விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, October 30, 2015

பாலி சிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்’ என்ற PCOD Treatment in Chennai, Tamil nadu,

 PCOS PCOD Best doctor treatment in chennai tamil nadu



Question: 
நான் 50 வயது பெண்மணி. 25 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. `பாலி சிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்’ என்ற PCOD பாதிப்பு இருந்ததால் 35 வயதில்தான் என்னால் தாய்மையடைய முடிந்தது. ஒரு குழந்தைக்கு தாயாகவே நான் மிகுந்த சிரமங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்று. என் மகளுக்கு இப்போது 14 வயது. அவளும் என்னைப் போல் குண்டாக இருக்கிறாள். வயதுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. எனக்கு வந்த அதே `பாலி சிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்’ PCOD / PCOS பாதிப்பு எதிர்காலத்தில் என் மகளுக்கும் வந்துவிடக்கூடாது.  அந்த நோய் ஏன் ஏற்படுகிறது? அதற்கான சிகிச்சைகள் இப்போது என் னென்ன இருக்கிறது? அந்த நோய் வராமல் தடுக்க என்ன வழி இருக்கிறது?

Answer: 

குழந்தையின்மையால் அவதிப்படும் பெண்களில் 35 சதவீதம் பேர் பாலி சிஸ்டிக் ஓவரியன் டிசீசால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். குண்டாக இருக்கும் பெண்களில் 50 சதவீதம் பேரை இந்த நோய் பாதிக்கிறது. மாத விலக்கு கோளாறுகள், மாதவிலக்கு வெகு தாமதமாக வருதல், அதிகமாக தேவையற்ற ரோமங்கள் வளருதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இவர்களுக்கு ஆன்ட் ரோஜன், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக உற்பத்தியாகும். இதனால் சினைப் பையில் இருந்து கருமுட்டை வெளிவராது. அல்லது வெளிவந்தாலும் கருத்தரிப்பு நிகழாமலோ ஆகிவிடும். இதனால் தாய்மையடைய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பாதிப்பு கொண்டவர்களின் சினைப்பையை ஸ்கேன் மூலம் பார்த்தால், உள்ளே முத்து மாலை கோர்த்தது போல் நீர்க்கட்டிகள் காணப்படும்.

உங்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு உங்கள் மகளுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற கோணத்தில் நீங்கள் ïகிப்பது சரிதான். குடும்ப பாரம்பரிய மரபு வழியாக 30 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் முரண்பாடான உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்றவைகளாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும். மாமிசமும், கொழுப்பும் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த தொந்தரவு அதிகமாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் இந்த பாதிப்புகளை கண்டறிந்து, சிகிச்சை செய்ய முடியும். சரியான சிகிச்சை செய்து நீர்க்கட்டிகளுக்கு தீர்வு காணப்பட்ட சில வாரங்களிலே கூட பெண்கள் தாய்மையடைந்துவிடுவதுண்டு. 

உங்கள் மகளின் உடல் அமைப்பும் குண்டாக இருப்பதாக கூறி இருக்கிறீர்கள். நியூட்ரிசியன் பரிந்துரைப்படி உணவும், நல்ல பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன் உடற்பயிற்சியும் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். கலோரி குறைந்த உணவுகளை வழக்கமான சாப்பாட்டில் சேருங்கள். ஒரு நாள் அதிகபட்சம் 1000 கலோரி அளவுக்கு உணவு உண்டால் போதும். கொழுப்பும், புரோட்டீனும் கலந்த உணவை குறைத்துவிட்டு, காய்கறிகளை அதிகம் கொடுங்கள். பாரம்பரியத்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பதால் நீங்கள் இப்போதே உஷாராகிவிடுவது நல்லது. முதலில் உங்கள் மகளுக்கு இந்த நோயைப் பற்றி விளக்கி, அவளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் மகளை பராமரிக்கும் நீங்களும், அவளும் கவனமாக இருந்தால் உங்கள் மகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதை பெரு மளவு தடுத்துவிடலாம். அவளுக்கு மாதவிலக்கு கோளாறு இருந்தால் அதற்கான சிகிச்சையைப் பெறுங்கள். உடல் எடையைக் குறையுங்கள். உங்கள் மகளின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்ற அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். எப்போதும் உட்கார்ந்திருப்பது, டெலிவிஷன் பார்ப்பது, படிப்பது என்று காலத்தைக் கழிக்காமல் பள்ளியில் நடக்கும் குழுவிளையாட்டுகள், கலைப் போட்டிகளில் அவளை பங்குபெறச் செய்யுங்கள்.








For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us.


For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini- 30 - 99xxxxxxx0 – PCOS, PCOD, neer katti, overian katti, karu pai katti,  – 21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS



==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்