விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, April 17, 2014

உங்கள் எடை (Body Mass Index -BMI) சரியானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?


 உங்கள் எடை (Body Mass Index -BMI)   சரியானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?  ஒவ்வொருவருக்கும் தன் உடல் எடை எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய சரியான எடை அவரின் உயரத்தைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது.  அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் எடை பேணப்பட வேண்டும்  உங்கள் எடை சரியானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?  அதற்காக உடற் திணிவுச் சுட்டி (Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .  உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index -BMI)  = உங்கள் உடலின் எடை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு   அதாவது நீங்கள் 70kg எடை யும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற் தினிவுச் சுட்டி = 70 /1.6 x 1.6, = 27.3 ஆகும்   உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது எடை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?  மிகவும் எளிதானது...  உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.  	உங்கள் உயரத்திற்கு ஏற்ப எடை போதாது (Underweight ) = <18.5 	உங்கள் உடல் எடை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9 	உங்கள் உடல் எடை அதிகமானது (Overweight )= 25-29.9 	உங்கள் உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity) = 30 அல்லது அதற்கு மேலே  அதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 தை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் எடையை பெறவேண்டும் என்று அர்த்தம்.   18.5 திற்கும் 24.9 திற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் எடை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம்.   25 திற்கும் அதிகமானால் உங்கள் உடல் எடை அதிகமாகி விட்டது என்றும் , 30 திற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.



உங்கள் எடை (Body Mass Index -BMI)   சரியானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எடை எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய சரியான எடை அவரின் உயரத்தைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது.

அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் எடை பேணப்பட வேண்டும்

உங்கள் எடை சரியானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?

அதற்காக உடற் திணிவுச் சுட்டி (Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .

உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index -BMI)  = உங்கள் உடலின் எடை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு


அதாவது நீங்கள் 70kg எடை யும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற் தினிவுச் சுட்டி = 70 /1.6 x 1.6, = 27.3 ஆகும்


உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது எடை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?

மிகவும் எளிதானது...

உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

Ø  உங்கள் உயரத்திற்கு ஏற்ப எடை போதாது (Underweight ) = <18.5
Ø  உங்கள் உடல் எடை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9
Ø  உங்கள் உடல் எடை அதிகமானது (Overweight )= 25-29.9
Ø  உங்கள் உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity) = 30 அல்லது அதற்கு மேலே

அதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 தை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் எடையை பெறவேண்டும் என்று அர்த்தம்.

18.5 திற்கும் 24.9 திற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் எடை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம்.

25 திற்கும் அதிகமானால் உங்கள் உடல் எடை அதிகமாகி விட்டது என்றும் , 30 திற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.







==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்