விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, November 5, 2015

பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் உறவு தொடர்பான பிரச்சினை - Female Sexual Relationship Problems Treatment ladies sex problem treatment specialist doctor clinic in chennai
பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் உறவு தொடர்பான  பிரச்சினை 
திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக்ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைகளும் மிகக் குறைவான செக்ஸ் ஆர்வம்„
 • குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.
 • செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த அனுபவம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.
 • இதனால் பல பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை ரசிப்பிற்குதியதாக இல்லை.
 • சாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைகிறது.
 • திருமணமான புதிதில் தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்த சந்தோஷ தருணங்கள், இருவரையும் கிளர்ச் சியூட்டிய விஷயங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வது இப்பிரச் சினைக்குத் தீர்வாக அமையலாம்.
 • தம்பதியர் இருவரும் சேர்ந்து குளிப்பது, புதிய இடத்தில், சூழ்நிலையில் உறவு வைத்துக் கொள்வதும் இதற்குத் தீர்வாகும்.
 • இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக்கு சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகிய வற்றின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.
 • மன ரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன்சலிங் மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு  சிகிச்சை அளித்து இதைக் குணப்படுத்தலாம்.பிறப்புறுப்பு வறட்சி:

 • இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். 
 • குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.உறவின் போது வலி:

 • உறவின் போது சில பெண்களுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களிலும் பட்டாணி அளவுக்குப் பெண்களுக்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.
 • இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான். இவை பாதிக்கப் படும் போது பிறப்புறுப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படுவதோடு சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.
 • மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை சரி செய்து விட முடியும்.
 • வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடைகிற போதா) சொன்னால் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.உறவே கொள்ள முடியாத நிலை:

 • ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்களால் உறவில் ஈடுபட முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜனிஸ்மஸ் என்று பெயர். செக்ஸைப் பற்றிய பயம், கடந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
 • மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்கள் சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
 • செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை எப்படி ரிலாக்ஸ் செய்வது என்று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண் மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும்.உச்சக் கட்டத்தை அடைய முடியாமை:

 • சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப்பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.
 • இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை.
 • உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்றோ, அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.
 • உறவின் போது பெரும்பாலான பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம் போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறார்கள்.
 • இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிரியான ஸ்பரிசம் தனக்குக் கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.

அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது. உச்சக் கட்டம் அடையவும் பெண்கள் மேல் நிலையில் இருந்து உறவு கொள்வது பலனளிக்கும்.


For more details & Consultation
contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்