விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, March 19, 2015

Ovarian Cancer – ஓவேரியன் கேன்சர் ஓமியோபதி சிகிச்சை, Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai, Tamil Nadu




 Ovarian Cancer – ஓவேரியன் கேன்சர் ஓமியோபதி சிகிச்சை, Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai, Tamil Nadu



Ovarian Cancer – ஓவேரியன் கேன்சர் ஓமியோபதி சிகிச்சை

உலகில் அதிக அளவில் பெண்கள் முட்டைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முட்டைப்பை புற்றுநோய் ஒவேரியன் கேன்சர் – Ovarian Cancer என்பது அறிகுறிகள் இல்லாமல் ஆளைக் கொல்லும் ஒரு நோய் ஆகும். ஆனால் இது இந்தியாவில் சற்று குறைவு என்று மருத்துவர்களின் கணிப்புகள் கூறுகின்றன. இந்த நோய் தாமதமாகத்தான் கண்டறியப்படுகிறது. அதனால் உயிர்பலிக்கு காரணமாகிவிடுகிறது.

முட்டைப்பை புற்று நோயானது முட்டைப்பையின் செல்களை பாதிக்கிறது. ஆகவே, அது எவ்வகை செல்களை பாதிக்கிறது? என்பதைப் பொறுத்தே புற்றுநோய் வகைப்படுத்தப்படுகிறது.
Ø  'எபித்தீலியல் ஓவரியன் கார்சினமோ' Epithelial Ovarian Carcinoma முட்டைப்பையின் படிமச் செல்களை பாதிக்கிறது.
Ø  'ஜெர்ம் செல் கார்சினமோ'  Germ Cell Carcinoma முட்டை உருவாக்கும் செல்களை பாதிக்கிறது.
Ø  'ஸ்ட்ரோமல் கார்சினமோ' Stromal Carcinoma முட்டைப்பையின் திசுக்களை பாதிப்பதுடன் ஈஸ்ட்ரோஜன்  Estrogen மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் Progesterone  ஹார்மோன்களை உருவாக்கும் செல்களையும் பாதிக்கிறது.

'எபித்லியஸ் ஓவரியன் கார்சினமோ' மிகவும் ஆபத்தானது.
40 வயதிற்கும் குறைவாக உள்ள பெண்கள் மத்தியில் முட்டைப்பை புற்றுநோய் குறைவாக காணப்படுகிறது. போஸ்ட் மெனோபாசல் Post Menopausal  நிலையில் உள்ள பெண்களையே இவ்வகை பாதிக்கிறது. பரம்பரை காரணமாகவும் சிலருக்கு முட்டைப்பை புற்றுநோய் ஏற்படக்கூடும். அதாவது குடும்பத்தில் பெற்றோருக்கு மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் இருப்பின் இந்த நோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இதேபோல் குழந்தையில்லாதவர்கள், இளம் வயதிலேயே பூப்படைந்தவர்கள், தாமதமாக இறுதி மாதவிடாய் அடைந்தவர்களுக்கும் இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைப் பேறுக்காக நெடுநாட்கள் எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகளாலும் முட்டைப்பை புற்றுநோய் ஏற்படும்.

ஹார்மோன் சிகிச்சை அதாவது 'ஈஸ்ட்ரோஜன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி Estrogen Replacement Therapy ERT', 'ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி Hormone Replacement Therapy HRT' போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் முட்டைப்பை புற்றுநோய் ஏற்படுகிறது.

இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினம். இதன் அறிகுறியாக சிலருக்கு
Ø  செரிமானமின்மை Indigestion,
Ø  வயிறு உப்பி Bloating Abdomen காணப்படும்.
Ø  சிலருக்கு உடல் எடை வெகுவாக குறையும் Loss of Weight. முதுகுவலி Lower back ache,
Ø  மயக்கம் Vertigo,
Ø  அடிவயிற்றில் வலி ஏற்படும் Lower Abdomen Pain.

இவ்வகை அறிகுறிகள் சாதாரணம் என்பதால் பெண்கள் அதை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அதே சமயம் மற்றவகை புற்றுநோய்களின் அறிகுறிகள் எளிதில் தென்பட்டுவிடும். சி.டி.ஸ்கேன் CT Scan, அடிவயிறு பரிசோதனைகள் மற்றும் சி..125 மூலம் முட்டைப்பை, குடல் புற்றுநோய் இருப்பின் அவர்களுக்கு 'மார்பக புற்றுநோய் ஜீன்ஸ்', 'பி.ஆர்.சி..', மற்றும் 'பி.ஆர்.சி.2' உள்ளதா? என்று கண்டறிவது நல்லது. அதனால் பரம்பரையில் யாருக்காவது புற்றுநோய் இருப்பின் கண்டிப்பாக மற்றவருக்கும் புற்றுநோய் வரும் என்று கூறமுடியாது.

புற்று நோய் வரமலிருக்க தடுப்பு முறைகள்
ü  முட்டைப்பை புற்றுநோய் வராமல் தடுக்க உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானிய வகைகள் அதிகம் இடம்பெறச் செய்ய வேண்டும்.
ü  உடற்பயிற்சி மூலம் உடல் எடையைச் சரிவர பராமரிக்க வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் வருடாந்திர பரிசோதனைகள் கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்.

ஆங்கில மருத்துவம்:
¬  மற்றவகை புற்றுநோய் போல் முட்டைப்பை புற்றுநோய்க்கும் அறுவை சிகிச்சை Surgery, கீமோதெரபி Chemotherapy என்று இருவகை சிகிச்சைகள் தேவைப்படும்.
¬  இதில் பாதிக்கப்பட்ட உறுப்பு அதாவது முட்டைப்பைகள் மற்றும் கருப்பையையே அகற்ற வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். மூன்று மாத கால இடைவெளி என்ற அடிப்படையில் சுமார் மூன்று முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும்.
¬  இவ்வகை அறுவை சிகிச்சையின் வெற்றி என்பது செய்யும் மருத்துவ நிபுணரைப் பொறுத்தது. 'கைனகாலஜிஸ்ட் ஆன்காலஜிஸ்ட் Gynecologist Oncologist', என்பவர் இனப்பெருக்க மண்டலம் தொடர்பான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
¬  'கீமோ தெரபி' மூலம் நல்ல செல்களும் அழிய வாய்ப்பிருக்கிறது. புற்றுநோய் செல்களை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இதற்கு வேறொன்றும் செய்ய முடியாது.


கருப்பை புற்று நோய் ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தரி – 46, கருப்பை பிரச்சனைகள்,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்