களை மெதுவாகச் செய்யவேண்டும். ஆசனத்தில் பூரண நிலை அடைய உடல் வலி மேலும் சுளுக்கு ஆகியன ஏற்படும். மாமிசம் சாப்பிடுபவர்கள் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது நல்லது.








==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்