“எம்பிபிஎஸ் படித்தவர்கள் மட்டுமே டாக்டர்கள் என்று போலீசார் தவறாக நினைக்கிறார்கள். இது தவறு” என்று ஹோமியோபதி டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். |
தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக போலீசார் சோதனை நடத்தி, போலி டாக்டர்களை கைது செய்து வருகிறார்கள். எம்பிபிஎஸ் தவிர சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி படித்து கிளினிக் நடத்தி வந்தவர்களையும், போலி டாக்டர்கள் என்று கூறி போலீசார் கைது செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ், “ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி படித்த டாக்டர்கள் யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள்” என்று உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் டாக்டர் சவுந்தரராஜன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் போலி மருத்துவர்களை அரசு கைது செய்து வருகிறது. இதில் பதிவு பெற்றவர்கள் மற்றும் பட்டம் பெற்ற ஹோமியோபதி டாக்டர்களையும், போலி மருத்துவர்கள் என்று கூறி போலீசார் இடையூறு செய்கிறார்கள். இதனால், தமிழகத்தில் சில ஹோமியோபதி டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்பிபிஎஸ் படித்தவர்கள் மட்டுமே டாக்டர்கள் என்று போலீசார் தவறாக நினைக்கிறார்கள். ஹோமியோபதி டாக்டர்களும் எம்பிபிஎஸ் படிப்புக்கு இணையாக ஐந்தரை ஆண்டு படித்து பட்டம் பெற்று, கிளினிக் நடத்த அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இப்படி அனுமதிக்கப்பட்ட ஒருவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் செல்வதே தவறாகும். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரின் உத்தரவுப்படி, ஹோமியோபதி டாக்டர்களை போலீசார் இனி தொந்தரவு செய்யக்கூடாது. இவ்வாறு டாக்டர் சவுந்தரராஜன் கூறினார். --- |
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)
Friday, October 7, 2011
ஹோமியோபதி மருத்துவர்கள் போலி டாக்டர்கள் அல்ல
Please Contact for Appointment
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
பிரபல பதிவுகள்
-
மூல நோய் மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் இரத்த நாள வீக்கமே மூல நோய் எனப்படுகிறது. இது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. 1-உ...
-
ஆர்த்ரைடிஸ் - மூட்டுவலி Arthritis – Joint Pain ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் Swelling ஆகும். ஆர்த்ர...
-
கேள்வி: இந்தக் கேள்வியை கேட்க ரொம்ப கூச்சமாக இருக்கிறது . இருந்தாலும் கேட்கின்றேன் . எனக்கு வயது 32 . நான் 13-14 ...
-
விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள் . கேள்வி: கர்ப்பம் தரிக்க மிக முக்கியமான விஷயம் என்ன டாக்டர் ? பதில்: கர்...
-
கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள் கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத...
-
யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது ? ¬ உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்ற...
-
வாந்தி, பித்தம் தீர :- எலுமிச்சம் பழச்சாற்றை 3 மில்லி அளவு சாப்பிடவும். தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :- கொத்தமல்...
-
கேள்வி :- என் வயது 20. என் பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என் னுடன் தான் படுத்து தூங்குவாள். சுடிதாரைத் தூக்கி அவளின் முதுகை தொ...
-
கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள் v காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பரந்து கிடக்கும் பாரத தேசமெங்கும் பரவிக்கிடப்பது ...
-
எளிய மருத்துவக் குறிப்புகள்... நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட , வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தல...