விடாமல்
குழந்தை அழும் காரணம் என்ன?
குழந்தைகள்
சில சமயம் காரணம் இல்லாமல் அழுது கொண்டு இருக்கும் . சில பொதுவான காரணங்கள் கீழே
:
வயிற்று வலி :(Abdominal Colic):
v இது மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு
அதிகமாக வரும் . விட்டு விட்டு வரும் . இடை பட்ட நேரத்தில் நன்றாக விளையாடும் . வயிறு
சிறிது உப்பிஇருக்கும் . பால் குடிக்காது . பொதுவாக இது மாலைஇரவு நேரங்களில் வரும்
.
v முதல் நாள் வலி வந்த அதே நேரத்தில் அடுத்த நாளும் வரும் .4- 6 வார குழந்தைகளுக்கு
இது அதிகமாக காணப்படும் .
v அழும் போது குழந்தையை வலது புறமாகவோ ,குப்புற படுக்க வைத்தாலோ வலி குறையும்
காது வலி :
ü பாட்டிலில் பால் தருவது , சளி , மூக்கு அடைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்
ஆகும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகி அழும்
மூக்கு அடைப்பு :
v படுக்க வைத்தால் குழந்தை அழும் , நேராக வைத்தால் அழுகை குறையும் . மூச்சு
விட திணறும் . பால் குடிக்க முடியாது . சளி இருக்கும் . அழுகை தொடர்ச்சி ஆக இருக்கும்
.
பூச்சி கடி :
ü குழந்தை விடாமல் அழுதால் உடனே உடைகளை கழட்டி ஏதேனும் சிறு சிறு பூச்சி,
எறும்பு உடலில் கடித்து சிவந்து உள்ளதாஎன பார்க்க வேண்டும் .
இதர காரணங்கள் :
Ø தடுப்பூசி போட்டபின் வரும் வலி
Ø சிறு சிறு கட்டி , கொப்புளங்கள்
Ø Diaper Rash-ஆசன வாய், பிறப்பு உறுப்பு ஆகிய இடங்களில் வரும் அரிப்பு
.
Ø இறுக்கமான உடைகள், உடைகளில் இருக்கும் கூர்மையான ஹூக்குகள் அல்லது
மெட்டல் டிசைன்கள்.
Ø வெப்பநிலை மாறுபாடு -சூடான அல்லது குளிர்ச்சியான சூழ்நிலை
காரணத்தை
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உடன் குழந்தை நல மருத்துவரை அணுகி ஆலோசனை
பெறவும்.
==-==