விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 19, 2014

சமூக தளங்களில் (Social Networks) பகிர கூடாத 10 தகவல்கள்



 சமூக தளங்களில் (Social Networks) பகிர கூடாத 10 தகவல்கள்   இணைய உலகில் சமூக வலைத்தளங்கள் இப்பொழுது அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இணையுலகில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்கள் பற்றி சிறிய புள்ளி விவரம். இணையம் உபயோகிப்பவர்களில் 35% மேல் குறைந்தது ஒரு தளத்திலாவது உறப்பினர் ஆகி உள்ளனர்.  இதில் 51% மேல் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட தளத்தில் உறுப்பினர் ஆக உள்ளனர்.  இதில் மூன்றில் ஒரு பங்கு 18 இருந்து 24 வயது உள்ளவர்களே. 89% நண்பர்களை பெறுவதற்காகவே இதில் உறுப்பினர் ஆகி உள்ளனர்.  இதன் படி பார்த்தால் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை உபயோகிக்கிறார்கள். அனைத்து சமூக வலை தளங்களிலும் Private என்ற ஒரு வசதி உள்ளது. ஆனால் நாம் யாரும் அதை உபயோகிப்பதில்லை. ஆகையால் நாம் சமூக வலை தளங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.   10. சுலபமான கடவுச்சொல்:  சமூக தளங்களில் நாம் உபயோகிக்கும் Password சுலபமாக கண்டுபிடிக்கும் படி வைக்க வேண்டாம். உங்கள் பெயரையோ அல்லது வேறு ஏதேனும் வார்த்தையோ அலது உங்கள் பிறந்த தேதியையோ தரவேண்டாம். இதனை ஹேக்கர்கள் சுலபமாக கண்டு பிடிக்கும் அபாயம் உள்ளது. சிறந்தது உங்கள் கடவு சொல்லுக்கு முன்னும் பின்னும் நம்பர்களை சேர்த்தல் சிறந்தது. (உ-ம்) 12xxxxxxx52   9. முகவரி மற்றும் தொலைபேசி எண்: சமுக தளங்களில் நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணையோ அல்லது உங்கள் வீட்டின் முகவரியையோ கொடுக்க வேண்டாம். இது முற்றிலும் தவறான விஷயம். இதை கண்டிப்பாக தவிருங்கள். ஏற்க்கனவே கொடுத்து இருந்தாலும் எடுத்து விடுங்கள்.இதுவும் தவறு நடக்க ஒரு விதத்தில் வாய்ப்பு உள்ளது.  8. உங்கள் குழந்தையின் பெயர்: அனைவருமே செய்கின்ற விஷயம் நம்முடைய குழந்தையின் புகைப்படத்தை நம் பேஸ்புக்கில் சேர்த்து இருப்போம் அது தவறல்ல, ஆனால் அந்த குழந்தையின் படத்திற்கு குழந்தையின் பெயரை தலைப்பாக போட்டு இருந்தால் அது தவறு தான். அதை மாற்றி விடுங்கள். உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் குழந்தையை ஏமாற்ற வழி உள்ளது. யாருக்கு என்ன தெரியும் எப்பொழுது என்ன நடக்கும் என்று நாம் கவனமாக இருப்பது நல்லது.  7.உங்கள் பிறந்த தேதி: உங்கள் வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை (credit card) ஆகியவைகள் அனைத்தும் உங்கள் பிறந்த தேதியை மையமாக வைத்தே இயங்குவதால் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. சமூக வலைதளைங்களில் நீங்கள் கொடுக்கப்படும் அனைத்து தகவல்களையும் உலகத்தின் எந்த நாட்டில் இருந்தும் பார்த்து கொள்ளலாம். அதனால் உங்கள் பிறந்த தேதியை வைத்து தவறு நடக்க வாய்ப்புள்ளது. ஆதலால் நீங்கள் உங்கள் பிறந்த தேதியை முழுமையாக கொடுக்க வேண்டாம். கொடுத்து இருந்தாலும் Edit profile சென்று மாற்றி கொள்ளுங்கள்.  6.சுற்றுலா விசேஷத்திற்கு செல்லுதல்:  நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று கூற வில்லை. ஆனால் நீங்கள் செல்லும் தகவலை சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டாம். (உதாரணாமாக நான் குடும்பத்தோடு இன்று ஊருக்கு செல்கிறேன் இதோடு பத்து நாள் கழித்து தான் வருவோம்.) இப்படி உங்கள் இதனால் பத்து நாளும் வீட்டில் யாரும் இல்லை என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள். ஆகவே போய்விட்டு வந்து கூறுவதே நல்லது. நெருங்கிய நண்பர் சொல்லியே தீர வேண்டும் என்றால் மெயிலிலோ அல்லது தொலைபேசியிலோ கூறுவது சிறந்தது.  5. உங்கள் பயனர் கணக்கு:  நீங்கள் சமூக வலைதளங்களில் உறுப்பினர் ஆகும் போது அந்த என புதிய உறுப்பினர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அனைத்து சமூக தளங்களிலும் ஜிமெயில் அல்லது யாகு மெயில் உபயோகித்தால் போதும் அதற்கு லிங்க் கொடுத்தாலே பயனர் கணக்கை ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் இதில் பாதுகாப்பு என்பது குறைவே ஆகையால் தனியாக பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுதல் சிறந்தது.  4. நண்பரை தேர்ந்தெடுத்தல்: நீங்கள் சமுக தளங்களில் உங்களுக்கு நண்பர் கோரிக்கைகள் வந்தாலோ அல்லது நீங்கள் யாருக்கேனும் நண்பர் கோரிக்கை அனுப்ப நினைத்தாலோ பொதுவான நண்பர்களை சோதித்து நமக்கு தெரிந்தவர்கள் அதில் இருக்கின்றனரா என்று அறிந்து அவர்களின் கோரிக்கையை உறுதி படுத்தவும்.  3. குழந்தைகளிடம்  குழந்தைகளுக்கு தெரியும் வண்ணம் இந்த சமூக தளங்களின் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்களும் அந்த வலைதளங்களில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும்.  2. பெண் உறுப்பினரா:  நீங்கள் பெண் உறுப்பினர் ஆக இருந்தால் உங்கள் புகைப்படத்தை சமூக தளங்களில் பகிர்வதை தவிருங்கள். இதை சில பேர் தவறாக பயன்படுத்த கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது. அதற்கு பதில் வேறு ஏதேனும் போட்டோவினை பயன் படுத்தலாம். இதை கடைபிடித்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  1. அடிமை  அனைத்து சமூக வலைதளங்களும் உறுப்பினர் ஆவதற்கு குறைந்தது 13+ வயது வரம்பை வைத்துள்ளார்கள். ஆனால் அதை நடைமுறை படுத்த எந்த வழியையும் செய்ய வில்லை. ஆகையால் சிறுவர்கள் கூட இதில் உறுப்பினர் ஆகி விடுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மணிகணக்கில் இந்த தளங்களில் நேரங்களை செலவிடுகிறார்கள் போக போக இதற்க்கு அடிமையாகவே மாறி விடுகிறார்கள். படிக்கும் நேரங்களில் கூட படிக்காமல் இந்த தளங்களில் நேரங்களை செலவிடுகின்றார்கள். இதை கண்காணிப்பது அனைத்து பெற்றோரின் கடைமையாக உள்ளது. அவர்கள் கணினியில் என்ன செய்கிறாகள் என்பதை கவனித்து அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கவும்.



சமூக தளங்களில் (Social Networks) பகிர கூடாத 10 தகவல்கள்


இணைய உலகில் சமூக வலைத்தளங்கள் இப்பொழுது அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இணையுலகில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்கள் பற்றி சிறிய புள்ளி விவரம். இணையம் உபயோகிப்பவர்களில் 35% மேல் குறைந்தது ஒரு தளத்திலாவது உறப்பினர் ஆகி உள்ளனர்.

இதில் 51% மேல் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட தளத்தில் உறுப்பினர் ஆக உள்ளனர்.

இதில் மூன்றில் ஒரு பங்கு 18 இருந்து 24 வயது உள்ளவர்களே.
89% நண்பர்களை பெறுவதற்காகவே இதில் உறுப்பினர் ஆகி உள்ளனர்.

இதன் படி பார்த்தால் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை உபயோகிக்கிறார்கள். அனைத்து சமூக வலை தளங்களிலும் Private என்ற ஒரு வசதி உள்ளது. ஆனால் நாம் யாரும் அதை உபயோகிப்பதில்லை. ஆகையால் நாம் சமூக வலை தளங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.

10. சுலபமான கடவுச்சொல்:
சமூக தளங்களில் நாம் உபயோகிக்கும் Password சுலபமாக கண்டுபிடிக்கும் படி வைக்க வேண்டாம். உங்கள் பெயரையோ அல்லது வேறு ஏதேனும் வார்த்தையோ அலது உங்கள் பிறந்த தேதியையோ தரவேண்டாம். இதனை ஹேக்கர்கள் சுலபமாக கண்டு பிடிக்கும் அபாயம் உள்ளது. சிறந்தது உங்கள் கடவு சொல்லுக்கு முன்னும் பின்னும் நம்பர்களை சேர்த்தல் சிறந்தது. (-ம்) 12xxxxxxx52

9. முகவரி மற்றும் தொலைபேசி எண்:
சமுக தளங்களில் நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணையோ அல்லது உங்கள் வீட்டின் முகவரியையோ கொடுக்க வேண்டாம். இது முற்றிலும் தவறான விஷயம். இதை கண்டிப்பாக தவிருங்கள். ஏற்க்கனவே கொடுத்து இருந்தாலும் எடுத்து விடுங்கள்.இதுவும் தவறு நடக்க ஒரு விதத்தில் வாய்ப்பு உள்ளது.

8. உங்கள் குழந்தையின் பெயர்:
அனைவருமே செய்கின்ற விஷயம் நம்முடைய குழந்தையின் புகைப்படத்தை நம் பேஸ்புக்கில் சேர்த்து இருப்போம் அது தவறல்ல, ஆனால் அந்த குழந்தையின் படத்திற்கு குழந்தையின் பெயரை தலைப்பாக போட்டு இருந்தால் அது தவறு தான். அதை மாற்றி விடுங்கள். உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் குழந்தையை ஏமாற்ற வழி உள்ளது. யாருக்கு என்ன தெரியும் எப்பொழுது என்ன நடக்கும் என்று நாம் கவனமாக இருப்பது நல்லது.

7.உங்கள் பிறந்த தேதி:
உங்கள் வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை (credit card) ஆகியவைகள் அனைத்தும் உங்கள் பிறந்த தேதியை மையமாக வைத்தே இயங்குவதால் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. சமூக வலைதளைங்களில் நீங்கள் கொடுக்கப்படும் அனைத்து தகவல்களையும் உலகத்தின் எந்த நாட்டில் இருந்தும் பார்த்து கொள்ளலாம். அதனால் உங்கள் பிறந்த தேதியை வைத்து தவறு நடக்க வாய்ப்புள்ளது. ஆதலால் நீங்கள் உங்கள் பிறந்த தேதியை முழுமையாக கொடுக்க வேண்டாம். கொடுத்து இருந்தாலும் Edit profile சென்று மாற்றி கொள்ளுங்கள்.

6.சுற்றுலா விசேஷத்திற்கு செல்லுதல்:
நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று கூற வில்லை. ஆனால் நீங்கள் செல்லும் தகவலை சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டாம். (உதாரணாமாக நான் குடும்பத்தோடு இன்று ஊருக்கு செல்கிறேன் இதோடு பத்து நாள் கழித்து தான் வருவோம்.) இப்படி உங்கள் இதனால் பத்து நாளும் வீட்டில் யாரும் இல்லை என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள். ஆகவே போய்விட்டு வந்து கூறுவதே நல்லது. நெருங்கிய நண்பர் சொல்லியே தீர வேண்டும் என்றால் மெயிலிலோ அல்லது தொலைபேசியிலோ கூறுவது சிறந்தது.

5. உங்கள் பயனர் கணக்கு:
நீங்கள் சமூக வலைதளங்களில் உறுப்பினர் ஆகும் போது அந்த என புதிய உறுப்பினர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அனைத்து சமூக தளங்களிலும் ஜிமெயில் அல்லது யாகு மெயில் உபயோகித்தால் போதும் அதற்கு லிங்க் கொடுத்தாலே பயனர் கணக்கை ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் இதில் பாதுகாப்பு என்பது குறைவே ஆகையால் தனியாக பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுதல் சிறந்தது.

4. நண்பரை தேர்ந்தெடுத்தல்:
நீங்கள் சமுக தளங்களில் உங்களுக்கு நண்பர் கோரிக்கைகள் வந்தாலோ அல்லது நீங்கள் யாருக்கேனும் நண்பர் கோரிக்கை அனுப்ப நினைத்தாலோ பொதுவான நண்பர்களை சோதித்து நமக்கு தெரிந்தவர்கள் அதில் இருக்கின்றனரா என்று அறிந்து அவர்களின் கோரிக்கையை உறுதி படுத்தவும்.

3. குழந்தைகளிடம்
குழந்தைகளுக்கு தெரியும் வண்ணம் இந்த சமூக தளங்களின் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்களும் அந்த வலைதளங்களில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும்.

2. பெண் உறுப்பினரா:
நீங்கள் பெண் உறுப்பினர் ஆக இருந்தால் உங்கள் புகைப்படத்தை சமூக தளங்களில் பகிர்வதை தவிருங்கள். இதை சில பேர் தவறாக பயன்படுத்த கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது. அதற்கு பதில் வேறு ஏதேனும் போட்டோவினை பயன் படுத்தலாம். இதை கடைபிடித்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

1. அடிமை

அனைத்து சமூக வலைதளங்களும் உறுப்பினர் ஆவதற்கு குறைந்தது 13+ வயது வரம்பை வைத்துள்ளார்கள். ஆனால் அதை நடைமுறை படுத்த எந்த வழியையும் செய்ய வில்லை. ஆகையால் சிறுவர்கள் கூட இதில் உறுப்பினர் ஆகி விடுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மணிகணக்கில் இந்த தளங்களில் நேரங்களை செலவிடுகிறார்கள் போக போக இதற்க்கு அடிமையாகவே மாறி விடுகிறார்கள். படிக்கும் நேரங்களில் கூட படிக்காமல் இந்த தளங்களில் நேரங்களை செலவிடுகின்றார்கள். இதை கண்காணிப்பது அனைத்து பெற்றோரின் கடைமையாக உள்ளது. அவர்கள் கணினியில் என்ன செய்கிறாகள் என்பதை கவனித்து அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கவும்.






==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்