'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' வள்ளலார் இராமலிங்கர் அவதரித்த தலம்
தலைநகர் | கடலூர் |
பரப்பு | 3,678 ச.கி.மீ. |
மக்கள்தொகை | 22,85,395 |
மக்கள் நெருக்கம் | 617 |
ஆண்கள் | 11,50,908 |
பெண்கள் | 11,34,487 |
ஆண்-பெண் | 986 |
எழுத்தறிவு விகிதம் | 71.01% |
இந்துக்கள் | 21,05,292 |
கிருத்தவர்கள் | 73,611 |
இஸ்லாமியர் | 1,02,608 |
புவியியல் அமைவு | |
அட்சரேகை | 15.050 -110.58 N |
தீர்க்க ரேகை | 780.38-800E |
இணையதளம்
www.cuddalore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcud@tn.nic.in
தொலைபேசி: 04142-230999
அமைவிடம்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவடங்களும்; வடக்கு மற்றும் மேற்கில் விழுப்புரம் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. புராணத்தில் இது ராம கேதாரத்தின் ஒரு பகுதியாக குறிப்படப்படுகிறது. ஆற்காடு எனும் பெயர் 'ஆறு காடு' (ஆறு ரிஷிகள் வாழ்ந்த இடம்) என்பதலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் இது தொண்டைநாடு என அழைக்கப்படுகிறது.
துவக்ககால தென்னாற்காடு மாவட்டத்தின் வரலாறு, 1801 இல் ஆற்காடு நவாப், கர்நாடக பகுதிகளை பிரிட்டீஷாருக்கு வழங்கியதில் இருந்து துவங்குகிறது. காப்டன் கிரஹாம் தென்னாற்காட்டின் முதல் ஆட்சித் தலைவர்.
தென்னாற்காடு மாவட்டம் 1993, செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு வல்லார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் எனும் இரு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென்னாற்காடு வள்ளரால் மாவட்டமே தற்போது கடலூர் மாவட்டம் எனப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: கெடிலம், பெண்ணார், எள்ளார், வீராணம், பெருமாள் ஏரி, வெல்லிங்கடன் ஏரி.
குறிப்பிடத்தக்க இடங்கள்
சிதம்பரம்: தென்னாட்டுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபை அமைந்துள்ள இடம்.
நெல்லிக்குப்பம்: மாவட்டத்தின் முக்கிய வணிக மையம். சர்க்கரை ஆலைகள் மிகுதியாக உள்ளன.
பிச்சாவரம்: 11,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்த கரபுன்னைக் காடுகள் நிறைந்த கழிமுகம். மிகச் சிறந்த சுற்றுலாத்தலம்.
![]() |
பிச்சாவரம் ஏரி |
நெய்வேலி: இந்தியாவிலேயே மிக அதிகமாக பழுப்பு நிலக்கரி (Coal mine in Neyveli)வெட்டியெடுக்கப்படும் நெய்வேலி, கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. முந்திரி பெருமளவில் விளைகிறது.
பரங்கிப் பேட்டை: போர்ச்சுகீசீயர் மற்றும் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குள்ளான இடம். போர்ச்சுகீசியர் காலத்தில் 'போர்ட்டோ நோவா' எனவும், ஆங்கிலேயர் வசம் வந்தபின் 'பரங்கிப் பேட்டை' எனவும் அழைக்கப்பட்டது.
கடலூர் துறைமுகம்: சரக்குப் படகுகள், கப்பல் நிறுத்துவதற்கு வசதியான தனிச் சிறப்புமிக்கத் துறைமுகம். சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியுடைய கப்பல்துறை மேடையின் நீளம் 200 மீட்டர்.
ஶ்ரீமுஷ்ணம்: சுயம்பு வடிவில் உள்ள எட்டுத் திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவ ராகசாமி கோயில் இங்குள்ளது. ரத வடிவிலான 'புருஷலீஷ்குத' மண்டபத்தில் போர்வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
இருப்பிடமும், சிறப்புகளும்:
o சென்னையிலிருந்து 183 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
o புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம். |
o கடலூர் ஆங்கிலேயர் காலத்தின் புகழ் பெற்ற துறைமுகம். |
o செம்பிளாஸ்ட் சான்மார் விமிடெட்டின் பாலி வினைல் குளோரைடு (PVC) தொழிற்சாலை 2009 செம்டம்பரில் துவங்கி வைக்கப்பட்டது. |
o பிரபல பாரி சாக்லேட்டுகள் இம்மமாவட்டதிலேயே தயாராகின்றன. |
o ராபர்ட் கிளைவ் தனது நிர்வாகச் செயல்பாடுகளை இம்மாவட்டத்திலிருந்தே துவங்கினார். |
o பண்ருட்டி, முந்திரி மற்றும் பலாப்பழங்களுக்கு சிறப்பு பெற்றது. |
o பஞ்சபூதத் தலங்களில் ஒன்றே சிதம்பரம். ஏனையவை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாணைக்காவல், காளஹஸ்தி |
o குறிப்பிடத்தக்கோர்: சைவ சமய அடியார்கள் திருநாவுக்கரசர்,சுந்தரர், பதினெண் சித்தர்களுள் ஒருவரான மெய்கண்டார்,வள்ளலார் இராமலிங்கர், தமிழ்க்கவி ஔவையார் மற்றும் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள். |
----