விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, June 25, 2021

எய்ட்ஸ் ஹெச் ஐ வி நோய் சந்தேகங்களும் விளக்கமும் - AIDS HIV Questions and...





எய்ட்ஸ் பற்றிய பொதுவான கேள்விகளும் பதில்களும்

பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட எவ்வளவு நேரத்தில் எச்.ஐ.வி மற்றொருவருக்கு பரவும்?

எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் தொற்று இல்லாதவர் பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்ட அடுத்த விநாடியே அவரும் எச்.ஐ.வி தொற்றாளராக மாறுகிறார். அந்த விநாடியிலிருந்து அவரும் பிறர்க்கு எச்.ஐ.வி தொற்றை பரப்ப முடியும்.

 

இரண்டு மனைவி உள்ளவருக்கு எச்.ஐ.வி தொற்று வருமா?

இரண்டு மனைவியரில் யாராவது ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தால் கணவருக்கு எச்.ஐ.வி தொற்று வரும்.

 

பால்வினை நோய் எச்.ஐ.வி ஆக மாறுமா?

பால்வினை நோய் எச்.ஐ.வி-யாக மாறாது. ஆனால் தொடர்ந்து நோய்த் தொற்று ஏற்படும் வகையில் ஆபத்தான நடவடிக்கை உள்ளவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று வர வாய்ப்புகள் அதிகம்.

 

 

திருமணமாகாத இளைஞர் அல்லது இளம் பெண்களிடம் பாலுறவு கொண்டால் எச்.ஐ.வி தொற்றாது எனக் கூறுகிறார்களே அது உண்மையா?

மிகவும் தவறானது. எச்.ஐ.வி கிருமிகள், அழகைப்பார்த்தோ வயதைப் பார்த்தோ தொற்றுவது இல்லை. பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்துக்கொள்ளும் இருவரில் ஒருவருக்கு எச்.ஐ.வி இருந்தாலும் மற்றொருவருக்கு எச்.ஐ.வி தொற்று வருவது உறுதி. எனவே அழகைப்பார்த்து, வயதைப்பார்த்து எச்.ஐ.வி வராது என்ற முடிவிற்கு செல்லக்கூடாது. இரத்தப் பரிச்சோதனை முடிவின் மூலம் தான் உறுதிப்படுத்த முடியும்.

 

எச்.ஐ.வியும் எய்ட்சும் ஒன்றா? வேறு வேறா?

எச்.ஐ.வி நிலை வேறு எய்ட்ஸ் நிலை வேறு. எச்.ஐ.வி நிலை என்பது மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை கொண்ட வெள்ளை அணுக்களை வைரஸ் கிருமிகள் அழிக்கத் துவங்கும். இந்த கட்டத்தில் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வரும். இச்சமயத்தில் தொற்றாளர் பிறரைப் போலவே தோற்றத்தில் இருப்பார். உடலின் வெளிபுறத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. இந்நிலையில் இவர் பிறருக்கு எச்.ஐ.வியை பரப்ப முடியும். இவரது தோற்றம் செயல்பாடுகளை வைத்தும் எச்.ஐ.வி தொற்றாளர் என அடையாளம் காண முடியாது.

எய்ட்ஸ் என்பது மனிதனின் நோயெதிர்ப்பு சக்தி முழுவதுமாக அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி இல்லாத நிலையில் பல்வேறு நோய்கள் உடலை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்கிறது எனவே

எச்.ஐ.வி நிலை வேறு எய்ட்ஸ் நிலை வேறு

 

வாந்தி, பேதி, தோல் நோய்கள், புற்று நோய்,,தலைவலி, எடை குறைதல் போன்ற நோய்கள் உருவாகி அது தீவிரம் அடைநது இரப்பு நிலைக்கு கொண்டு செல்லும்.

v  எச்.ஐ.வி என்பது துவக்க நிலை

v  எய்ட்ஸ் என்பது முற்றிய பல நோய்களின் கூட்டுத்தொகுப்பு நிலையாகும்

 

எச்.ஐ.வி/ எய்ட்ஸ் முழுமையாக குணப்படுத்த மருந்து உள்ளதா?

எச்.ஐ.வி/ எய்ட்ஸ் ஐ முழுமையாக குணப்படுத்த மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

 

எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டிருப்பின் திருமணம் செய்து கொள்ளலாமா?

உடலுறவு தேவையா என பாதிக்கப்பட்டவரே முடிவு செய்தல் வேண்டும் இதனை மனதில் கொண்டு முடிவு எடுப்பது நல்லது திருமணமோ உடலுறவோ தேவை என முடிவேடுத்தால் பாதுகாப்பான முறைகளைத் தெரிந்து முறையாக கடைபிடிக்க வேண்டும்.

உடல் உறவு கொள்ளும் இருவரில் ஒருவருக்கு எச்.ஐ.வி இல்லாவிட்டாலும் எச்.ஐ.வி இருக்கும் நபர் பாதுக்கப்பான உடலுறவு மட்டுமே கொள்ள வேண்டும்


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்