பருவ காலங்கள் - Seasons
இந்தியாவில் வழக்கமாக ஓர் ஆண்டு என்பது ஆறு பருவங்கள் அடுத்தடுத்துத் தொடரும் கால வரம்பாகும்.
வெயில் காலம்(The summer): மே-ஜூன் காலத்தின் கடுமையான வெயில் காலம். இந்த பருவத்தில் வறண்ட நிலப் பரப்பிலிருந்து அனல் காற்று புழதி வாரிக் கிளப்புகிறது.
மழைக்காலம்(Monsoon): சுட்டெரிக்கும் வெயில் பூமியிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, பின் மழைக் காலத்தில் (வர்ஷ ருது) மழையைப் பொழிகிறது. இது ஜூலை - ஆகஸ்ட் காலத்தில் நிகழ்கிறது.
வசந்த காலம்(Spring): மழைக்காலம் முடிந்து வானம் தெளிவடைந்து இனிமையான சூழல் பரவும் வசந்த காலம். செப்டம்பர் - அக்டோபர் கால பருவம். இந்தியாவின் சில பகுதிகளில் அறுவடைப் பருவமும், திருவிழாக்களின் காலமும் இதுவேயாகும்.
பனிக்காலம்: இரவுகள் மிகவும் குளிந்திருப்பதும் அதிகாலை வேளைகள் பனி மூட்டம் கொண்டிருப்பதும் பனிக் காலம் ( ஹெமந்தத ருது). இது நவம்பர் - டிசம்பர் சார்ந்த பருவ காலம்.
பின்பனிக் காலம்: இந்த ஜனவரி - பிப்ரவரி பின்பனிக் காலத்தில் (சிசிர ருது) நிலப்பரப்பைப் பனித்திவலைகளும் உறைபனியும் மூடியிருக்கும்.
இளவேனில் காலம்(Spring time): குளிர்காலத்திற்குப் பின்னர் ஏற்படும் பிரகாசமான இளவேனில் பருவம். மார்ச்-ஏப்ரல் காலத்தில் இடம்பெறுகிறது. இந்தப் பருவத்தில் வாழ்க்கை தளக்குத் தானே புத்துயிர் ஊட்டிக்கொள்கிறது.
இவ்வாறு ஆறுவகைப்பிரிவுகள் இருநுதாலும், பரவலாக புழக்கத்தில் உள்ளது மழைக்காலம். இதமான குளிர்காலம், குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் என்னும் நான்கு பருவங்ளே.
மழைக்காலம்(Monsoon)
தென்மேற்குப் பருவக்காற்று அரபிக்கடல் பிரிவு; வங்களாள விரிகுடாப் பிரிவு எனும் இரு பிரிவுகளாக வடக்குநோக்கி முன்னேறுகிறது. அது மேலும் வடக்கு நோக்கிப் பரவாமல் இமயமலைப் பகுதி தடுத்து விடுகிறது. தென் மேற்கு அரபிக்கடல் பருவக காற்று தெற்கு நோக்கி வீசுகிறது. வழி மாறிய விரிகுடாப் பருவக்காற்று வடக்கு நோக்கி வீசுகிறது. தென் மேற்குப் பருவக்காற்று ஜூலைக்குள் நாடு முழுமையும் பரவிவிடுகிறது.தமிழகத்தையும், இமய மலையை ஒட்டிய பகுதிகளையும் தவிர்த்து ஏனைய அனைத்துப் பகுதிகளிலும், ஜூன் முதல் செம்படம்பர் வரையிலான காலத்தில் ஓர் ஆண்டு முழுக்கப் பெய்வதில் 75 சதவிகித மழையும் இக்காலகட்டத்தில் பெய்துவிடும். இது இந்தப் பகுதிகளுக்கான மழைக்காலம். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் இப் பருவத்தின் போது சேதம் விளைவிக்கும் வெள்ளிப் பெருக்கு ஏற்படும்.
இதமான குளிர்காலம்(Mild Winter)
தென் மேற்குப் பருவக்காற்று, தென் கிழக்குப் பகுதியை முடித்துவிட்டு செம்படம்பரில் வட மேற்குப் பகுதியிலிருந்து வீசத் தொடங்குகிறது. பருவக்காற்று பின்னடையும் காலமான அக்டோபர் - நவம்பர் மாதங்கள் இந்த இடைநிலைக் காலமாகும். இந்தக் காலப் பகுதியில் காற்றழுத்தமும், காற்று வீசும் முறையும் படிப்படியாக மாற்றம் கொள்கின்றன.இந்தக் காலகட்டத்தில் வங்காள விரிகுடாவின் தென்பகுதி அல்லது மையப்பகுதியில் வெப்பமண்டலம் சார்ந்த புயல் உருவாகி, கண்மையம ்கொண்டு பெரும் புயலாக தீவிரமடைகிறது. அவற்றுள் பெரும்பாலான புயல்கள் மேற்காகவும், வட மேற்காகவும் நகர்ந்து தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா கடற்கரைகளைத் தாக்குகின்றன. அவற்றுள் சில வடக்காக அல்லது வட கிழக்காகத் திசை திரும்பி, வங்காளத்தின் அல்லது வங்க தேசத்தின் கடற்கரைகளைத் தாக்குகின்றன. சில புயல்கள் தென்னிந்தியாவைக் கடந்து அரபிக்கடலைச் சென்றடையும். சேதம் விளைவிக்கக்கூடிய இந்த்ப புயல்கள் நிலச்சரிவுகளையும் ஏற்படுத்துகின்றன. பருவக்காற்று பின்னடையும ்காலம்தான் தமிழ்நாட்டின ்முக்கியமான மழைக்காலம்.
குளிர்காலம்(Winter)
டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான இக் காலகட்டம் ஆண்டின் மிகக் குளிர்ச்சியான காலப் பகுதி. இக் காலத்தில் வானிலை பொதுவாக தெளிவாக இருக்கும். அலைக்கழிப்பில்லாத இந்தப் பருவம், மேற்குப் பருவக்காற்று வட இந்தியாவைக் கடக்க நேரும்போது சலனமடைகிறது.தென் பகுதியை பொறுத்த வரையிலும் அசாதாரண வெப்ப மண்டலப் புயல் காற்று வங்காள விரிகுடா அல்லது இந்தியப் பெருங்கடலில் உருவாகித் தென்னிந்தியாவின் கடைக் கோடியைத் தாக்குகிறது. இது பெரும்பாலும் டிசம்பரில் நிகழ்கிறது.
கோடைக்காலம்(Summer time)
மார்ச் முதல் மே வரையிலான இடை நிலைக் காலத்தில் நாட்டின் உட்பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயரும் பருவம்தான் இந்தக் கோடைக்காலம். மே - ஜூன் மாதங்களில் இந்த வெப்பநிலை உச்சத்தை எட்டுகிறது. இந்தப் பருவத்தில் தென்னிந்தியா நீங்கலான பகுதிகளில் அனல் காற்று வீசும்; சாதாரண வெப்ப நிலையைவிட 50 செல்சியஸ் முதல் 100 செல்சியஸ் வரையிலும் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். இந்தியாவின் மேற்குப்பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் பரவலாகப் புழுதிப் படலம் நாட்கணக்கில் தொடர்ந்து வீசிக் கண்ணை மறைக்கும். இந்தப் புழுதிக் காற்றுக்கு லூ (loo) என்று பெயர்.
பொது வானிலை(General weather)
இந்தியா வானிலையில் பெருமளவிலான வேறுபாடுகள் கொண்டமைந்த நிலப்பகுதி. இமயமலைப் பகுதி பனிக்கட்டிகளும் பனியாறுகளும் நிறைந்திருக்கிறது. பனிப்புயல்களும், பனிச்சூறாவளிகளும் பனிக்காலங்களில் அங்கு சர்வ சாதாரணம். அங்குள்ள லடாக் பகுதியில் அப் பருவத்தில் - 450அளவுக்கு வெப்ப நிலை தாழ்கிறது.
மணற்குன்றுகள்(Dunes) இடம் பெயர்வதும், மணற் புயல்கள் வீசுவதும் ராஜஸ்தான் பகுதியில் பரவலாக எங்கும் காணப்படுவதாகும்.
மேகாலயாவில் உள்ள ஜெயந்தியா மற்றும் காசி மலைச் சரிவுகளில் (காற்று வீச்சுத் திசைகளில்) உலகிலேயே அதிக அளவிலான மழை பொழிகிறது. (ஓர் ஆண்டுக்கான சராசரி மழை அளவு சிரபுஞ்சியில் 1,102 செ.மீ; மாசின்ராமில் 1,221 செ.மீ.)