விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 6, 2015

How to Prevent Sun Stroke - Heat Stroke and First Aid, வெயிலினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து எப்படி தப்பிப்பது?




 ஆண்மைக்குறைவு சிறப்பு மருத்துவர் வேளச்சேரி,



வெயில் மயக்கம் அல்லது வெப்பவலிப்பு

வெப்பவலிப்பு என்றால் என்ன?
வெயில் மயக்கம் அல்லது வெப்பமயக்கம் எனப்படுவது ஒரு உயிரினை குடிக்கும் ஒரு நிலையாகும். அதிக வெய்யில் அல்லது வெப்பநிலைக்கு உடல் ஆட்படுத்தப்படும் போது உடலின் வெப்பநிலையினை ஒழுங்குபடுத்தும் அமைப்பு செயல்படாமல் போகிறது. அதிக வெப்பமான சுற்றுச்சூழல் அல்லது அதிகமான உடலியக்கம் போன்ற சூழ்நிலைகளில் உடலின் அதிகப்படியான வெப்பத்தினை அதனால் வெளியேற்ற முடியாது. உடலின் அதிக வெப்பநிலை உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் செயல்படுத்துவதை நிறுத்திவிடும்.

இவ்வெப்பமயக்கம் உடல் வெப்பநிலை சம்பந்தப்பட்ட தீவிரமான நிலையாகும். இந்நிலை அதிக வெப்பநிலையில் கடினமான வேலை செய்யும்போது அல்லது உடற்பயிற்சி செய்வது ஆகிய சூழ்நிலைகளுடன் போதுமான தண்ணீர் அல்லது திரவ உணவுகளை சாப்பிடாதது போன்ற காரணத்தால் ஏற்படுகிறது.


யாருக்கு வெப்ப மயக்கம் ஏற்படும்?
எவருக்கு வேண்டுமானாலும் வெப்ப மயக்கம் ஏற்படலாம் எனினும் சிலர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் அதிக வெய்யிலுக்கு பழகாதவர்கள் போன்றவர்கள் அதிகம் இந்நிலையினால் பாதிக்கப்படுகின்றனர். சில மருந்துகளும் மனிதர்களை இந்நிலையினால் அதிகம் பாதிப்படைவதற்குள்ளாக்கும்.


வெப்பமயக்கத்தின் அல்லது வெப்ப வலிப்பின் அறிகுறிகள் என்ன?
வெப்பமயக்கத்தின் முதல் அறிகுறி உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதாகும். (அதாவது 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல்). மனநிலை பாதிப்படைதல் அதாவது குழப்பமடைதல், கோமா. தோல் காய்ந்தும் சூடாகவும் காணப்படாது. அதிக வேலை அல்லது களைப்பினால் வெப்பமயக்கம் உண்டானாலும் தோல் ஈரப்பதத்துடனே இருக்கும்.

இதர அறிகுறிகளாவன:
v  நாடித்துடிப்பு அல்லது இதயத்துடிப்பு அதிகரித்தல்
v  சுவாசித்தலின் எண்ணிக்கை அதிகரித்தல்
v  அதிகமான அல்லது குறைந்த இரத்தஅழுத்தம்
v  குழப்பம்,எளிதில் உணர்ச்சிவசப்படுதல், சுயநினைவின்மை
v  மயக்கம் வருவது போன்ற உணர்வு
v  தலைவலி
v  வாந்தி
v  மயக்கம்-இது வயதானவர்களில் வெப்பமயக்கத்தின் முதல் அறிகுறியாகும்

வெப்பமயக்கம் தொடர்ந்து இருந்தால் கீழ்க்கண்ட தீவிர அறிகுறிகள் காணப்படலாம்
Ø  மனக்குழப்பம்
Ø  அதிகமான மூச்சிரைப்பு
Ø  உடல் மரத்தல்
Ø  கைகளிலும், கால்களிலும் வலியுடன் கூடிய வலிப்பு
Ø  வலிப்பு
Ø  கோமா


முதலுதவி
ü  வெயிலிலிருந்து பாதிக்கப்பட்டவரை அகற்றி நிழலான அல்லது குளிரூட்டப்பட்ட இடத்தில் அமரவைக்கவேண்டும்
ü  பாதிக்கப்பட்டவரை படுக்கவைத்து அவரின் கால்களை சற்று உயர்த்திவைக்கவும்
ü  அவரின் உடைகளை தளர்த்திவிடவும்
ü  குளிர்ந்த தண்ணீர் அல்லது ஆல்கஹால், கஃபின் கலக்காத திரவத்தை குடிப்பதற்கு கொடுக்கவும்
ü  தண்ணீர் தெளிப்பது அல்லது குளிர்ந்த தண்ணீரால் நனைத்த ஈரத்துணியால் பாதிப்பப்படவரை துடைத்து விசிறுதல்
ü  பாதிக்கபட்டவரை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கவேண்டும். ஏனெனில் உடல் வெப்பநிலை அதிகரித்து பின்னர் வெப்பவலிப்பாக மாறுவதற்கு வாய்ப்புண்டு.

முதலுதவிகள் செய்த பின்பும் உடல் வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருத்தல், வலிப்பு, குழப்பம், மயக்கம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அவரை உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவேண்டும்

 ஓமியோபதி சிறப்பு மருத்துவர் சென்னை, மருத்துவர் செந்தில் குமார் தண்டபானி


எப்படி வெப்பவலிப்பினை தடுப்பது?
வெப்பவலிப்பினை தடுப்பதற்கு அதிக திரவ உணவினை எடுத்துக்கொள்ளவேண்டும். வெயிலில் அல்லது வெளியில் வேலை செய்யும்போது உடல் வெப்பநிலையினை சாதாரணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். குடிப்பழக்கத்தினை விடுவது, கஃபின் போன்றவற்றை எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும். ஏனெனில் இப்பொருட்கள் உடலிலிருந்து அதிகமாக நீரினை வெளியேற்றும். வெளிறிய நிறமுடைய, தளர்வான ஆடைகளை அணியவேண்டும். வேலைக்கு இடையில் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு உடலிலுள்ள தண்ணீரின் அளவினை பராமரிக்க வேண்டும்





==--==


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்