ஆண்களிடம்
நிலவும் பழங்கால செக்ஸ் நம்பிக்கையையும் அதற்கு மாறான செக்ஸ் மருத்துவ உண்மைகள்.
பழைய
நம்பிக்கை 1:
·
திருமணமான
பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு
கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்பட்டால்தான் அப்பெண் கன்னித்தன்மை மாறாதவள் பெண்
என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!
உண்மை:
·
திருமணமான
பெரும்பாலான பெண்களுக்கு முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன்
எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்படுவதில்லை. பெண்களுக்கு
ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு சாதாரணமாக மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ
இருக்கலாம். ஹைமனில் இருக்கும் துவாரம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, திறந்தோ அல்லது மூடிய நிலையிலோ
இருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு உடலுறவிற்கு முன்பே ஹைமன் சவ்வு
கிழிந்திருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்களில்கூட சிலருக்கு முதலிரவு உடல் உறவிற்குப் பின்னும் ஹைமன் கிழியாமல் இருக்கலாம்!
பழைய
நம்பிக்கை 2:
v பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக
இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!
உண்மை:
v செக்ஸிற்கு சிறிய மார்பகம் பெரிய மார்பகம் என்ற பாகுபாடு
இல்லை. வம்சம், சுகா தாரம், உடல்எடை, ஊட்டச்சத்துணவு போன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள்
பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ அமையும்.
பழைய
நம்பிக்கை 3:
v செக்ஸ் அறிவு இருக்கும் பெண்களுக்கு ஏற்கனவே செக்ஸில் முன்
அனுபவம் இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது..!
உண்மை:
v தற்கால பெண்கள் படிப்பறிவு மிகுந்து ஆண்களைப்போல்
சுதந்திரமாக வெளியில் சென்று தகவல் சேகரிக்கும் நுண்ணறிவுடன் திகழ்வதால், செக்ஸ் அனுபவம் இல்லாமலே செக்ஸ்
குறித்த அறிவைப் பெண்களால் பெறமுடியும்!
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர்
– 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==