Question: பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
Answer: ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
==--==