விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, December 23, 2011

கீரைகளின் மருத்துவ பயன்கள்



கீரைகளின் மருத்துவ பயன்கள்
சிறு கீரை :- நீரைப்பிரிக்கும், மருந்தையும் விஷத்தையும் முறிக்கும், சிறிது உஷ்ணத்தை உண்டாக்கும்.

அறு கீரை :- இதனால் வாதமும் கபமும் மட்டாகும், மலம் இளகும், வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்.

அரைக்கீரை: - இதனால் பித்தம் தணியும் , நீரை வரட்டும்.

அகத்திக் கீரை:- இதனால் பித்தம் தணியும் , மலமும் நீரும் போகும். மருந்தையும் விஷத்தையும் முறிக்குமென்க.

முருங்கைக் கீரை :- பித்தத்தைதணிக்கும். மலத்தை இளக்கும்.

புதினா :- இதனால் அரோசகம்,வாந்தி, பசியின்மை நீக்கும், ஜீரண சக்தியுண்டாகும்.

கருவேப்பிலை :- இதனால் அரோசகம், பேதி,சுரம், பித்தம், பசி மந்தம் இவைகள் போகும்.

கொத்தமல்லிகீரை :- இதனால் அரோசகம், பித்தாதிக்கம், போம், சுக்கிலம் பெருகும்.

துத்திக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், விரணத்தை ஆற்றும்.

சுக்கான்கீரை :- உஷ்ணத்தைதணிக்கும், ஜீரணசக்தியையும், இரத்தசக்தியையும் உண்டாக்கும்.

சிறுபசலைகீரை :- உஷ்ணத்தைதணிக்கும், கபத்தை விருத்திசெய்யும் புணர்ச்சி யிச்சையை உண்டாக்கும்.

புளிச்சகீரை :- பித்தம் தணியும் , வீரியவிருத்தியாம்.

சோகிக்கீரை :- வாய்வையும், உதிரச்சிக்கலையும் போக்கி, ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

மணலிக்கீரை :- இது வாத பித்த கப தோஷங்களை தணிப்பதுடன் கிருமிகளை மடியச்செய்யும் பத்தியத்திற்குதவும்.

புளியாரைக்கீரை :- இதனால் உஷ்ணமும், பித்தமும் சமனப்படும்

பொண்ணாங்காணிக்கீரை :- இதனால் உடலில் உஷ்ணம் தணியும்,கண்களுக்கு ஒலியும், உடலுக்கு பலமும் மேனியுமுண்டாகும்.

மணத்தக்காளிக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், வாய்ரணத்தை ஆற்றும். மலத்தை இளக்கும்,நீரைப்பிரிக்கும்.

காசினிக்கீரை :- இது இரத்தத்தை சுத்தி செய்வதுடன், இரத்த விரித்தியையும் உண்டாக்கும், மலத்தையும் நீரையும் பிரிக்கும்.

வெந்தயக்கீரை :- இது வயிற்றுவலி, பசிமந்தம், வாதகோபம், உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல் முதலிவைகளையும் போக்கும்.

முள்ளங்கிக்கீரை :- நீரைப்பெருக்கும், பசிதீபனத்தையும்,ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

முளைக்கீரை :- இவைகள் உஷ்ணத்தை தடுத்து நீரைப்பெருக்கும், சீதளமென்பர்.







---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்