விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, April 23, 2015

தும்மல் பிரச்சனைகள் ஓமியோபதி சிகிச்சை மையம் சென்னை,– Sneezing Problems Homeopathy Treatment Clinic, Chennai, Velachery, sneezing homeopathy treatment chennai, தும்மல் ஓமியோ சிகிச்சை, சென்னைதும்மல் பிரச்சனைகள் – Sneezing Problems

தும்மல் என்றால் என்ன?
v  தும்மல் என்பது ஒரு நோயல்ல. நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள், நமது உடலுக்குள் குறிப்பாக, மூக்கின் வழி செல்கையில், அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளை, அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை ஏற்படுத்துகிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.

தும்மல் ஒவ்வாமை
  • நமது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் உள்ளே நுழைகையில் அதனை தெரியப்படுத்த மனித உடலில் இரு உறுப்புகள் உதவுகின்றன. ஒன்று தோல் பகுதி. இன்னொன்று மூக்கு. அதிலும் தோலைக் காட்டிலும் மூக்கானது மிக நுட்பானது. தோல் உடலில் தடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையை அறிவிக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம். ஒரு சில மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாதபோது உடலில் தடிப்பு ஏற்படுவது. அதேபோல் மூக்கானது ஒவ்வாமையை தெரியப்படுத்த மூளையின் உத்தரவுபடி தும்மலை உண்டாக்குகிறது.
  • ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு தும்மல் என்பதே பெரும்பாலும் வரக்கூடாது. தும்மல் வருகிறதென்றாலே அவர் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்றே கருத வேண்டும். ஒருவருக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தும்மல் வரத் தொடங்குகிறது. சிலருக்கு குளிர்ந்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது. இன்னும் சிலருக்கு பெட்ரோல் வாசனை, பூக்களின் மகரந்தத் துகள்கள், தூசி, வாகனப் புகை, நாய், பூனை போன்ற பிராணிகளின் முடி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட ஒத்துக்கொள்ளாத பொருட்களை ஒருவர் நுகர நேருகிறபோது, தும்மலானது ஆரம்பித்துவிடுகிறது. அதை நிறுத்த வேண்டுமெனில் உடனடியாக அந்த ஒத்துக்கொள்ளாத பொருள், நம் உடலை அண்டாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

தும்மலால் உண்டாகும் நோய்கள்
Ø  Allergic Rhinitis எனப்படும் பிரச்னை உண்டாகிறது. அதாவது, மூக்கின் உள்சவ்வுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, மூக்கானது முழுவதுமாக அடைத்துக்கொள்ளும்.
Ø  Nasal Polyp நேசல் பாலிப் என்னும் மூக்கில் சதை வளர்ச்சி.
Ø  Fungal Sinusitis பூஞ்சைக் காளான்
Ø  Infection Sinusitis சைனஸ் அறைகளில் வீக்கமேற்பட்டு சீழ் நிறைந்த கட்டி

வைரசினால் தும்மல் வருமா?
¬  ஒருவருக்கு தும்மல் இருவகைகளில் ஏற்படலாம். ஒவ்வாமையினால் ஏற்படும் தும்மல், அடுத்தவரை தொற்றாது. தும்மும் நபர் தவிர, இந்த வகையால் பிறருக்கு பாதிப்பில்லை. ஆனால் கவனிக்காமல்விட்டால் பிரச்னைதான். ஆனால் ஜலதோஷம் போன்ற வைரஸால் உண்டாகும் நோய்களின்போது தும்மல் வரும் பட்சத்தில், அது அடுத்தவரை நிச்சயம் பாதிக்கும். ஆனால், இப்படி வைரஸால் உண்டான ஜலதோஷ தும்மலின் ஆயுட்காலம் வெறும் ஏழு நாட்களே. காரணம், ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் வாழ்நாள் வெறும் ஏழு நாட்கள் என்பதால்தான். அதனால் வைத்தியம் எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ஒரு வாரத்தில் தானாக அது சரியாகிவிடும்.

குழந்தைகளுக்கு தும்மல் வருமா
ü  சில குழந்தைகள் பிறந்த முதல் நாளிலிருந்தே தும்மத் தொடங்கிவிடுகின்றன. உடனே அம்மாவின் ஒவ்வாமை பிரச்னையால்தான் இவ்வாறு உண்டானது என்று கூறுவது தவறு. ஏனெனில் ஒவ்வாமை பரம்பரை நோயன்று, இயல்பாகவே அக்குழந்தைக்கு ஒவ்வாமை பிறக்கும்போதே இருந்திருக்கலாம். இப்படி பிறக்கும்போதே ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்தான் பின்னாட்களில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க குழந்தைகளை மிகக் கவனத்துடன் வளர்க்க வேண்டும். தும்மலை அலட்சியப்படுத்தாது ஆரம்ப நிலையிலேயே மருதூதுவர்களிடம் காட்டி, அவர்களின் எதிர்காலத்தை பிரச்னையில்லாததாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

தும்மலுக்கான மருந்துகள்
Ø  பொதுவாக ஜலதோஷம் தொடர்பான வைரஸ் தும்மலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அது ஒரு வாரத்தில் குணமாகிவிடும். ஆனால், இன்னொரு வகையான ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலுக்குத்தான் பல நிலைகளில் வைத்தியம் பார்க்க வேண்டும். சிலர் தானாகவே ஆன்ட்டி அலர்ஜி மருந்துகளான அவில் Avil, செட்ரிசின் Cetrizine போன்ற மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். அது ஆரம்பநிலையில் குணமாவது போல தோன்றினாலும் நிறைய பக்கவிளைவுகளும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே சுய மருத்துவம் கூடாது.


தும்மல் பிரச்சனைகள் ஓமியோபதி சிகிச்சை,
தும்மல் பிரச்சனைகள் நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.Dust allergy, Sneezing, ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற Dust allergy, sneezing, nose block,running nose, allergic rhinitis, பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 தும்மல் அலர்ஜிக் ரைனைட்டிஸ், Allergic Rhinitis, Sneezing,  – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


Please Contact for Appointment

பிரபல பதிவுகள்