"சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி; உங்களுக்கு ரத்தத்தில் ஷுகர் சேராமல் இருக்கும் வகையில் ஷுகர் ப்ரீ உணவு வகைகளை தயார் செய்கிறோம். தாராளமாக இனிப்புகளை சாப்பிடலாம்' என்று விளம்பரம் செய்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால், "ஷுகர் ப்ரீ' என்று அறிவிக்கும் எல்லா உணவுப்பொருட்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானது தானா என்றால் இல்லை என்று தான் அனுபவமுள்ள டாக்டர்கள் சொல்வர். அவர்களுக்கு அதில் உள்ள உண்மை என்ன என்று தெரியும்.
சர்க்கரை நோயாளிகள், மருந்து சாப்பிட்டு வந்தாலும், உணவில் உள்ள கட்டுப்பாடு தான் அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்; அதனால் பாதிப்பும் குறையும். ஆனால், சர்க்கரை நோயாளிகளை குழப்பும் அளவுக்கு "ஷுகர் ப்ரீ' உணவு பாக்கெட்கள் வந்து விட்டன. ஆரம்பத்தில் இருந்த அளவுக்கு அதற்கு பெரும் வரவேற்பு இல்லை என்றாலும், இன்னும் சிலர் இதை நம்பத்தான் செய்கின்றனர். சார்பிடால், மன்மிடால், லேக்டிடால் போன்ற ஷுகர் ஆல்கஹால்சை பயன்படுத்தி தான் ஷுகர் ப்ரீ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இது போல, ஆஸ்பர் டேம், சுகரலோஸ் துகள்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்லது தான் என்று கூறப்பட்டாலும், அதில் எதிர்மறையான விளைவுகள் இல்லாமல் இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த ஒரு அனுபவமுள்ள டாக்டரும் சொல்வது, எந்த ஒரு உணவும், 11 ல் இருந்து 20 கிராம் வரையிலான கார்போஹைட் ரேட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவு தான் நல்லது.
கொழுப்பு, கார்போஹைட்ரேட் உள்ள எந்த உணவையும் தவிர்த்தாலே சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர். அதனால், ஷுகர் ப்ரீ மட்டுமல்ல, எந்த ஒரு உணவையும் , டாக்டர் ஆலோசனைப்படியே சாப்பிட வேண்டும். அப்படியிருந் தால் தான் சர்க்கரை நோயாளி களுக்கு நல்லது