விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 18, 2015

புரோஸ்டேட் Prostate சுரப்பி நோய் ஓமியோபதி சிகிச்சை,வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு
 புரோஸ்டேட் Prostate  சுரப்பியில் ஏற்படும் நோய்களுக்கான சிறப்பு ஓமியோபதி சிகிச்சை மையம், ,வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு - Prostate Problems Homeopathy Specialty Treatment Clinic, Velachery, Chennai, Tamil nadu,புரோஸ்டேட் Prostate  சுரப்பியில் ஏற்படும் நோய்கள்

புரோஸ்டேட் - Prostate
புரோஸ்டேட், சிறுநீர்ப்பையுக்கு சற்று கீழே, குதத்துக்கு முன்னால் அமைந்திருக்கும் ஒரு சுரப்பியாகும். சிறுநீர்  இச்சுரப்பியினுள் செல்லும். இது சிறுநீர் மற்றும் விந்து நீரை வெளியேற்றும்.

புரோஸ்டேட்டுக்கு சற்று மேல் விந்தை உற்பத்தி செய்யும் பைகள் காணப்படும்.
.
புரோஸ்டேட் சுரப்பியின் வேளைகள்
இது விந்து திரவத்தின் ஒரு பகுதியை (25-30%) சுரக்கின்றது. இந்த திரவமானது சிறிதளவு காரத்தன்மை கொண்ட பால்நிறத்தில் இருக்கும். இக்காரத்தன்மை, பெண்ணின் யோனியில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கி, விந்தின் செயற்பாட்டுக்கு உதவும். புரொஸ்டேட் நீர் முதலில் வெளியேறும்.. இது விந்து சுலபமாக வெளியேற உதவும்.

புரொஸ்டேட் நோய் அறிகுறிகள்
¬  குறைந்த அளவு சிறுநீர் வெளியாதல். – Passing Low Quantity of Urine,
¬  சிறுநீர் கழித்தலை ஆரம்பிப்பதில் தாமதம்.- Delay to start urination,
¬  தொடர்ச்சியற்ற சிறுநீர் பாய்ச்சல். Disturbed flow when passing urination,
¬  சிறுநீர் கழிந்த பின், சில சொட்டுக்கள் வெளிவிடப்படல். Drop like urine comes from penis After passing urine.
¬  சிறுநீர்பையை முற்றாக வெளியேற்ற முடியாத நிலை. Not able to empty the urinary Bladder,
¬  அடிக்கடி சிறுநீர் கழித்தல். – Frequently passing urine,
¬  தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறுதல். – Urine comes without conscious.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால்,
கீழ்கண்ட நோய்களுக்கான ஆரம்ப நிலையாக இருக்கலாம்.
Ø  புரொஸ்டேட் வீக்கம். Prostate Hypertrophy
Ø  புரொஸ்டேட் புற்றுநோய். Prostate Cancer,
Ø  சிறுநீர் குழாய் அடைப்பு. – Hydroneprosis
Ø  மருந்து வகைகள். – Some Medicines Intake
Ø  நரம்பு பிரச்சினைகள். Some Nervous Problems
Ø  நோய் தொற்று. Urinary Infections
Ø  சிறுநீர்ப்பை புற்றுநோய். Bladder Cancer
Ø  சிறுநீர்ப்பை கற்கள். Renal Kidney Stones

புரொஸ்டேட் வீக்கம் - Prostate Hypertrophy
இது 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான விஷயமாகும். இதற்குரிய சரியான காரணம் தெரியாவிட்டாலும், ஹார்மோன் மாற்றங்கள் காரணமாயிருக்கலாம் என கருதப்படுகின்றது.

புரொஸ்டேட் புற்றுநோய் -Prostate Cancer
இது புரொஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் ஆகும். இது ஆரம்பத்தில் குணப்படுத்த முடியவில்லை எனில், முழுவதும் பரவக்கூடியது. புரொஸ்டேட் புற்றுநோய் மிக மெதுவாக வளரும் புற்றுநோய் ஆகும். முறையான சிகிச்சை மூலம் பயமின்றி வாழ்நாளை கழிக்கலாம்.

புரோஸ்டேட் பிரச்சனையை எவ்வாறு கண்டுபிடிப்பது
குத-விரல் பரிசோதனை
இதன் போது,  கை உறை அணிந்து விரலை குதத்தினுள் செலுத்தி புரொஸ்டேட்டின் அளவு, அதன் வடிவம், மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பன பரிசோதிக்கலாம். இதன் மூலம், புற்றுநோயை வீக்கத்திலிருந்து வேறுபடுத்தலாம்.

PSA இரத்த பரிசோதனை
PSA என்பது புரொஸ்டேட் இனால், உருவாக்கப்படும் புரதம் ஆகும். இது மிகக்குறைந்தளவிலேயே இரத்த ஓட்டத்தை அடையும். எனினும், புரொஸ்டேட் நோய் நிலைகளில் இதன் அளவு அதிகரித்து- அதிகளவு   ரத்தத்தை சென்றடையும். எனவே, ரத்தத்தை பரிசோதித்து, புரொஸ்டேட் நோய் நிலைகளை கண்டறியலாம்.

PSA அளவுகள்
<4 ng/ml   -       சாதாரணம்
4-10 ng/ml -       நடு நிலை
>10 ng/ml  -       அதிகம்
இவை அனைத்து PSA நோய்நிலைகளிலும் அதிகரிப்பதால், ஒன்றிலிந்து ஒன்று வேறுபடுத்தி அறிய உகந்த பரிசோதனை அல்ல.

புரொஸ்டேட் ஸ்கேன் - USG Prostate
இதன் மூலம் புரொஸ்டேட்டின் அளவை பற்றி சரியான ஓர் முடிவு எடுக்கலாம்.

புரொஸ்டேட் நோய் சிகிச்சை
தற்போது, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளதால், முன்கூட்டி அறிந்து சிகிச்சை மேற்கொண்டால், நல்ல பலன் பெறலாம்.


புரோஸ்டேட் நோய் ஓமியோபதி சிகிச்சை
புரோஸ்டேட் நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.புரோஸ்டேட் நோய் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற Prostate problems BPH, பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 56, புரோஸ்டேட் நோய், Prostate problem – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்