விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 26, 2016

வெள்ளைபடுதல் பிரச்சினைகளும் தீர்வுகளும் - White Discharge Treatment in Chennai, Velachery, Tamil nadu

 vellai paduthal treatment, yeast infection treatment in tamil, white discharge vagina,வெள்ளைபடுதல் பிரச்சினைகளும் தீர்வுகளும்:
பீரியட்ஸ் போலவே பெண்களுக்கு இருக்கும் இன்னோரு பிரச்சனை வெள்ளைபடுதல் - வெள்ளை நிறத்தில் கஞ்சி போன்ற ஒரு திரவம் வஜைனா வழியாக அவ்வப்போது வெளியேறுவதைத் தான் வெள்ளைப்படுதல் என்கிறோம். வெள்ளைப்பட்டாலே அது உடம்பு வீக் ஆகி விட்டதற்கான அடையாளம் என பலர் நினைக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களுக்குமே குறிப்பிட்ட சில நாட்களில் வெள்ளைப்படுகிறது. சிலருக்கு இது கொஞ்சம் அதிகமாகவோ இல்லை குறைவாகவோ இருக்கலாம். மற்றபடி இது பொதுவான விசயம்.

பெரும்பாலும் பீரியட்ஸ் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் வெள்ளைப்படுகிறது. பொதுவில் பாவாடையோ அல்லது உள்ளாடையோ நனையும் அளவிற்கு வெள்ளைப்பட்டால் ஏதோ உடலில் பிரச்சனை என்றே அர்த்தம். வஜைனா மற்றும் கருப்பையின் வாய்ப் பகுதியான செர்விக்ஸ் பகுதியில் இருக்கும் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சளி போன்ற திரவமே இதற்கு காரணம்.

எந்த தீய சக்திகளும் ஊருக்குள் நுழைந்து விடாமல் இருக்க ஊர் எல்லையில் எல்லைச்சாமி இருக்கிறதே. அது போல வஜைனாவில் இருக்கும் Lacto Bacillus என்ற பாக்டீரியா தான் வஜைனாவின் எல்லைச்சாமி. இந்த பாக்டீரியா சுரக்கும் லாக்டோ அமிலம் வஜைனாவின் மேற்புற லைனிங்கின் மேல் பரவி நின்று கெடுதல் விளைவிக்கும் எந்த கிருமிகளும் வஜைனாவுக்குள் நுழைந்து விடாதபடி பாதுகாக்கிறது. சமயத்தில் இந்த பாக்டீரியாவையே பாதிக்கும் வகையில் ஏதாவது நோய்த் தொற்று ஏற்பட்டால் பல கிருமிகளும் பூஞ்சைகளும் வஜைனாவில் நுழைந்து விடுவதால் தான் இந்த வெள்ளைப்படுதல் அதிகமாகிறது.

வஜைனாவில் என்னென்ன காரணங்கலுக்காக இந்த வெள்ளைத் திரவம் சுரக்கிறது?
முதல் வகை பூஞ்சை நோய்த் தொற்றினால் ஏற்படுவது. இந்த வகை பாதிப்பால் தயிர் ஆடை மாதிரி வெள்ளைப்படுவதுடன் வஜைனாவில் அரிப்பும் எடுக்கும். இவ்வித வெள்ளைப்படுதல் சர்க்கரை நோயின் காரணமாகவோ இல்லை நீண்ட நாட்கள் ஆண்டி-பயாடிக்ஸ் மருந்துகள் சாப்பிடுவதாலோ நடக்கலாம். இதை தவிர்க்க ஈஸ்ட் மாத்திரைகள், விட்டமின் பி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

அடுத்த வகை வெள்ளைப்படுதல் நுரை நுரையாய் வெள்ளைப்படுதல். இதற்கு காரணம் வஜைனாவில் தங்கி இருக்கும் trichomonas என்னும் கிருமி. உடலுறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது, சுகாதாரம் மற்றும் உடலுறவு இவற்றின் மூலம் கிருமித் தொற்று ஏற்படுவது தான் காரணம்.


இவ்வகை நோய்த் தொற்றில் கணவன் மனைவி இருவருமே தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில் கணவனுக்கும் ஆண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல் ஏற்படக் கூடும். அல்லது உடலுறவின் போது திரும்ப திரும்ப கணவனிடமிருந்து இந்த கிருமி மனைவிக்கு பரவ வாய்ப்புள்ளது. இதை தடுக்க என இருக்கும் மருத்துவ க்ரீம்களை வஜைனாவின் உட்புறம் தடவிக் கொள்வதுடன் மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிபிலிஸ், கொனேரியா, ஹெச்.ஐ.வி போன்ற தீவிரமான செக்சுவல் நோய்கள் ஏற்பட்டிருந்தாலும் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்பதால் இது போன்ற நோய் தாக்கம் உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

செர்விக்ஸ் பகுதியில் நீண்ட நாள் நோய்த் தொற்று இருந்தாலோ, புற்று நோய் இருந்தாலோ அல்லது செர்விக்ஸ் பகுதி அரிக்கப்பட்டிருந்தாலோ அதிக வெள்ளைப்படுதல் ஏற்படலாம். வெளியில் தெரியாதபடிக்கு செர்விக்ஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் கர்ப்பப்பையையே கூட எடுக்க வேண்டி வரலாம். லேசான தொற்று தான் என்னும் போது மருந்து உட்கொண்டு இதை சரி செய்யலாம்.


மாதவிடாய் நேர வலி போல அதிக வலியுடன் அரிப்பும் இருந்தால் கீழ்க்காணும் மருத்துவச் சோதனைகளை செய்து பார்த்து விடுவது நல்லது.

ü  நோய்த்தொற்று அறிய அல்ட்ரா சவுண்ட் சோதனை
ü  சர்க்கரையை கண்டறிய குளுகோஸ் டாலரன்ஸ் சோதனை
ü  புற்றினை கண்டறிய பாப்ஸிமிர் சோதனை
ü  டிரைகோனமஸ் கிருமியை கண்டறிய வெட்ஸ்மிர் சோதனை
ü  மற்ற செக்ஸுவல் நோய்களை கண்டறியும் வி.டி.ஆர்.எல் ஹெச்.ஐ.வி சோதனைகள்


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – White Discharge, Yeast infection, vaginal Discharge, – 20-12-2016 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.Please Contact for Appointment

பிரபல பதிவுகள்