விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, March 20, 2012

அனுப்பிய Gmail -ஐ தடுத்த நிறுத்த மிக அற்புத வசதி!







வழக்கமாக நாம் பயன்படுத்தும் G-mail-ல் பல வசிதிகள் அடங்கியிருக்கிறது. இதில் பல வசதிகளை இன்னும் நாம் பயன்படுத்தாமலேயே இருப்போம். காரணம் அவற்றின் பயன்களைப் பற்றி நாம் முழுவதும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே.!


நிறைய வசதிகள் Gmail-ல் இருப்பின் இது ஒரு முக்கியமான பயன்பாடுமிக்க வசதியாக(Useful Option) இருக்கிறது. நாம் அவசரப்பட்டு அனுப்பிய மின்னஞ்சலை தடுத்து நிறுத்த இவ்வசதி பயன்படுகிறது.


ஒரு மின்னஞ்சலை நீங்கள் தட்டச்சிட்டு அனுப்ப Send பட்டனை அழுத்திவிட்டீர்களென்றால் அதைத் தடுக்க முடியுமா?


இந்தக் கேள்விக்கு ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜிமெயிலில் அதற்கான வசதி இருக்கிறது.


இவ்வசதியைப்பெற,


உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்துகொள்ளுங்கள்.
ஜிமெயில் பக்கத்தில் வலது மேற்மூலையில் Settings என்ற பட்டனை அழுத்தவும்.


அதில் Settings என்பதை கிளிக் செய்யவும்


Settings-ல் Labs என்பதை கிளிக் செய்யவும்.


பிறகு அந்தப் பக்கத்தின் கீழே வரவும்.


அங்கு Undo Send என்ற வசதி இருக்கும்.


இதை எளிதாக கண்டுபிடிக்க CTRL+F கொடுத்து Undo Send என்பதை கொடுத்து எளிதாக தேடிப்பெறவும்.


இப்போது அதில் Enable என்பதை தேர்ந்தெடுங்கள்.


பிறகு பக்கத்தின் இறுதியில் Save changes என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.


இனி நீங்கள் ஒவ்வொரு மின்னஞ்சலையும் அனுப்பும்போது இவ்வாறு ஒரு செய்தி கிடைக்கும்.


“Your message has been sent. Undo. View message”


இதில் Undo என்பதை உடனுக்குடன் (ஒரு சில வினாடிகளில்)கிளிக் செய்வதன் மூலம் தவறாகவோ அல்லது இன்னும் கூடுதல் தகவல்களை சேர்த்து அனுப்ப வேண்டி இருப்பின் அனுப்பிய மின்னஞ்சலை நீங்கள் தடுத்து நிறுத்த முடியும்.














---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்