விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, November 27, 2018

ஒற்றை தலைவலி பிரச்சனையா கவலைவேண்டாம் தீர்வு இதோ- Migraine Treatment







முக்கியமான மூன்று தலைவலிகள்

மைக்ரேன் - ஒற்றைத் தலைவலி
இது பெண்களை அதிகம் தாக்கும் என்பதால் இதை ‘பெண்களுக்கான தலைவலி’ என்று சொல்லலாம்.
Ø  மன அழுத்தம்,
Ø  சேராத உணவுப் பொருட்கள்,
Ø  அதிக வெளிச்சம்,
Ø  தூக்கம் இன்மை அல்லது அதிகத் தூக்கம்,
Ø  சாப்பிடாமல் இருப்பது,
Ø  தலையில் காயம்படுதல்
போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும்.

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஒற்றைத் தலைவலி அதிகமாகும்அதுவேமெனோபஸ் காலத்துக்குப் பிறகு பெண்களுக்குஒற்றைத் தலைவலி குறைந்துவிடும்ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்பித்துவிடும்.

ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன்,
ü  கண் பார்வை மங்குவது,
ü  கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது,
ü  வாந்தி வரும் உணர்வு.
ü  கண்ணில் பளிச்சென்று லைட் எரிவது போன்ற வெளிச்சம் தோன்றி தலைவலி அதிகமாக ஆரம்பிக்கும்.
போன்ற அறிகுறிகள் தென்படும்.


க்ளஸ்டர் தலைவலி
இதை ‘ஆண்கள் தலைவலி’ என்று சொல்லலாம்.
குடிப் பழக்கம் உள்ளவர்களும் உடல் பருமனானவர்களும் இந்தத் தலைவலிக்கு எளிதில் ஆட்படுவார்கள்தினசரி ஒரு குறிப்பிட்டநேரத்தில் வந்துபோகும்இன்று காலை 10 மணிக்கு வந்தால்நாளை காலை 10 மணிக்கு வரும்தொடர்ந்து இரண்டுவாரங்களுக்குக்கூட நீடிக்கலாம்பிறகுசரியாகி மீண்டும் 10 வருடங்கள் கழித்து கூட திரும்ப வரலாம்.

டென்ஷன் தலைவலி
இன்றைய அவசரமான எந்திரமயமான வாழ்க்கையில் நிறைய பேருக்கு  வரும் தலைவலி இதுபொருளாதார சூழல்குடும்பபிரச்சினைஅலுவலக டென்ஷன் முதலியவை முக்கிய காரணம்டென்ஷனைக் குறைத்தால்இந்தத் தலைவலி குறையும்.


மைக்ரேன் தலைவலி
எப்படி வரும்
Ø  வெகு அரிதாக சிலருக்குத் தான் தினமும் வரும்.
Ø  சிலருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரலாம்.
Ø  சிலருக்கு மாதத்துக்கு நான்கு முறை வரலாம்.
Ø  இப்படி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தான் இந்த "மைக்ரேன்(Migraine)" தலைவலி வரும்.
Ø  தனக்கு எந்த மாதிரியான வலி இருக்கிறதுஎன்று சொல்லவே முடியாமல் தவிப்பர்தலையை பிளப்பது போல வலி இருக்கும்.
Ø  ஒரு பக்க தலையில் மட்டும் வலிக்கும்.
Ø  சிலருக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் இடத்தில் வரும்.
Ø  சிலருக்கு மைக்ரேன் தலைவலி வந்தால்மணிக்கணக்கில்நாட்கணக்கில் நீடிக்கும்சிலருக்கு கண்களில் கருவளையம் கட்டி,கண் பார்வையும் கூட பாதிக்கப்படும்எதைப்பார்த்தாலும்ஒரு வித எரிச்சல் ஏற்படும்அதனால்அவர்கள் கண்களைமூடிக்கொண்டே இருக்கவே விரும்புவர்அப்படியிருந்தால் நிம்மதியாக இருப்பதாக நினைப்பர்.

தலைவலி வரும்போதே, , வாந்திமயக்கம் என்று வித்தியாசமாக உணர்ந்தால் டாக்டரை பார்ப்பது மிக நல்லது.

ü  கடுமையாக வரும் தலைவலிகள் எல்லாம் மைக்ரேன் தலைவலி அல்ல.
ü  அதுபோலமிதமான தலைவலி என்பது பொதுவான தலைவலி என்றும் கொள்ள முடியாதுஅது மைக்ரேனாகவும் இருக்கலாம்.அதனால்மைக்ரேன் என்று தெரிந்ததும்அசட்டையாக இருக்க வேண்டாம்
ü  ஆண்கள்பெண்கள் இருபாலாருக்கும் மைக்ரேன் வரும்.
ü  பெண்களுக்கு அவர்களுக்கே உரிய மாதவிடாய் பிரச்சனைகளால் வரும்.
ü  அசாதரணமான ஒளி,
ü  அலர்ஜியான சத்தம்,
ü  சாக்லெட் ,ஐஸ்கிரீம் போன்ற சில வகை உணவுகள் ஆகியவை  மைக்ரேன் அதிகமாக  காரணமாக இருக்கலாம்.  இதைசாப்பிடுவோர்  அனைவருக்கும் தலைவலி வரும் என்று சொல்ல முடியாதுசிலருக்கு தான் வரும்.

அறிகுறிகள்.
v  பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளில்பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பக்க தலையில் வலிக்கும்.
v  சிலருக்கு இரு பக்கமும் வலி ஏற்படும்.
v  எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது.
v  கண்களை மூடிக்கொண்டு இருந்தால் போதும் என்று எண்ணத்தோன்றும்.
v  வாந்தி வருவது போல இருக்கும்சிலர் வாந்தி எடுப்பார்கள்வாந்தி எடுத்தால் சிலருக்கு வலி குறையும்சிலருக்கு வலிகுறையாது.
v  மன அழுத்தம் இருந்தால் மைக்ரேன் தலைவலி அதிகமாகும்.
v  அடிக்கடி வந்தால் தலைவலி வந்தால் அது மைக்ரேனாக இருக்கலாம்.
v  சிகரெட் பிடிப்போர்அடிக்கடி கருத்தடை மாத்திரை விழுங்குவோர்ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர்குடிக்காதவர்களுக்கு கூட இந்த தலைவலி வரலாம்.
v  அதிக சத்தத்துடன் இயர் போனில் பாடல் கேட்பது,
v  செல்போனில் அதிக நேரம் பேசுவது.
v  டி.வி யில் அதிக ஒலியுடன்அதிக கலர் வைத்து பார்ப்பது போன்றவையும் மைக்ரேன் வர காரணமாக இருக்கலாம்.
v  சிலருக்கு சில வாசனைகளால் கூட மைக்ரேன் வரும்சிலரை பார்த்தாலோஎந்தவித வாசனையாவது முகர்ந்தாலோகாற்றில்வந்ததை சுவாசித்தாலோஅவர்களுக்கு லேசாக தலைவலி வரும்.
v  அவர்கள் ஆரம்பத்திலேயே தங்களுக்கு அலர்ஜியான விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

வந்து விட்டால்...
மைக்ரேன்(Migraine) என்று வந்துவிட்டால்அஜாக்கிரதையாக இருக்கக் கூடாதுமற்ற தலைவலி போல நினைத்துகண்ட கண்டமருந்துகளை கடைகளில் வாங்கி சாப்பிட கூடாது.
தகுந்த மருத்துவரிடம் காட்டிஆலோசனை பெற்றுதலைவலி மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்அப்படியிருந்தால்,தலைவலி வீரியம் குறையும்சத்தம் இல்லாதவெளிச்சம் வராத இருட்டறையில் ஓய்வு எடுப்பதும் தலைவலி கடுமையை குறைக்கும்.
பெண்களுக்குகுறிப்பாக மாதவிடாய் காலத்தில் மைக்ரேன் வந்தால்அவர்கள்தங்கள் உணவில் உப்பை குறைத்துக்கொள்வதுநல்லதுஅதுபோலஆண்கள்குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றால்அதை விடுவது நில்லது.
சிலருக்கு ஸ்ட்ரெஸ்(Stress) என்று சொல்லப்படும் மன அழுத்தத்தால் கூட வரும்அதை தவிர்க்கஅவர்கள் யோகா(Yoga) , தியானம்என்று பயிற்சி செய்யலாம்சிறிய அளவில் வாக்கிங் போகலாம்.

சிகிச்சை
ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. முறையாக சிகிச்சை மேற்கொண்டால் தலைவலியிலிருந்து விடுதலை பெறுவது உறுதி.


உங்களுக்கு ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் ஹோமியோபதி மருத்துவர் மற்றும் மன நல ஆலோசகர் மருத்துவர் செந்தில்குமார் அவர்களை தயக்கமின்றி தொடர்புகொண்டு சிகிச்சை பெறவும்.

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்