விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 26, 2014

முகம் அழகு பெற சில எளிய வீட்டு வைத்திய முறைகள் - Simple Home Method Beauty Tips



 முகம் அழகு பெற சில எளிய வீட்டு வைத்திய முறைகள்  முகம் அழகு பெற :   துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகுபெறும்.   முகப்பருவை போக்க:   வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ முகப்பரு மறையும்.    பருத்தழும்பு மறைய:-   எலுமிச்சைச் சாற்றில் சம அளவு தேங்காயெண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் பருத்தழும்புகள் மறையும்.   முகத்தில் பருக்கள் இருந்தால், கசகசாவை தயிரில் அரைத்து முகத்தில் தடவி 3 மணி நேரம் கழித்து கழுவினால் நாளடைவில் பருக்கள் மறையும்.   முகம் வசீகரம் பெற:   ரோஜா அர்த்தர்  பூச முக வசீகரம் கூடும்.  முகப்பரு, தழும்பு:   முகப்பரு, தழும்பு ஆகியவற்றுக்கு பசலைக் கீரைச்சாறு மருந்தாக பயன்படுகிறது.   இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.   எண்ணைப் பசை:   ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.   முகத்தில் உள்ள முடிகளை அகற்ற:   முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.   வறண்ட சருமம் :   மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.   சருமம் மிகவும் மிருதுவாக:   பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.   கருமை மறைய:   ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.   சருமம் அழகாக:   பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.   சருமம் புத்துணர்ச்சி பெற:   தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.   எண்ணைப் பசை குறைய;   தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.   சுருக்கம் அகல;   தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.   முகம் பளபளப்பாக:   ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.   நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தில் சிறிது மஞ்சள் பொடியையும் கடலை மாவையும் கலந்து நன்கு குழைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் இளம் வென்னீரில் கழுவி வர, முகம் பளபளக்கும்.   முகம் அழகு :   முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.   வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வறட்டாமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.



முகம் அழகு பெற சில எளிய வீட்டு வைத்திய முறைகள்

முகம் அழகு பெற :
¬  துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகுபெறும்.

முகப்பருவை போக்க:
¬  வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ முகப்பரு மறையும்.


பருத்தழும்பு மறைய:-
¬  எலுமிச்சைச் சாற்றில் சம அளவு தேங்காயெண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் பருத்தழும்புகள் மறையும்.
¬  முகத்தில் பருக்கள் இருந்தால், கசகசாவை தயிரில் அரைத்து முகத்தில் தடவி 3 மணி நேரம் கழித்து கழுவினால் நாளடைவில் பருக்கள் மறையும்.

முகம் வசீகரம் பெற:
¬  ரோஜா அர்த்தர்  பூச முக வசீகரம் கூடும்.

முகப்பரு, தழும்பு:
¬  முகப்பரு, தழும்பு ஆகியவற்றுக்கு பசலைக் கீரைச்சாறு மருந்தாக பயன்படுகிறது.
¬  இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

எண்ணைப் பசை:
¬  ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற:
¬  முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

வறண்ட சருமம் :
¬  மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

சருமம் மிகவும் மிருதுவாக:
¬  பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

கருமை மறைய:
¬  ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

சருமம் அழகாக:
¬  பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

சருமம் புத்துணர்ச்சி பெற:
¬  தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

எண்ணைப் பசை குறைய;
¬  தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

சுருக்கம் அகல;
¬  தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

முகம் பளபளப்பாக:
¬  ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
¬  நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தில் சிறிது மஞ்சள் பொடியையும் கடலை மாவையும் கலந்து நன்கு குழைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் இளம் வென்னீரில் கழுவி வர, முகம் பளபளக்கும்.

முகம் அழகு :
¬  முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
¬  வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வறட்டாமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.







==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்