விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, August 28, 2014

விக்கல் என்றால் என்ன? Hiccough




 விக்கல் சிகிச்சை சென்னை hiccough treatment



இருமல், தும்மல், விக்கல் இதெல்லாம் எப்போது வரும் என சொல்ல முடியாது. ஆனால், விக்கல் என்னவோ சரியாக வரக்கூடாத நேரத்தில்தான் கண்டிப்பா வரும். அப்படி வரும்போது தடுக்கவும் முடியாது.

ஆனால், விக்கல் வந்தால் எப்படி நிறுத்துவது?

ஒவ்வொரு முறையும் விக்கல் வரும்போதும், விக்கல் ஏன் வருகிறது எண்ணுகிறோமே தவிர, தற்கான அறிவியல் காரணத்தை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியதுல்லை!


விக்கல் என்றால் என்ன?

டயாஃப்ரம் - Diaphragm என்மெல்லிய சவ்வு போன்ற ஒரு படலம் நம் மார்பகத்தில் இருக்கிறது. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது.

விக்கல் என்பது அடிப்படையில் டயாஃப்ரம்” Diaphragm எனும் சவ்வின் சுருங்குதலேஆகும்.
டயாஃப்ரம் சுருங்குவது நாம் சுவாசிப்பதற்கே. ஃப்ரெனிக் நெர்வ்ஸ் -  Phrenic nerves எனும் ஒரு வகை நரம்புகள்.  இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித அரிப்பு irritation  காரணமாக டயாஃப்ரமானது திடீரென்று வேகமாக சுருங்குவதால்அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை தவிர்க்க, எபிகுலோட்டிஸ்  எனும் சுவாசக்குழாயின் மூடியானது கண்ணிமைக்கும் நேரத்தில் மூடிக்கொள்ளும். அதனால் ஏற்படும் ஒரு வித விக் விக்எனும் சப்தத்தைதான் நாம் விக்கல் என்கிறோம்! 

விக்கல் எப்போதும் திடீரென்று, தன்னிச்சையாக ஏற்படும் உடலுக்கு அவசியமில்லாத, நம்மை மிகவும் சிரமப்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஆய்வு! 

நன்றாக வயிறு நிறைய சாப்பிட்ட பின்னும், உடற்பயிற்சி அல்லது மனச்சுமை காரணமாகவும் விக்கல் வரலாமாம்! 

ஆனால், ஓவ்வொரு முறை விக்கல் வருவதற்கும் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லையாம்


விக்கலை நிறுத்த ஒரு சில வழிகள்…..

1.
சில வினாடிகள் மூச்சை நிறுத்துவது

2.
திடீரென்று எதிர்பாராதவிதமாக பயமுறுத்துவது

3.
ஒரே மூச்சில் நிறைய தண்ணீர் குடிப்பது

விக்கல் எப்படி நின்றுபோகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? மேலே சொன்ன எல்லா வழிகளுமே சுவாசத்தைத் தற்காலிமாக சில வினாடிகள் நிறுத்திவிடுகிறது. அதனால் விக்கல் நின்றுவிடுகிறது.

தொடர்ந்து விக்கல் இருந்தால் வேறுசில நோய்கள் இருக்கலாம்.

எனவே தொடர்ந்து விக்கல் இருந்தால் முழுமையான மருத்துவ பரிசோதனையும் மருத்துவரின் ஆலோசனையும் மிக அவசியம்.






==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்