விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, May 31, 2011

விரதம் நல்லதா ??? கெட்டதா???


நல்லது தான்... ஆனால், கெட்டதும் கூட
பார்த்தால் நோஞ்சானாக இருப் பார்; கேட்டால்," நான் இன்னிக்கு விரதம்; பச்சை தண்ணிகூட குடிக்க மாட்டேன்' என்பார். நம்பிக்கை தேவை தான்; ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் அளவுக்கு, கண்மூடித்தனமாக விரதம் இருப்பது பெரிய விபரீதத்தில் கொண்டு விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
தனியாக உண்ணா நோம்பு இருப்பதாக சொல்பவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறி விட்டனர். ஒவ்வொருவரும், தினமுமே விரதம் தான் இருக்கிறோம் என்பதை. ஆம், இரவு தூங்கும் போது யாராவது சாப்பிடுகின்றனரா... இல்லையே? அதுவும் விரதம் தானே. அதுவே போதும் என்பது தான் டாக்டர்களின் கருத்து.

நல்லது தான்
உண்ணாமல் இருப்பது நல்லது தான்; இதோ கீழ் கண்ட வகையில் இருந்தால்...
  • குறைந்த பட்ச உண்ணா நோன்பு தான் உடலுக்கு நல்லது. அதுவும் டாக்டர்களின் ஆலோசனைப்படி செய்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்.
  • உடலில் உள்ள இன்சுலின் சுரப்பது சீராவது, கொழுப்பு சத்து குறைவது, எடை குறைவது ஆகியவை இதனால் ஏற்படும் நன்மை.
  • இதய நோய், மூட்டு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட சில வகை நோய்கள் தீர, மருந்துகளுடன் இப்படி சில சமயம் குறைந்தபட்ச நோன்பு இருக்க டாக்டர்களே யோசனை சொல்கின்றனர்.
  • மனஅழுத்தம், சோர்வு நீங்க குறைந்த பட்ச அளவில் வயிற்றை காயப்போடுவது நல்லது தான்.
  • உண்ணா நோன்பால், சில செல்கள் வளர்ச்சி அடையும்; பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்; அதனால், இளமையுடன் இருக்க முடியும்.

கெட்டது எப்போது?
  • சாப்பிடாமல் வயிற்றை காயப் போடுவதால் கெடுதலும் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில், எதையும் பொருட்படுத்தாமல் மாதத்தில் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பதும், தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதும் தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
  • உடலுக்கு தொடர்ந்து போக வேண்டிய சத்துக்கள், வைட்டமின்கள் மறுக்கப்படுகிறது. அதனால், மூளை உட்பட முக்கிய உறுப்புகள் செயல்பாடு பாதிக்கும்.
  • தண்ணீர் கூட குடிக்காமல் இருப் பதால், சிலருக்கு வயிற்றில் பிரச்னை உருவாகும். அதுவே, பெரிய கோளாறில் விட்டு விடும்.
  • கழிவுகளை அகற்றும் பணியை தண்ணீர் செய்கிறது. அது குடிக்காமல் இருந்தால், உடலில் கழிவுகள் சேர்ந்து விடும்.
  • பெண்கள் அடிக்கடி உண்ணாமல் நோன்பு இருப்பது, அவர்கள் உடலில் ரத்த சோகை ஏற்பட வழி வகுத்துவிடும்.
  • சர்க்கரை நோய் வரவும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

டாக்டரை கேளுங்கவிரதம் இருப்பதற்கெல்லாம் டாக்டரை கேட்பதா என்று நினைக்கலாம்; ஆனால், கண்டிப்பாக ஒருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் உரிய முறையில் ஆலோசனை வழங்குவார். நாள் முழுக்க உண்ணாமல் இருப்பதால், உடலில் உள்ள கழிவுகள் நீங்கி, கொழுப்பு சீராகிறது என்றாலும், அதை அடிக்கடி செய்யக்கூடாது.
ஒருவருக்கு எத்தனை மணி நேரம், சாப்பாடில்லாமல் உடல் தாங்கும் என்பதை டாக்டர் தான் சொல்ல முடியும்.
விரதம் இருந்தாலும், அடிக்கடி தண்ணீர் குடிப்பது முக்கியம். அப்போது தான் உடலில் உள்ள கழிவுகள் நொறுங்கி, வெளியேற வழி கிடைக்கும்; உடலில் சோர்வும் ஏற்படாது. விரதம் முடிந்ததும், உடனே "புல்' கட்டு கட்டக்கூடாது; ஜூஸ் குடித்து விட்டு, படிப்படியாக அளவை அதிகரித்து சாப்பிடவேண்டும்.


இப்படியும் ஆபத்து
  • குண்டாக இருப்பவர்கள், யாரோ சொல்வதை கேட்டு, சாப்பிடுவதை குறைத்துக் கொண்டாலோ, சாப்பிடாமல் விட்டாலோ உடல் எடை குறையும் என்று தவறான போக்கை கையாள்கின்றனர். கேட்டால், 
  • "டயட்'டில் இருக்கிறேன் என்பர். இது தான் மகா கெடுதல்.
  • சாப்பிடாமல் இருந்தால் கொழுப்பு குறையும் என்பது உண்மை. அதேசமயத்தில் தவறான போக்கால், கொழுப்பு தவிர, உடல் பலவீனம் அடைய வாய்ப்பு உண்டு. இந்த இழப்பால், கொழுப்பு அதிகமாகி, மாறான விளைவை தான் ஏற்படுத்தும்.
  • இப்படி நிலைமை ஏற்பட்டால், சாப்பிடாமல் இருக்கும் ஒருவர், மேலும் குண்டாகி விடும் ஆபத்தும் உண்டு.
பிரஷ் ஜூஸ் போதும்
  • ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்து. தண்ணீர் குடிப்பதுடன், பிரஷ் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது என்பது பலருக்கு தெரிந்தும், இன்னமும் பாட்டில் கூல்டிரிங்க்கை தான் குடிக்கின்றனர்.
  • நம் உடலுக்கு 13 வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள், ஆரஞ்சு உட்பட பல பழங்களில் உள்ளன. 
  • வீட்டில் தயாரிக்கப்படும் பழரசங்களில் தான் அதிக வைட்டமின் சத்துக்கள் உள்ளன. பழங்களை அழுகவிட்டு குப்பையில் போடுவதை விட, அவற்றை ரசமாக பிழிந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே, உடலில் எடை குறைந்து விடும்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்