விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)
Showing posts with label How to enlarge female breast. Show all posts
Showing posts with label How to enlarge female breast. Show all posts

Wednesday, April 6, 2016

How to Enlarge the Breast in Tamil - பெண்களின் மார்பகத்தை பெரிதாக்க


 breast enlargement treatment in velachery chennai tamil nadu


பெண்களின் மார்பகத்தை பெரிதாக்க பயிற்சிகள்
பெண்மையின் அழகைப் பிரதிபலிக்கும் முக்கிய அம்சங்களில் அவளது மார்பக வளர்ச்சியும் ஒன்று. ஆனால் சுமார் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இன்றி அவதிப்படுவார்கள். சருமப் பிரச்சினை, கூந்தல் பிரச்சினை போன்று இதுவும் அழகு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினைதான் என்பது பல பெண்களுக்குப் புரிவதில்லை.

மார்பக வளர்ச்சி பாதிக்க பரம்பரைத் தன்மையும், ஹார்மோன் கோளாறுகளும் காரணங்களாக இருக்கலாம். பரம்பரைத் தன்மைக் கோளாறுகளை உடற்பயிற்சிகள், மசாஜ், உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றிலும் ஹார்மோன் கோளாறுகளை அதற்கான சிகிச்சையாலும் சரியாக்கலாம்.

மார்பகங்கள் சிறுத்துக் காணப்படுவோர் வீட்டிலிருந்தபடியே செய்துகொள்ளக் கூடிய சில பயிற்சிகள் இதோ...
ü  கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி இருத்தல்.
ü  நன்றாக நேராக நிமிர்ந்து சரியான நிலையில் உட்கார்ந்து கொண்டு மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் கழித்து வெளி யேற்றுதல்.
ü  கைகள் இரண்டையும் ஸ்கிப்பிங் ஆடுவதுபோல மடக்காமல் சுழற்றுதல்.
ü  இடுப்பில் கைகளை வைத்தபடி தலையை முன்னும், பின்னுமாகக் குனிதல்.
ü  கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி தட்டுதல், அதேபால கீழே நீட்டித் தட்டுதல்.
ü  கைகளை குவித்து வணக்கம் சொல்கிற மாதிரி சிறிது நேரம் உறுதியாக வைத்திருத்தல்.

மேற்கூறிய உடற்பயிற்சிகளை தினமும் பத்து முறைகள் செய்ய வேண்டும்.

ü  உடற்பயிற்சிகளைத் தவிர மசாஜ்; மூலமும் இப்பிரச்சினையை ஓரளவுக்குக் குணப்படுத்தலாம். தரமான பாலாடை கொண்டு கழுத்தின் மேல் பகுதியிலிருந்து தடவி மார்பகங்கள் வரை நான்கு விரல்களால் வட்டமாக மசாஜ் செய்யவும்.
ü  அதே மாதிரி வயிற்றின் கீழ்ப்பகுதியிலிருந்து மார்பகத்தின் மேல் பகுதி வரை வட்டமாக மசாஜ்; செய்யவும். இவற்றையும் தினமும் குறைந்தது பத்து முறைகள் செய்ய வேண்டும்.
ü  உடற்பயிற்சி மசாஜ் தவிர, தினமும் உணவில் நிறைய கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றையும், கொழுப்புச் சத்து அதிகமுள்ள பால், நெய் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ü  மார்பக வளர்ச்சி அதிகமாக இருக்கும் பெண்கள் மசாஜ் செய்யக் கூடாது. இவர்கள் உடலை வருத்தும்படியான உடற்பயிற்சிகளை, உதாரணத்திற்கு வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, நடப்பது, ஓடுவது போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
ü  நீராவி சிகிச்சை மூலமும் பெருத்த மார்பகங்களை சிறிய தாக்க முயற்சி செய்யலாம்.
ü  இதைத் தவிர பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலமும் அதிகப்படியான கொழுப்பை அகற்றி, அளவைக் குறைக்கலாம். இவர்கள் பால், நெய், வெண்ணெய், தயிர் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
ü  வேக வைத்த காய் கறிகள், பழங்கள், கீரை, கொழுப்பு நீக்கிய பால், இளநீர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2016 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




Thursday, October 29, 2015

உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க - How to Enlarge your Breast


 breast enlargement treatment clinic in chennai, tamil nadu, india


உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள்.

முதலில் உங்கள் மார்பகங்கள் பற்றிய பொது அறிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
  • ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும்.
  • ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும்.
  • ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும்.
  • இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும்.

உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:
இயற்கையான மூலிகை எண்ணைகள்: இயற்கையிலேயே கிடைக்கும் இந்த மூலிகைகளை அரைத்து  எண்ணையிலிட்டு காய்ச்சி உங்கள் மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். இந்த எண்ணையினால் பின்விளைவோ பக்க விளைவோ ஏற்படாது. மேலே சொன்ன ஹார்மோன்கள் இந்த மூலிகைகளில் நிறைந்து கிடக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை சாப்பிடவும் செய்யலாம்.

மூலிகைப் பட்டியல்:
  • மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் (diosgenin) டயாச்ஜெனின் என்ற ஹார்மோன் உள்ளது.
  • சோம்பு மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உள்ளது.
  • டண்டேலியன் (Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங் போன்றவையும் பயன் தரும்.
மார்பகத்துக்கான பம்ப்:
  • மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் சில மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்:
  • உங்கள் மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக காட்டும்.
ப்ளை அப்(Fly up)
  • ஒன்றிலிருந்து இரண்டு கிலோ எடை உள்ள டம்ப் பேல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு மூன்று முறை செய்யுங்கள்.

தண்டால்:
  • இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள் மார்பகத்தை பெரிதாகக் காட்டும்.

யோகாசனம்:
மார்பு விரிவடைய, வலுவடைய, பல யோகாசன நிலைகள் உள்ளன. அவற்றை கீழே பாருங்கள்.
  • புஜங்காசனம்
  • அர்த்த மத்யேந்திராசனம்
  • சூரிய நமஸ்காரம்
  • விருக்ஷாசனம்


வெளியே அணியக்கூடிய மற்ற பொருட்கள்:
  • முதலில் நீங்கள் உங்களுக்கு சரியான அளவு பிராவை வாங்க வேண்டும். நீங்கள் இப்போது அணியும் பிராவின் அடுத்த அளவு, அதற்கு முந்தைய அளவு என்று எல்லா சைஸ் பிராவையும் அணிந்து பார்த்து, பொறுமையாக தேர்ந்தெடுங்கள்.
  • இப்போது புஷ் அப் பிரா (Push up bra) என்பது பிரபலாமாகி வருகிறது. இதை அணிந்தால், உங்கள் முலைப் பிளவை (cleavage) பெரிதாகக் காட்டும்.
  • (Padded bras) பேட் வைத்த பிரா உங்கள் மார்பகத்தைப் பெரிதாகக் காட்டும்.

கமாண்டோ டேக் அவுட் (commando take out)
  • இவை 100% சிலிகான் (silicone) என்ற பொருளினால் செய்யப்படுகிறது. இதே பொருள்தான் மார்பக அறுவை சிகிச்சை முறையிலும் உபயோகப் படுத்துகிறார்கள். இது எந்த நிறமும் இல்லாதது, மெத் மெத்து என்று இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இவற்றை உங்கள் பிராவில் செருகிக் கொள்ள வேண்டியது தான்.மார்பு பெரிதாக தெரிய வேண்டும் என்றால் இவற்றை முலைகளுக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மார்பு மேல் நோக்கி இருக்க வேண்டும் என்றால், இவற்றை மார்பகதுக்குக் கீழே வையுங்கள். முலைப் பிளவை பெரிதாகக் காட்ட, மார்புகளின் பக்க வாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த செலவு, நிறைந்த பயன் அளிக்கக் கூடியது. எந்த விதமான உடைகளோடும் அணியலாம், பார்ப்பவருக்கு வித்தியாசமே தெரியாது.

மார்பைப் பெரிதாக்க அறுவை சிகிச்சை:
இந்த வகையான அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் (Breast augmentation surgery) என்று சொல்லுவார்கள். உடனடித் தீர்வு இது. உங்கள் மார்பகதிற்குள்ளே, சிலிகான் பைகளை வைத்து தைத்து விடுவார்கள். உங்கள் மார்பகம் அறுவை சிகிச்சை முடிந்த உடன் பெரிதாகக் காட்டும். இந்த அறுவை சிகிச்சைகள் இப்போது சென்னையிலேயே இரண்டு பெரிய மருத்துவமனைகளில் செய்கிறார்கள். உங்களுக்கு பண வசதி இருந்தால், இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அறுவை சிகிச்சை ஆலோசனை:
நீங்கள் அறுவை சிகிச்சை பெற விரும்பினால், முதலில் இந்த சிகிச்சை நிபுணரிடம் நீங்கள் ஆலோசனை பெற வேண்டும். அவர் உங்களுக்குடைய மார்பு எந்த அளவு, மற்றும் வடிவம் பெற வேண்டும் என்பது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அதற்குப் பிறகு, அறுவை சிகிச்சைக் காண நாளை குறித்து, அந்த நாளில் உங்களை திரும்ப வரச் சொல்லுவார்.
அறுவை சிகிச்சை அன்று, உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சையை முடிப்பார்கள், இதற்கு சில மணி நேரங்களே ஆகும். அதற்குப் பிறகு யார் துனையோடாவது நீங்கள் வீட்டுக்குப் போய் விடலாம். உங்களுடைய மார்புகள் (surgical bra) சர்ஜிகல் பிராவால் மூடப்பட்டிருக்கும், சில நாட்களுக்கு.

சிகிச்சைக்குப் பிறகு:
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மூன்று நாட்களில் நீங்கள் நடமாட ஆரம்பித்து விடலாம். உங்கள் தையல் ஒரு வாரத்தில் அகற்றப் படும். சப்போர்டிங் பிரா (supporting பிரா ) அணிந்து கொள்வீர்கள். உடலில் உள்ள வீக்கங்கள் 3-4 வாரங்களில் சரியாகி விடும். அதற்கு மேலும் வீக்கமோ, அல்லது வலியோ இருந்தால், அறுவை சிகிச்சையாளரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்

கவனிக்க 
மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சையினால் பல பின்விளைவுகள் ஏற்படலாம். எனவே கவணம் தேவை,


For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini – 30 - 99xxxxxxx0 – Oil  – 21st Oct, Sunday - Chennai ), You will receive Appointment details through SMS.




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்