விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, April 6, 2016

Healthy Sex Activities - பாதுகாப்பான உடலுறவை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்


 sex diseases treatment in chennai velachery tamil nadu


பால் மற்றும் பாலியல் தொடர்பான செயல்பாடுகள்:
எச்.ஐ.வி உள்ளோர் பாதுகாப்பான உடலுறவை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
ü  உடல் ஆரோக்கியப் பாதுகாப்பு
ü  வாழ் நாள் நீடிக்கும் வாய்ப்பு
ü  பால்வினை நோய்கள், மஞ்சள்காமாலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளால் தாக்கப்படாமல் பாதுகாப்பு
ü  வேறு வகையான எச்.ஐ.வி கிருமிகளால் தாக்கப்படாமல் பாதுகாப்பு உருவாகும்
ü  பிறருக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுக்கப்படும்
ü  எச்.ஐ.வி கிருமிகளின் எண்ணிக்கை உடலில் அதிகமாகாமல் இருக்கும் வாய்ப்பு
ü  ஆண், பெண் இருவரும் பாஸிட்டிவ் ஆக இருத்தாலும் பாதுகாப்பான உடலுறவை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். எச்.ஐ.வி-யில் பல் வகைகள் இருப்பதால் திரும்பவும் புதிய நபரிடம் இருந்து வேறு வகையான எச்.ஐ.வி தாக்காமல் இருக்க பாதுக்கப்பான உடலுறவையே மேற்கொள்ள வேண்டும் இதனால் எச்.ஐ.வி-யின் தாக்கம் நமது உடலில் அதிகம் ஆகிவிடாமல் இருக்கும்
ü  ஒருவரிடம் உள்ள வைரஸ் தாக்கம் மற்றொருவரையும் தாக்கும் வாய்ப்பு அதிகம்
ü  ஒரு ஆண் எச்.ஐ.வி பாஸிட்டிவ் ஆக இருந்தால் மற்றொரு ஆணுடன் வாய் வழி உறவு அல்லது மல வாய் உடலுறவு கொள்ளும் போது ஆணுறை அவசியம் அணிந்திட வேண்டும்
ü  ஒரு ஆணுறை ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டும்
ü  உடலுறவின் போது ஆணுறையுடன் KY ஜெள்ளி என்ற வழவழப்பான திரவத்தை பயன்படுத்தலாம்
ü  ஆயின்மென்ட், கிரிஸ் போன்றவற்றை பயன்படுத்தினால் ஆணுறை சேதமடையும் எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது

ஆணுறை
ü  ஒருவரை பால்வினை நோய் வராமல் காக்கிறது
ü  தேவையற்ற கர்ப்பம் உருவாகாமல் தடுக்கிறது
ü  எச்.ஐ.வி எய்ட்ஸ்-ல் இருந்து காக்கிறது

சரியாக ஆணுறை உபயோகிக்கும் முறை:
ü  ஆணுறை பயன்படுத்த தகுதியான தயாரிப்பு, கால அளவு உள்ளதா என தேதியை பார்த்து பின் சேதப்படுத்தாமல் பிரிக்க வேண்டும்
ü  ஆணுறையின் நுனியை அழுத்தியவாறே விறைப்பான ஆண் பிறப்பு உறுப்பின் மேல் பொறுத்தவும்
ü  ஆண் பிறப்பு உறுப்பு முழுமையாக மூடுமாறு ஆணுறையின் நுனியை பிடித்துக் கொண்டு உருட்டி அணியவும்
ü  உட்செலுத்தி உடலுறவு கொள்ளும் முன்னர் ஆணுறை முழுமையாக அணிந்திருக்க வேண்டும்
ü  விந்து வெளிப்பட்டவுடன் ஆணுறையின் அடிப்பாகத்தை பிடித்துக் கொண்டுவிந்து வெளிக் கொட்டாமல் ஆணுறையை கழற்றி விட வேண்டும்
ü  ஒவ்வொரு முறையும் ஆணுறையை அணிந்து உடலுறவு கொள்வது தான் பாதுகாப்பு

ü  வாய் வழி உடலுறவு, ஆசன வாய் வழி உடலுறவு, பெண் இன உறுப்பு வழி உடலுறவு எதுவாயினும் பாதுகாப்பானதாக இருத்தல் வேண்டும்.==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்