விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, April 10, 2015

டான்சிலைட்டிஸ் - அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம், Tonsillitis Treatment without Surgery tonsilitis treatment without surgery chennai
தொண்டையில் வரும் நோய்களும் அதற்கான மருத்துவமும்

தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்?
தொண்டை நோய்களில் அநேகம் பேரை பாதிப்பவை
Ø  குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல்,
Ø  பெரியவர்களுக்கு தொண்டை வலி,
Ø  சரியாக உணவு உண்ண இயலாமை,
Ø  குரல் மாற்றம்,
Ø  தொண்டையில் புற்றுநோய்,
Ø  வாய்ப்புண்,
Ø  பான்பராக்கினால் வரும் வியாதிகள்,
இவை தான் முதலிடம் வகிக்கின்றன.


குழந்தைகளை பாதிக்கும் டான்சிலைட்டிஸ்தொண்டையில் சதை வளர்ச்சி,
குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றால் நாம் உடனே குழந்தைக்கு உணவு பிடிக்கவில்லை என்று நினைப்போம். ஆனால் அது டான்சிலைட்டிஸ் அல்லது அடினைட்டிஸ் ஆக கூட இருக்கலாம். குழந்தையின் வாயைத் திறக்கச் செய்து, தொண்டையில் சதை பெரியதாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். மிகச் சாதாரணமாக தொண்டையில் சதை குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு டான்சிலைட்டிஸ் என்று பெயர்.

குழந்தைகளின் 12-வது வயது வரை இந்த சதை காணப்படலாம். அதற்கு பிறகுகூட சிலருக்கு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்பொழுதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டும். இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால்வலி வரும். தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடும்.
இந்த வியாதி சில குழந்தைகளுக்கு அடிக்கடி வரலாம். இதற்கு நாள்பட்ட தொண்டை சதை அழற்சி Chronic Tonsillitis என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன.

டான்ஸிலைட்டிஸ்க்கு அறுவை சிகிச்சை அவசியமா.
டான்சில்சை போலீஸ் மென் ஆப் பாடி – Police Men of the Body என்று கூறுவார்கள். டான்சில்ஸ் உடலுக்கு வரவிருக்கும் ஆபத்தினை தொண்டையிலேயே நிறுத்தி உடலை பாதுகாக்கிறது. எனவே அறுவை சிகிச்சை மேற்கொள்வதென்றால் நன்கு யோசித்து மேற்கொள்ளவேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பு வேறு ஒரு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் வாங்கிக்கொள்வது நல்லது.  செப்டிக் ஆன டான்சில்சை தவிர மற்ற டான்சிலைட்டிசை ஓமியோபதி மருத்துவத்தில் அறுவைசிகிச்சையின்றி சரி செய்ய முடியும்.

உணவு விழுங்குவதில் சிரமமா?
சில பெரியவர்களுக்கு உணவு உட்கொள்ள தடைபடுதல் உண்டாகும். இவை 1-2 நாட்களுக்கு இருந்தால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால் உடனே மருத்து வரை அணுகுதல் நல்லது. ஏனெனில் புற்று நோயின் ஆரம்பமாக இருக்கலாம்.

ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் செய்தால் நல்ல தீர்வு காணப்படும். புற்றுநோய் தொண்டை தொடர்புடையதாக உள்ளது. இந்ததொண்டை பாதிப்பு ஆண்களுக்கு சாதாரணமாக காணப்படுகின்றன. பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் சாதாரணமாக காணப்படுவதைப்போல. ஆண்களுக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிதில் குணப் படுத்தலாம்

தொண்டை புற்று நோயின் அறிகுறிகள்
v  உணவு உட்கொள்ள தடை,
v  எடை குறைதல்,
v  வாந்தி,
v  கழுத்தில் கட்டி கிளம்புதல்,
v  குரல் மாற்றம்,
v  மூச்சுத் திணறல்
முதலிய அறிகுறிகள் இருக்கலாம். இவையாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று, இரண்டு அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், இவற்றுடன் எடை குறைதல் இருந்தால் அவசியம் தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

போதை பாக்கு தொண்டையை பாதிக்குமா
இப்பொழுது இளைஞர்களுக்கு பான்பராக் போடும் பழக்கம் மிக சாதாரனமாகி விட்டது. இதனால் வாய் புண்ணாகி, பின்னர் புண் காய்ந்தவுடன் தோல் சுருங்கி புற்றுநோயாக மாறுகிறது. பான்பராக்கை நிறுத்திவிட்டு தக்க சிகிச்சை எடுக்கவேண்டும்.

யாருக்கு அதிகமாக குரல் பாதிப்பு வரலாம்
மேடை பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சில சமயங்களில் குரல் சரிவர பேசமுடியாமல் போகலாம். இதற்கு காரணம், அவர்கள் குரலை சீராக வைக்காமல் இருப்பது தான். மிக அழுத்தமாக நாம் பேசும்பொழுது குரல் கணீர் கணீர் என்று எடுத்து விடப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது குரல்வளையில் தேய்தல் உண்டாகி பின்னர் சதை உண்டாகிறது. இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தால் இந்த பாதிப்பு குணமாகி விடும். இல்லாவிடில் மருத்துவரை அணுக வேண்டும்.

வாய் புண், ஆணிற்கு பெண் குரல் போன்ற பாதிப்புகள் ஏன்?
வாய்ப்புண் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் இளைஞர்களை இது வெகுவாக பாதிக்கிறது. நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாகும் தருணத்தில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தக்க மருத்துவம் செய்தால் இதற்கு நிவர்த்தி காணலாம். இளைஞர்களுக்கு பெண்களைப் போன்ற கீச் குரல் பருவ வயதில் வருவதுண்டு. இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு தான். இதனையும் தக்க மருத்துவம் மூலம் நிரந்தரமாக தீர்வு காணலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 8 – 99******00 – டான்சிலைட்டிஸ், Tonsillitis – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.Please Contact for Appointment

பிரபல பதிவுகள்