விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, December 23, 2011

தானியங்களின் மருத்துவ பயன்கள்


தானியங்களின் மருத்துவ பயன்கள்

பச்சரிசி :- இது பலத்தைத் தரும். பித்தத்தை தணிக்கும். வாதத்தை விருத்தி செய்யும். பத்தியத்திற்குதவாது.

புழுங்கலரிசி :- இது பாலர்முதல் முதியவர் வரை அனைவருக்கும் நோயாளிகளுக்கும் பொருத்தமான உணவாகும். பத்தியத்திற்காகும்.

கோதுமை :- இது பலம், சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். வாதத்தையும், பிரமேகத்தையும் நீக்கும். ஷயம் மது, மேகம் முதலிய நோயினருக்கு நல்ல உணவாகும்.

சோளம்:- தினவு, வீரணம், கரப்பான் முதலியன அதிகரிக்கும் நல்ல மருந்தும் கெடும் .

கேழ்வரகு:- இது வாதம் அல்லது பித்தவாதத்தை உண்டாக்கும். பலம் எற்படும். இது கபதேகிகளுக்கு சிறந்த உணவாகும்.

கம்பு:- இதனால் சொரி, சிரங்கு உண்டாகும். ஆனால் உடலுக்கு பலத்தைதரும். சரீரத்தின் வெப்பத்தைத்தணிக்கும் குளிர்ச்சி யென்பர்.

கடலை :- இது வயிற்றுவலி வயிற்றுப்புரம்,மந்தம், கிரகணி, மயக்கம், மூலவாயு முதலியவைகளை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும்.

உளுந்து :- இது பித்தாதிக்கம், எலும்புறுக்கி முதலியவைகளை நீக்கும். கபவாதம் இடுப்பிற்கு பலம். வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்.

துவரை :- இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும் உதவும்.

பச்சைப்பயறு:- இது பித்தத்தை நீக்கும், வாய்வை உண்டாக்கும் சீதளமென்பர்.

பட்டாணி :- இது நூரையீரலுக்கும், இருதயத்திற்கும் வலிவைத்தரும். ஆனால் வாய்வையும்,மந்தத்தையும், உண்டாக்கும்.

மொச்சை :- திரிதோஷணங்களை விருத்தி செய்யும். உஷ்ணத்தை தணிக்கும், மலத்தைப்பெருக்கும்.

பார்லியரிசி:- இது சிறுநீரைப்பெருக்கும், மந்தபேதியைக்கட்டும், பசியைத்தணிக்கும். சுரம் முதலிய நோயாளிகளுக்கு கஞ்சிக்கு உதவும்.







---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்