விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 26, 2014

பற்களை பராமரிப்பது எப்படி?



 பற்க்கள் பராமரிப்பு  பற்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் காண்பிப்பதால் என்ன பயன்?  பெரும்பாலானவர்களின் பதில் ஒன்றுமில்லை என்பதுதான். ஆனால் மருத்துவர் பரிசோதனை செய்து ரத்தக் கசிவு இருக்கின்றதா? துர்நாற்றம் அடிக்கின்றதா? என்று கேள்விகளை எழுப்பும்போது அவர்களின் பதில் ஆம் என்பதே!   பற்களை சுற்றி அழுக்கு ஏற்பட்டு, ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு, சீழ் வடியும் நிலையில் மட்டுமே அவர்கள் மருத்துவரை நாடுகின்றனர். இந்நிலையில் பற்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் அதிகமாகி, அருகிலுள்ள பற்களையும் பாதிக்கும் நிலைக்கு வந்து விடுகின்றது. இதனைத் தவிர்க்க வருடத்திற்கு இரண்டு முறையேனும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  குழந்தைகளுக்கு பற்கள் பரிசோதனை தேவையா? அப்படியானால் அதற்கான கால அளவு எவ்வளவு?  குழந்தைகள் பற்கள் முளைக்க ஆரம்பித்ததிலிருந்து 3 மாதத்திற்கு ஒரு முறை பார்ப்பது நலம். ஏனென்றால், குழந்தைகள் சாக்லெட் உள்ளிட்ட அனைத்து வகையான இனிப்பு பொருட்களையும் சாப்பிட ஆரம்பிக்கின்றார்கள். இந்நிலையில் அந்த வகை பண்டங்களினால் குழந்தைகளுக்கு அதிக பல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  வாய்ப்புண் உருவாவதன் காரணம் என்ன?  வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கும், அல்சர் நோயுள்ளவர்களுக்கும், குடல் புண் உள்ளவர்களுக்கும், ஹெர்பிஸ் எனும் பால்வினை நோயுள்ளவர்களுக்கும் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் வாயில் புண்கள் ஏற்படுவதன் வாயிலாகவே வெளிப்படுகின்றன. மேலும் மனச்சோர்வும் வாய்ப்புண்ணிற்கு ஒரு காரணமே!  பற்களை தினமும் இரண்டு முறை துலக்க வேண்டியதன் அவசியம் என்ன?  நமது நாட்டில் முக்கியமான தமிழகத்தில் நிறையபேர் இரவில் பல் துலக்குவது கிடையாது. பகலில் உமிழ்நீர் எனப்படும் நீர் சுரப்பியால் வாய் அடிக்கடி சுத்தமடைகின்றது. ஆனால் இரவில் நாம் உடல் உழைப்பிற்கு ஓய்வு கொடுப்பதன் காரணமாக வாயில் உமிழ்நீர் சுரப்பது இல்லை. இதனால் வாயில் உணவுப் பொருட்கள் அதிக நேரம் தங்கும் வாய்ப்பு ஏற்படுவதனால் கிருமிகள் அதிகமாகிறது. ஆகவே பற்களை தினமும் இரண்டு முறை துலக்க வேண்டியது அவசியான ஒன்றாகும்.       ==--==




பற்கள் பராமரிப்பு

பற்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் காண்பிப்பதால் என்ன பயன்?
¬  பெரும்பாலானவர்களின் பதில் ஒன்றுமில்லை என்பதுதான். ஆனால் மருத்துவர் பரிசோதனை செய்து ரத்தக் கசிவு இருக்கின்றதா? துர்நாற்றம் அடிக்கின்றதா? என்று கேள்விகளை எழுப்பும்போது அவர்களின் பதில் ஆம் என்பதே!

¬  பற்களை சுற்றி அழுக்கு ஏற்பட்டு, ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு, சீழ் வடியும் நிலையில் மட்டுமே அவர்கள் மருத்துவரை நாடுகின்றனர். இந்நிலையில் பற்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் அதிகமாகி, அருகிலுள்ள பற்களையும் பாதிக்கும் நிலைக்கு வந்து விடுகின்றது. இதனைத் தவிர்க்க வருடத்திற்கு இரண்டு முறையேனும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு பற்கள் பரிசோதனை தேவையா? அப்படியானால் அதற்கான கால அளவு எவ்வளவு?
¬  குழந்தைகள் பற்கள் முளைக்க ஆரம்பித்ததிலிருந்து 3 மாதத்திற்கு ஒரு முறை பார்ப்பது நலம். ஏனென்றால், குழந்தைகள் சாக்லெட் உள்ளிட்ட அனைத்து வகையான இனிப்பு பொருட்களையும் சாப்பிட ஆரம்பிக்கின்றார்கள். இந்நிலையில் அந்த வகை பண்டங்களினால் குழந்தைகளுக்கு அதிக பல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் உருவாவதன் காரணம் என்ன?
¬  வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கும், அல்சர் நோயுள்ளவர்களுக்கும், குடல் புண் உள்ளவர்களுக்கும், ஹெர்பிஸ் எனும் பால்வினை நோயுள்ளவர்களுக்கும் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் வாயில் புண்கள் ஏற்படுவதன் வாயிலாகவே வெளிப்படுகின்றன. மேலும் மனச்சோர்வும் வாய்ப்புண்ணிற்கு ஒரு காரணமே!

பற்களை தினமும் இரண்டு முறை துலக்க வேண்டியதன் அவசியம் என்ன?
¬  நமது நாட்டில் முக்கியமான தமிழகத்தில் நிறையபேர் இரவில் பல் துலக்குவது கிடையாது. பகலில் உமிழ்நீர் எனப்படும் நீர் சுரப்பியால் வாய் அடிக்கடி சுத்தமடைகின்றது. ஆனால் இரவில் நாம் உடல் உழைப்பிற்கு ஓய்வு கொடுப்பதன் காரணமாக வாயில் உமிழ்நீர் சுரப்பது இல்லை. இதனால் வாயில் உணவுப் பொருட்கள் அதிக நேரம் தங்கும் வாய்ப்பு ஏற்படுவதனால் கிருமிகள் அதிகமாகிறது. ஆகவே பற்களை தினமும் இரண்டு முறை துலக்க வேண்டியது அவசியான ஒன்றாகும்.







==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்