விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, September 7, 2016

செக்ஸ் தெரப்பி & மேரிட்டல் தெரப்பி - Sex Therapy and Marital therapy Clinic Chennai. Tamil nadu,


 sex therapy marital therapy for couples in chennai


ஆண்மைக் குறைவுக்கு உடல், மனரீதியான சிகிச்சை:
ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற்கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந்தால், மன நல நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக, ஆண் உறுப்புக் குறைபாடு வந்திருந்தால், அந்த ஆணுக்கு செக்ஸ் தெரப்பியுடன் சேர்த்து மேரிட்டல் தெரப்பியும் கொடுக்க வேண்டும். சிலருக்கு கவுன்சிலிங்குடன் மருந்து மாத்திரையும் தேவைப்படும்.

உடல்ரீதியான காரணங்களுக்கு சிகிச்சை:
வேகுவம் எரெக்ஷன் டிவைஸ் (Vaccum Erection Device) என்கிற நவீன சாதனத்தைப் பயன்படுத்தி விறைப்புத்தன்மைக் குறைப்பாட்டைப் போக்கலாம். ஆணுறுப்பின் கடைசியில் ஒரு ரப்பர் பேண்டால் இறுக்கிவிட்டு, இந்தச் சாதனத்தில் உள்ள காலியான ரப்பர் குழாயை ஆணுறுப்பில் நுழைத்து நுழைத்து எடுக்கும்போது ஆணுறுப்பு விறைப்புத் தன்மை அடையும். இந்த ரப்பர் பேன்டை 20 நிமிடங்களுக்கு மேல் பயன் படுத்தக்கூடாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில்தான், இதைப் பயன்படுத்த வேண்டும்.

பீனைல் புராஸ்தெடிக் சர்ஜரி (Penile Prosthetic Surgery):
அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பின் இடையில் உள்ள குழாய்களுக்கு இடையில் சிலிக்கான் ராடு ஒன்றை வைத்து மூடி விடுவார்கள். இந்த அறுவை சிகிசை இரண்டு வகைப்படும்.

v  மலியபிள் புராஸ்தெஸிஸ் (Malle- able Prosthesis)
v  இன்ஃப் ளேடபிள் புரா ஸ்தெஸிஸ் (Inflatable Prosthesis)

முதல் வகையைவிட இரண்டாவது வகை அறுவை சிகிச்சைக்கு அதிகம் செலவாகும்.

மனரீதியான காரணங்களுக்கு சிகிச்சை:
பயம், பதற்றம், படபடப்புக் காரணமாக ஆண்மைக் குறைவு என்றால், சப்போர்ட்டிவ் சைக்கோ தெரப்பி கவுன்சிலிங் அளிக்கப்படும். கவுன்சிலிங் என்றால் பல பேர் அது அட்வைஸ் என்று எடுத்துக் கொள்கிறார்கள். உண்மையில் இது நுட்பமானது. நவீன செக்ஸ் சிகிச்சை முறைகளில் தரப்படுகிற பிஹேவியர் தெரப்பிக்குத்தான், செக்ஸ்தெரப்பி என்றுபெயர். இச்சிகிச்சைமுறை செக்ஸில் எதிர் மறையான சிந்தனை கொண்டவரை நேர்மறையான சிந்தனைக்குக் கொண்டுவரும். ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு, செக்ஸ் தெரப்பியில் வேறு சில உத்திகளையும் இணைத்து சொல்லித்தருகிறார்கள். 

இந்த உத்திகளை அந்த மனிதர், கையாள ஆரம்பித்தவுடன் தன்னம்பிக்கை உருவாகும். இது தவிர, செக்ஸ் செயல்பாடுகளை ஐந்தாறு படிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இந்தப் கவுன்சிலிங்குக்கு தம்பதியராகத் தான் வர வேண்டும். இதனைப் படிப்பவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். டாக்டரின் கிளினிக்கில் இதற்கான டெமோவோ, பயிற்சியோ கொடுக்க மாட்டோம். அவரவர் வீட்டில் தான் தனி அறையில் நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறைவான சுய இன்பத்தால் ஆணுறுப்பு எழுச்சி அடைவதில் பாதிப்புவராது. பாதிப்பு வரும் என்பது போலி மருத்துவர்களால் கிளப்பிவிடப்பட்ட கட்டுக்கதை. அளவுக்கு அதிகமாக சுய இன்பத்தில் ஈடுபடும் ஆணுக்கு மனப்பதற்றம், பயம், படபடப்பு, குற்ற உணர்ச்சி காரணமாக ஆணுறுப்பு எழுச்சி அடையாமல் போகலாம். இந்த சதவிகிதமும் மிக மிகக் குறைவே.

வெப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து பணிபுரிவோருக்கு உயிர் அணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாமே தவிர, செக்ஸ் நடவடிக்கைப் பாதிக்கப்படாது.

உடல் பருமன் ஹார்மோன் குறைபாட்டைத் தூண்டி, அதன் காரணமாக ஆணுறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதுவும் அரிதாக நடக்கக்கூடியதே.

குடிபோதை, செக்ஸ் நடவடிக்கையைப் பாதிக்க வாய்ப்பு அதிகம். மதுவை குடித்தவுடன் உடனடியாக காம இச்சையைத் தூண்டும். ஆனால், செக்ஸ் நடவடிக்கைகளை குறைத்துவிடும்.

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ராம்பிரசாத் - 28 – 99******00 – விரைப்பு தன்மை குறைபாடு, ஆணுருப்பில் எழுச்சியில்லை, – 20-12-2016 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.



==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்